சுவிஸ் தொலைக்காட்சியில் யேர்மன் தமிழ் இலக்கியவாதியின் சிறப்புச் செவ்வி

0 0
Read Time:4 Minute, 28 Second

திரு. செந்தூரன் வரதராஜா ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட யேர்மன் எழுத்தாளர் ஆவார். இவர் தத்துவம், இறையியல் மற்றும் பண்பாட்டு விஞ்ஞானத்தினை யேர்மன் பிலிப்ஸ் மக்டெபூர்க் பல்கலைக்கழகத்திலும், பெர்லின் கொம்பொல்ட் பல்கலைக்கழகத்திலும் இலண்டன் கிங்கஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.   

2014ம் ஆண்டு 3Sat தொலைக்காட்சியின் யேர்மன் இலக்கியவிருதினை படைப்புக்களை வெளியிட முன்னரே பெற்ற இலக்கியவாதி ஆவார். யேர்மனியின் பல் முன்னணி இலக்கிய விருதுகைளயும் தனதாக்கி உள்ள படைப்பாளி இவர் ஆவார்.   

சுவிற்சர்லாந்து தேசிய தொலைக்காட்சியில் (SRF) விண்மீன் காலம் எனும் நிகழ்வில் நேர்காணப்பட்டபோது இவரிடம் நிகழ்வுத் தொகுப்பாளர் நாங்கள் கடந்த நாட்களாக ஊடகங்களில் இலங்கையில் கிழமைக்கணக்காக, மாதக் கணக்காக நடைபெறும் எதிர்ப்புப்போராட்டத்தின் பயன் பிரதமர் பதவி விலகி உள்ளார்,  மிகு இடரான நிலையற்ற பொருளாதரச் சூழலில் நாடு திவால் ஆகும் நிலையில் உள்ளது, இதனைக் கேட்கையில் உங்களுக்குள் என்ன உணர் எழுகின்றது? என வினாவினார். 

இதற்கு திரு. செந்தூரன் அவர்கள் ஈழத்தமிழர்களின் உள்ளத்து நிலைப்பாட்டினை தமிழனாக இவ்வாறு பதில் அளித்துள்ளார்:  

நான் உண்மையுடன் நேர்மையாகப் பதில் அளித்தால் நான் எதனையும் இதில் உணரவில்லை. நான் எவ்வகை உணர்வுகளுக்கும் ஆட்படவில்லை அந்த நாட்டுடனும் எனக்கு எவ்வித உணர்வுப்பிணைப்பும் இல்லை. என்னுடைய உணர்வுரீதியான தொடர்பினையும் பிணைப்பினையும், உயிர்வாழும் உரிமையினையும் நாம் தமிழ்மக்களுடன் இணைந்து பகிர்கின்றேன் உணர்கின்றேன். இன்று வீதியில் இறங்கி வெதும்பி (பாண்), எரிபொருள் விலை உயிர்விற்கு எதிராக போராடுபவர்கள், தம்மீது தாம் கொண்ட அக்கறையால் போராடுகின்றார்கள். ஆனால் 2009ல் தற்போது ஆட்சியில் உள்ள மனிதார்களால் மிகு வேகமான காட்டுமிராண்டித் தனத்துடன் தமிழின அழிப்பு நடாத்தி முடிக்கப்பட்டபோது இம் மனிதர்களும் எந்த வீதியில் இறங்கிப் போராடவில்லை. இது என்னைத் திகைப்படைச் செய்கின்றது.   

கிறித்தவனாக அனைத்து மனிதர்களையும் நேசிக்க வேண்டும் என்பது கடமை ஆகும். ஆனால் உலகில் மனிதத்தை நேசிப்பது கடினமாகும்.   

கட்டளைகளில் கடினமானது தனது எதிரியையும் நேசிக்க வேண்டும் என்பதாகும்.   

ஒடுக்கப்படும் மனிதர்களுக்கு, பல்வேறு வழிகளில் ஒழுக்குமுறைக்கு ஆளானவர்களக்கு, இரட்டிப்பு கடமை உண்டு. நாம் அடக்கு முறை செய்யும் அமைப்புக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் அதன் பொறிமுறைகளில் இருந்து மட்டுமல்லாது எம்மை அடைக்கு செய்யும் மனிதர்களிடமிருந்தும் எம்மை விடுவித்துக் கொள்வதுடன், அடக்குமுறையாளரையும் அடுக்குமுறை செய்யும் உணர்வில் இருந்து விடுவிக்க வேண்டி உள்ளது. . .   

இளம் இலக்கியவாதியின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம், வாழி வாழி!  

தொகுப்பு: சிவமகிழி  

Sternstunde Philosophie – Senthuran Varatharajah – Über Liebe, Gott und den Tod – Play SRF

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment