பிரான்சில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு!

திரூவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2ஆம் லெப்.மாலதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம் வீரகாவியமான மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவிரி சூர்சன் பகுதியில் வரும் 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும்

மரணத்தின்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நாட்டுப்பற்றாளர் பூரணலட்சுமி

“ரகு இல்லையெண்டதால வாறதை நிப்பாட்டியிடாதீங்க; எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல் விட்டிடாதீங்க” – வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது தாயார் பூரணலட்சுமி அழுகையினோடே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது.

மேலும்

செஞ்சோலை சிறுவர் இல்லம் 1991 ஐப்பசி 22ம்நாள் ஆரம்பிக்கப்பட்ட 30ஆம் ஆண்டு.

செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் மலர்ச்சோலைதான். ஏனெனில் சின்னப்பூக்கள் பலவற்றின் பெரிய வீடு அது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்கள் வாழும் இல்லம்.

மேலும்

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான 21கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்!

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

மேலும்

மேஜர் சிவா நீண்ட கால கடல் அனுபவம் உள்ள வீரன்.

1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்துதொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான்.

மேலும்

பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட தாயகம் நோக்கிய நிழற்படக் கண்காட்சி!

பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட தாயகம் நோக்கிய நிழற்படக்கண்காட்சியும், தாயகம் பற்றிய வளரும் இளையவர்களுக் கான சந்திப்பும் கடந்த17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கொலம்பஸ் என்னும் நகரத்தில் ESPACE COLBERT மண்டபத்தில் நிழற்பட, வரைபட, ஆவண சேகரிப்பு கண்காட்சி நடைபெற்றது.

மேலும்

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்) 26ம் ஆண்டு வீரவணக்க நாள்

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்)செல்லத்துரை பாலசுப்பிரமணியம்.வீரச்சாவு 18.10.19951990 ம் ஆண்டு முற்பகுதியில் அமைப்பில் இணைந்து அப்துல்லா முதலாவது பயிற்சிப்பாசறையில் அடிப்படைப் பயிற்சியை முடித்து பின் பாபுவில் சிறப்புப் பயிற்சி பெற்று .அதன் பின் ஆனையிறவுக் காவலரனில் நின்றார் அங்கு இவரது திறமையான செயற்ப்பாட்டால் ஆனையிறவின் முன்னனிக் காவலரனான குட்மன் காவலரனுக்குப் பொறுப்பாக நியமிக்கப்படுகிறாா்.

மேலும்

பிரான்சில் இரு தினங்கள் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு கடந்த (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியிலும் இன்று 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தன.

மேலும்