“ எங்களிடம் இப்போது மிஞ்சியிருப்பது மனித தர்மம் ஒன்று மட்டும்தான். ’
சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரும் முகமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸிருந்து கடந்த 01.09.2021 அன்று புறப்பட்டு ஜெனிவா செல்லும் நிழற்பட ஊர்தியின் மனித நேயச் செயல்பாட்டாளர்களில் ஒருவரான சிவசுப்ரமணியம் பிங்கலன் அவர்கள் இரு ஊர்திகளில் ஒரு ஊர்தியின் சாரதியாகவும் இனப்படுகொலையின் சாட்சியங்களை பார்வைக்கு வைக்கப்படும் இடங்களில் வெளிநாட்டவர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டும் வருகின்றார்.

இன்று நாம் அவரை உற்று நோக்கி பார்க்கும் போது தன்னுடைய கைத்தொலைபேசியில் ஒரு காணொளியை இவர் பார்த்துக்கொண்டு சோகமாக இருந்ததும் அதனை நாங்கள் பார்த்தபோதுதான் எங்களுக்கு தெரியவந்தது அவர் பார்த்தது காணொளி அல்ல வாட்ஸ் அப்பில் தன்னுடைய குழந்தையை பார்த்துக்கொண்டு இருந்தது.
அதன் பின்னர்தான் நாங்கள் அறிந்து கொண்டோம் அவருடைய குழந்தை பிறந்து சில நாட்கள் என்பது அவரிடம் நாங்கள் கேட்டோம் குழந்தை பிறந்த தாயையும் குழந்தையையும் எதற்காக விட்டுவிட்டு வந்தீர்கள் என்று கேட்டோம் அதற்கு அவர் எமக்கு அளித்த பதில் எனது குழந்தையை பார்க்க நான் மனைவி அயல் இருக்கு ஆக மிஞ்சினால் அரசு இருக்கு ஆனால் எங்கள் இனத்தில் எத்தனையோ குழந்தைகள் எங்கள் கண்முன்னால் கொல்லப்பட்டார்கள் எங்கள் இனம் நாடு இருந்தும் அகதியாக அலைகின்றார்கள் நான் மட்டும் என் மனைவி குழந்தை என்று வீட்டில் இருந்தால் யார் விடுதலைக்காகவும், இந்த நீதிக்காகவும் போராடுவது என்று எமக்கு பதில் அளித்தார் அதே நேரத்தில் அவர் தன்னுடைய குழந்தையை காணொளியில் பார்த்து கண்கலங்கினார். அதையும் நாம் பார்த்தோம் அதன் பின்னர் அவருடைய குழந்தையின் பெயரை கேட்டோம் பெண்பிள்ளை காருண்யா என்றார். (பெயரிலேயே அந்த காருண்யத்தை காட்டியிருந்தார்.) மனைவி குழந்தை பிரான்ஸ் தலைநகரில், தந்தையோ பலநூறு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஐரோப்பா பாராளுமன்றம் முன்றலில் நின்று கொண்டிருக்கின்றார். இன்று எத்தனையோ வைப்பர், வட்சப், சூம் தொழில்நுட்பங்கள் பல வந்துள்ள போதும் உணர்வு என்பதை குழந்தையை தொட்டு, தூக்கி, முத்தமிட்டு அருகில் இருந்து பகிர்ந்து கொள்வது போல வராது. ஈழத்தமிழர்கள் நாம் எம் மண்ணின் வீரம் நிறைந்த போராட்டத்தை நம் கண்முன்னே கண்டிருக்கின்றோம். அதேபோல எத்தனையோ தியாகங்களையும் கண்டிருக்கின்றோம்.

இதோடுதான் இன்னும் வீடுகளில் இருந்து மூன்று நேர உணவுகளை ருதித்து உண்டு கொண்டு அதனை முக நூலில் இட்டுக்கொண்டும் எதனையுமே செய்யாமல் கோட்டையும், ரையையும் கட்டிக்கொண்டு கணனிக்கு முன்னால் இருந்து கொண்டு அர்ப்பணிப்புடன் தன் இனத்திற்காக இழைக்கப்பட்ட கொடுமைக்காக நீதிக்காக உழைப்பவர்களை நிந்திப்பதும் பொது வெளியில் விமர்சிப்பதும் ஒரு தொழிலாக சிலர் செய்துகொண்டிருக்கும் இக்காலத்தில் ஒன்று மட்டும் தெரிந்து கொள்ள வேண்டியது! உண்மையான உணர்வுகொண்ட ஒரு தமிழன் இருக்கும் வரை விடுதலை அடைவதற்கு களத்திலும் சரி, புலத்திலும் சரி போராடுவோம் என்பதையே! குழந்தை பிறந்து எட்டு நாள் கூட ஆகாத நிலையில் விடுதலைக்காக மனைவியையும், பிறந்த குழந்தையையும் வீட்டில் விட்டு தன்குடும்பம் என்கின்ற சொந்த உணர்வைவிட ஒட்டுமொத்த தேசிய விடுதலை உணர்வை நெஞ்சில் தாங்கி நீதிக்கான போராட்டத்திற்கு வருகை தந்து உழைக்கும் இவரை ஓர் நல்லதோர் உதாரணமாகவே பார்க்கின்றோம். இந்த மனிதநேய செயல்பாட்டாளரின் கரங்களை இறுகப்பற்றி விடுதலையைநோக்கியும், சர்வதேசத்தின் நீதிக்காகவும் தொடர்ந்து பயணிக்கின்றோம். “
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நன்றி ம. கஜன்.