நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்திஅவர்களின் 12 ஆண்டு நினைவு நாள்

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.

மேலும்

பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.

3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து புருஸ்ஸல்ஸ் மாநகரை இன்று 10.02.2021 வந்தடைந்தது.

மேலும்

சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரியவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தி.

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை கோட்டபாஜ ராஜபக்சவின் ஆட்சிக்கு பின் மிக மோசமடைந்துள்ளதாகவும் அவரின் அரசில் போர்குற்றங்களில் அங்கம் வகித்த படையினரே உயர்நிலை பதவிகள் வகிப்பதனாலும் நீதி வழங்குதல்,

மேலும்

சுமந்திரன் நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையின் மூலம் P2P போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு துரோகமிழைத்துள்ளார்- கஜேந்திரகுமார்..!!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

மேலும்

மேஜர் சிவா நீண்ட கால கடல் அனுபவம் உள்ள வீரன்.

1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்துதொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான்.

மேலும்

அறவழிப் போராட்ட உணர்வாளர்களுக்கு, புலம்பெயர் தேசத்திலிருந்து ஒரு உரிமை மடல்…

மதிப்புடையீர்,அன்புக்கும், மதிப்பிற்கும், வணக்கத்திற்குமுரிய திரு. வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சர்வமத குருமார்கள் யாவரினதும் திருவடிகள் பணிந்து…

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி 22 வது தடவையாக ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று 08.02.2021 ஆரம்பமானது.

எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் அவையின் 27.01.2021  பரிந்துரையின்படி சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனும் தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் 08.02.2021 அன்று நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்றலில் இருந்து கடும் பனிப்பொழிவும் குளிர்காற்றின் மத்தியிலும் இயற்கையின் பெரும் சவாலோடு  மனிதநேய ஈருருளிப்பயணம் ஆரம்பமானது. 

மேலும்

எழுச்சியாக நிறைவுபெற்றது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப்பேரணி, இனிதே நிறைவடைந்தது.

மேலும்

சுவிஸ்சில் மாபெரும் வாகனப்பேரணியை தொடங்கியுள்ளனர்.

தாயகத்தில் பல தடைகளைக் கடந்து தன்னெழுச்சியான பேரெழுச்சியுடன் தொடரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை சுவிஸ் மண்ணிலிருந்து வழங்குவதற்கு Bern, Geneva, Zürich ஆகிய மாநிலங்களின் பிரதான வீதிகளினூடாக வாகனப்பேரணியை தொடங்கியுள்ளனர்.

மேலும்