லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்) 26ம் ஆண்டு வீரவணக்க நாள்

0 0
Read Time:6 Minute, 6 Second

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்)செல்லத்துரை பாலசுப்பிரமணியம்.வீரச்சாவு 18.10.1995
1990 ம் ஆண்டு முற்பகுதியில் அமைப்பில் இணைந்து அப்துல்லா முதலாவது பயிற்சிப்பாசறையில் அடிப்படைப் பயிற்சியை முடித்து பின் பாபுவில் சிறப்புப் பயிற்சி பெற்று .அதன் பின் ஆனையிறவுக் காவலரனில் நின்றார் அங்கு இவரது திறமையான செயற்ப்பாட்டால் ஆனையிறவின் முன்னனிக் காவலரனான குட்மன் காவலரனுக்குப் பொறுப்பாக நியமிக்கப்படுகிறாா்.

குட்மன் காவலரன் பொறுப்பேற்றவுடன்  அங்குள்ள போராளிகளுக்கு பயிற்சிகள் வழங்கி போராளிகளை தயாா் நிலையில் வைத்திருந்ததோடு ஆனையிறவுக்கான வேவு நடவடிக்கையிலும் ஈடுபடுத்தியதோடு ஆகாய கடல் வெளிச்சமரிலும் தனது முழுப்பங்களிப்பையும் செலுத்தினாா்.அதன் பின் இவரது திறமையான செயற்ப்பாட்டால் 1992ம் ஆண்டு தென்மராட்சி கோட்ட துணைப்பொறுப்பாளராக லெப்.கேணல் குணா அண்ணையால் நியமிக்கபட்டு  அணைத்துச் செயற்பாட்டிலும் தனது முழுப்பங்களிப்பைச்செலுத்தினாா்.பூநகரிச்சமருக்கான பயிற்ச்சிக்காகஅணிகள் பிரிக்கப்பட்டு மணலாறு சென்றார் அங்கு குணாஅண்ணை பானு அண்ணையிடம் இவரை அறிமுகப்படுத்தி  இவரது திறமையான செயற்பாடுகள்பற்றி கூறியிருந்தார் . அதற்கமைய (லெப் கேணல் குணா அவர்கள் 11.11.1993 அன்று பூநகரிச் சமரில் முதலாவதாக தமிழீழ மண்ணை   முத்தமிடுகிறார்.) பூநகரிச்  சமர் முடிவடைந்ததன் பின்னர் 1994 ம் ஆண்டு தலைவரின் சிந்தனைக்கு அமைய மூத்த தளபதி பானு அவர்களால் பசீலன் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது இவரும் உள்வாங்கப்பட்டார் .அங்கு முகாம் பொறுப்பாளனாக விசேடவேவு அணியின் இரண்டாவது பொறுப்பாளனாக பானு அண்ணைக்கு உதவியாக சகல வேலைத் திட்டத்திலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருந்தார்.பல்வேறு சண்டைக்களங்களில் அணிகளை செவ்வனவே வழிநாடாத்திய இத்தளபதி 18.10.1995 அன்று சூரியக்கதிருக்கு எதிரான நடவடிக்கையில் தீரத்துடன் போராடி வீரச்சாவடைகிறார்.

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்
செல்லத்துரை பாலசுப்பிரமணியம்.
வீரச்சாவு 18.10.1995

எழுத்துருவாக்கம்…சு.குணா.

யாழ். மாவட்டம் வலிகாமம் பகுதி நோக்கி 18.10.1995 அன்று “சூரியக்கதிர் 01” இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நாவண்ணன் உட்பட ஏனைய (20) மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் .

லெப்.கேணல் நாவண்ணன் / சங்கர் (செல்லத்துரை பாலசுப்பிரமணியம் – அல்லிப்பளை, யாழ்ப்பாணம்)
மேஜர் அருட்செல்வன் / லொயிற் (ஞானப்பிரகாசம் அன்ரனி ஜெயசீலன் – துன்னாலை, யாழ்ப்பாணம்)
மேஜர் பிரசாந்தன் (கனகரட்ணம் ஆறுமுகதாசன் – பள்ளிக்குடியிருப்பு, திருகோணமலை)
கப்டன் பிருந்தா (கனகசபை பண்புக்கனி – முள்ளியவளை, முல்லைத்தீவு)
கப்டன் செம்மலையான் (சுப்பிரமணியம் ரமணிகரன் – செம்மலை, முல்லைத்தீவு)
கப்டன் கீரன் (சிவபாலசிங்கம் சசிகுமார் – யோகபுரம், முல்லைத்தீவு)
கப்டன் சங்கீதன் (சதாசிவம் நந்தகுமார் – திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் நாவலன் / துட்டகைமுனு (சுப்பிரமணியம் மகாதேவன் – பொன்னாலை, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கோணேஸ்வரன் (ஆறுமுகம் நாகநாதன் – கற்சிலைமடு, முல்லைத்தீவு)
வீரவேங்கை சுடரொளி / றீகமாறன் (சீனித்தம்பி கருணாகரன் – கிரான், மட்டக்களப்பு)
வீரவேங்கை பண்டிதன் நீலகண்டன் (கந்தப்பு விஜயகுமார் – பனிச்சங்கேணி, மட்டக்களப்பு)
வீரவேங்கை கங்கைஅமரன் (ஆறுமுகம் டேவிற்சன் – துணுக்காய், முல்லைத்தீவு)
வீரவேங்கை யாழரசன் (பசில்அன்ரன் ரெறன்ஸ் றொசான் – வேலணை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஊரப்பன் (பிள்ளையார் காந்தரூபன் – கிளாலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பவளராணி (கிருஸ்ணபிள்ளை ஜெயகௌரி – உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மலர்விழி (மனுவேற்பிள்ளை பிரியதர்சினி – ஸ்கந்தபுரம், கிளிநொச்சி)
வீரவேங்கை செந்தூரன் (நடராசா விஜயகுமார் – மூதூர், திருகோணமலை)
வீரவேங்கை கடலரசன் (ஆபிகராம் பயஸ்ஆரோக்கியகுமார் – இளவாலை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஆரூரன் (சிவரட்ணம் கேதீஸ்வரன் – ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கவிஞன் / ராஜன் (புவனேந்திரன் பவானந்தன் – சங்கத்தானை, யாழ்ப்பாணம்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment