தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி சுவிசு நாட்டில் தொடர்ந்து பயணிக்கும் அறவழிப்போராட்டம்.

மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டமானது கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்து நெதர்லாந்து , பெல்சியம், லுக்சாம்பூர்க் , யேர்மனி, பிரான்சு நாடுகள் ஊடாக சுவிசு நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

மேலும்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது.

நேற்று (02/03/2022) பிரான்சு நாட்டில் தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் முலூசு, சான்லூயி மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டது. நடைபெற்ற சந்திப்புக்களில் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே நிரந்தர தீர்வு எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு பிரான்சு வெளிநாட்டு அமைச்சிடம் தாம் அழுத்தம் தெரிவிப்பதாக உறுதி தரப்பட்டு அதற்கான முன்னெடுப்புக்களும் செய்யப்பட்டவை குறிப்பிடத்தக்கது.

மேலும்

யாழ், ஆஸ்பத்திரி வீதியின் அகலிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியின் அகலிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று யாழ்.பொதுச நூலகத்தில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

மேலும்

யாழ்,பல்கலைக்கழக 35 வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 35 வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வருகின்ற 3,4,5/03/2022 ஆகிய திகதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை திருநெல்வேலி சந்தியிலிருந்து ஆடியபாதம் வீதி புகையிரதக்கடவை சந்தி மற்றும் பரமேஸ்வரா சந்தியிலிருந்து இராமநாதன் வீதி கலட்டி சந்திவரையும் ஒரு வழிப்பாதையாக மாற்றுவதுடன் அவ் வீதி வழியாக பயணிக்க இருப்போர் குறித்த நேரத்தில் பொருத்தமான மாற்று வழியை தெரிவு செய்யுமாறும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் இணைந்து கேட்டுக் கொள்கின்றனர்.

மேலும்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 15ம் நாளாக (01/03/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.

(01/03/2022) Benfeld, France மாநகரசபையின் முன்றலில் இருந்து தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டம் Selestat , Issenheim மாநகரசபைகளில் சந்தித்து மனுக்கொடுத்து தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே நிரந்தர தீர்வு என வலியுறுத்தப்பட்டது. மேடுகளில் தொலை தூரம் கடந்து வந்து சந்திப்பிற்கு திட்டமிட்ட நேரத்தில் சமூகமளிக்கமுடியாத நிலைஏற்பட்ட போதும் மாநகர சபை முதல்வர், உதவி முதவல்வர்கள் மேலும் உறுப்பினர்கள் காத்திருந்து மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்று கலந்துரையாடினர்.

மேலும்

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக
நடைபெற்ற கரோக்கே ‘ கானக்குயில் 2022’

தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும் சூரிச் மாநிலத்தில் இனியொரு விதி செய்வோம் நிகழ்வில் ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடல் போட்டியானது 26.02.2022 சனி அன்று சூரிச் மாநிலத்தில் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்