உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில் 10.09.2007 அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல் (1500NM ) மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில்
மேலும்Year: 2021
ஜெனிவாவை அண்மித்தது தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான பயணம். பத்தாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,
அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 10/09/2021 வெள்ளிக்கிழமை காலை Doucier நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Villards-d’Héria, Lavancia-Epercy, Oyonnax, Échallon, Valserhône , Eloise, Dingy-en-Vuache, Viry, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Viry நகரசபையுடன் பத்தாவது நாள் நிறைவடைந்தது.
மேலும்காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை, வவுனியாவில் புத்திர சோகத்தோடு தமிழ் இனத்தை விட்டுப் பிரிந்தார்!
வவுனியா மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை (பிறப்பு: 1948.12.04) அவர்கள், தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே புத்திர சோகத்தோடு 2021.09.10 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் எய்தினார்.
மேலும்8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது.
09/09/2021 காலை பசுத்தோன் , பெல்சியம் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் 580 Km கடந்து லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது. இன்றைய பயணத்தில் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வராக அங்கம் வகிக்கும் யேசி அரேன்சு அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனையும் தமிழர்களுடைய வரலாற்று பூர்வீகம நிலம் தமிழீழமே என்றும் எமக்கான நிரந்த்ர தீர்வாக தமிழீழத் தேசத்தின் சுதந்திரமே அமையும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும்இலங்கை இராணுத்தினர் மீதான கண்ணிவெடித்தாக்குதல்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடக்க காலகட்டத்தில் ஆங்காங்கே இலங்கை இராணுவத்தினர்மீதான சிறுசிறு பதுங்கித்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர்.பெரும்பலும் மக்களைப்பாதுகாக்கவும்,இராணுவத்தினரின் கெடுபிடிகளைக் கட்டுப்படுத்தவும்வேண்டி இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனலாம். விடுதலைப்புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் பலரும் பல்வேறு வகையில் தம்மாலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி விடுதலைக்கு வலுச்சேர்த்த வரலாறுகளும் பல உண்டு.
மேலும்பிரெஞ்சு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 09/09/2021 இன்று வியாழக்கிழமை காலை Morre நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Mamirolle, Étalan, Premiers-Sapins, Pontarlier, Bulle, Frasne, Équevillon, Champagnole, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Champagnole, நகரசபையுடன் ஒன்பதாவது நாள் நிறைவடைந்தது.
மேலும்தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் எட்டாவது நாளாக பயணித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 08/09/2021 இன்று புதன்கிழமை காலை Belfort நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Danjoutin, Arbouans, Villars sous Écot, Voillans, Autechaux, Pouligney-Lusans, Braillans, École-Valentin, Besançon, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Besançon நகரசபையுடன் எட்டாவது நாள் நிறைவடைந்தது.
மேலும்7ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர்.
08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு , பெல்சியம் மாநகரசபையில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து 520Km தொலைவு கடந்து பசுத்தொன் மாநகரசபை முதல்வராகவும் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் அங்கம் வகிப்பவருமான மதிப்பிற்குரிய புனுவா லுட்சன் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை தான் சார்ந்த ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் , மாநகரசபையிலும் வலியுறுத்துவதாக உறுதிமொழி தந்தார். அத்தோடு ஊடகச் செய்தியாகவும் தமிழர்களின் அறவழிப்போராட்டத்தினை வெளிக்கொணர முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும்6ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் …
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 07/09/2021 தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி வாவ்ர் நாமூர் மற்றும் வன்சு மாநகர சபையில் தமிழர்களுடைய கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.
மேலும்பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த நீதிக்கான பயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்தை கடந்து ஐ.நா நோக்கி செல்கிறது.
சிறிலங்கா அரசை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் ஏழாவது நாளாக ஐ.நா நோக்கி தொடர்ந்து பயணிக்கும் நீதிக்கான பயணம் தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 07/09/2021 இன்று செவ்வாய்க்கிழமை காலை Kintzheim நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Ostheim, Ostwald, Colmar Wettolsheim, Eguisheim, Rouffach, Issenheim, Staffelfelden, Mulhouse, Diefmatten, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.
மேலும்