கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டு 18 நாட்களாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையினை வந்தடைந்தது.

சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவேண்டும் என்னும் வேணவாவோடு பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 19/09/2021 ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை (ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலை) வந்தடைந்தது.

மேலும்

கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல்கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பல் மீதான கடற்கரும்புலித்தாக்குதல் ஒரு மீள் பார்வை.

வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீதானதாக்குலுக்குப் பதிலடியாக கடலில் ஒருதாக்குதல் நடாத்துமாறு .தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும்

பிரான்சில் ஆர்ஜொந்தையில் தியாக தீபம் அவர்களின் 4 ஆம் நாள் நினைவேந்தல்!

பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் 4 ம் நாள் நிகழ்வுகள் இன்று 18.09.2021சனிக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்…!

வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறையதொடங்கிவிட்டனர். இன்னும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது.

மேலும்

17ம் நாளாக (18/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நாவினை அண்மிக்கின்றது. (1200Km)

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவினுடைய 4ம் நாள் தொடர் உண்ணா நோன்பின் 34ம் ஆண்டு நினைவில் நிற்கின்றோம். இன்னும் விடுதலைப் பசியோடு காத்திருக்கும் திலீபன் அண்ணா போன்ற பல மாவீரர்களின் வேணவா நிறைவேற இன்றோடு 17ம் நாளாக 18/09/2021 தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். மற்றும் வரலாற்று பூர்வீக தாயகமான தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு எனும் நிலைக்கு வாழிட நாடுகளை பலப்படுத்திக்கொண்டு சுவிசு நாட்டில் பயணிக்கின்றது. நேற்றைய தினம் Fribourg மாநகரத்தில் தமிழீழ மக்களின் எழுச்சியான வரவேற்போடு நிறைவடைந்து இன்று மீண்டும் பயணம் Lausanne மாநகரம் நோக்கி பயணிக்கின்றது.

மேலும்