அண்மையில்ஸ்ரான்லி வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை ரெலிகொம் ஆகியவற்றின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளும், ஸ்ரான்லி வீதி புனரமைப்பு செய்யும் ஒப்பந்தகார நிறுவனத்தினரும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஒப்பந்தகார நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில்,இத்திட்டத்தை வரும் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் முடிவுறுத்திக் கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதைக் குறைத்து வேகமாக செய்து முடிப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது. ஸ்ரான்லி வீதியானது இருபக்கமும் வாகனத்தரிப்பிடம், வாய்க்கால், நடைபாதை, சுற்றுவட்டம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியவாறு புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
