“பொலீசாரினதும் அரச கட்சியினதும் அராஜகத்தை அனுமதிக்க முடியாது!”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்…இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது…இத் தாக்குதலை ஜனநாயகத்தையும் சட்ட திட்டங்களையும் மதிக்கின்ற அரசியல் இயக்கமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்கமாட்டாது.
மேலும்Year: 2022
தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.
கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும், தமிழீழமே தீர்வு எனவும் முக்கிய அரசியல் மையங்களில் வலியுறுத்தியபடி 7 நாடுகளை கடந்து ஐ.நா முன்றலை 1500Km பயணித்து இன்று 06/03/2022 எழுச்சிகரமாக வந்தடைந்தது.
மேலும்18ம் நாளாக (05/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும்அறவழிப்போராட்டம்.
சுவிசு பயேர்ன் , மாநகரசபை முன்றலில் இருந்து எழுச்சி கரமாக மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்தொடர்ந்தது. சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலகசுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு என கடும் மலை ஏற்றத்தின் மத்தியிலும் நெடுந்தூரம்பயணித்து லெளசாண் மாநகரத்தினை வந்தடைந்தது. மாநகர முதல்வரிடம் மனு ஒப்படைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. நாளை மீண்டும் லெள்சான் மாநகரத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் அவை (ஈகைப்பேரொளிமுருகதாசன் திடல்) முன்றலினை நோக்கி தொடர்கின்றது.
மேலும்வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி- சுவிஸ் 13.03.2022
இவ் விளையாட்டுப் போட்டிகளிற்கு அனைத்து விளையாட்டுக் கழகங்களையும், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
மேலும்17ம் நாளாக (04/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி அறவழிப்போராட்டம் தொடர்கிறது.
சிறிலங்கா பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன, கொத்துக்குண்டுகளாலும், பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்தவர்களை படுகொலை செய்தும், வயது பால் வேறுபாடுகளின்றி திட்டமிட்டமுறையில் உணவு ,மருந்துகள் மறுத்த நிலையிலும் இனப்படுகொலை செய்து அதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் பல கபட நாடகங்களையாடி வருகின்றனர்.
மேலும்வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி- சுவிஸ்
இவ் விளையாட்டுப் போட்டிகளிற்கு அனைத்து விளையாட்டுக் கழகங்களையும், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றோம். நன்றி,விளையாட்டுத்துறைசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
மேலும்தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி சுவிசு நாட்டில் தொடர்ந்து பயணிக்கும் அறவழிப்போராட்டம்.
மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டமானது கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்து நெதர்லாந்து , பெல்சியம், லுக்சாம்பூர்க் , யேர்மனி, பிரான்சு நாடுகள் ஊடாக சுவிசு நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.
மேலும்தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது.
நேற்று (02/03/2022) பிரான்சு நாட்டில் தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் முலூசு, சான்லூயி மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டது. நடைபெற்ற சந்திப்புக்களில் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே நிரந்தர தீர்வு எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு பிரான்சு வெளிநாட்டு அமைச்சிடம் தாம் அழுத்தம் தெரிவிப்பதாக உறுதி தரப்பட்டு அதற்கான முன்னெடுப்புக்களும் செய்யப்பட்டவை குறிப்பிடத்தக்கது.
மேலும்யாழ், ஆஸ்பத்திரி வீதியின் அகலிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியின் அகலிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று யாழ்.பொதுச நூலகத்தில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
மேலும்யாழ்,பல்கலைக்கழக 35 வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 35 வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வருகின்ற 3,4,5/03/2022 ஆகிய திகதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை திருநெல்வேலி சந்தியிலிருந்து ஆடியபாதம் வீதி புகையிரதக்கடவை சந்தி மற்றும் பரமேஸ்வரா சந்தியிலிருந்து இராமநாதன் வீதி கலட்டி சந்திவரையும் ஒரு வழிப்பாதையாக மாற்றுவதுடன் அவ் வீதி வழியாக பயணிக்க இருப்போர் குறித்த நேரத்தில் பொருத்தமான மாற்று வழியை தெரிவு செய்யுமாறும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் இணைந்து கேட்டுக் கொள்கின்றனர்.
மேலும்