ஈகத்தீயேவா எம்மில் எழுச்சிமின்னல்தா

0 0
Read Time:1 Minute, 25 Second

புரட்சியியைப் புரட்சித்த அகராதியே
புன்னகையால் செயல்வென்ற பெரு மேதையே
மக்களுக்காய் முழங்கிநின்ற
அன்பாளனே


மனவுறுதிக்கிலக்கணமே
பண்பாளனே
இளமையிலே தெளிவுகொண்ட
இலட்சியனே-தமிழ்
இனமானம் காத்து நின்ற
எழுச்சியனே
உயிரோடு உடல் வேக
உருகியவா!
உனக்கென்று வாழாது கருகியவா!
பசியேந்தித் தவம் செய்த வீரமுனி
திசையெங்கும் அகிம்சைக்கோர்
வீரனும் நீ
திலீபமென்றால் ஈகமென்றே ஆனாய் அண்ணா
கலிதீர்க்கும் காங்கைச் சுடராய்
ஒளிர்வாய் அண்ணா
வழிவழிஉந்தன் வரலாறு போற்றும்
தலைமுறை-உன்
வடிவமே அவர்க்கு வழிகாட்டும் திருமுறை
தமிழீழம் நோக்கி உன்கனவேந்திப்பயணம்
தடைகள் வென்று இனம் ஒன்றாகும் தருணம்.
ஈடிணையில்லா உன் போராட்டவேள்வி
எமக்குள் வெடிக்கும் புரட்சித்தீயின் சாவி
தலைவர் போற்றும்
தகையோன் உன்அடியொற்றி
மலையாய் எழுவோம் உன்மனத்திடம்தனைப்பற்றி
ஈகத்தீயே வா எம்மில்
எழுச்சிமின்னல்தா

அரியாத்தை
26.09.2021

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment