இந்தோனேசியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பிலிருந்த போராளிகளுக்கு பணிக்கப்பட்டிருந்தது அதற்கமைவாக மாவீரரான லெப்.கேணல் வெற்றியரசன்( ஸ்ரிபன்) அவர்கள் தலைமையிலான கப்பல் ஒருபடகையும்
மேஐர் நிர்மலன் தலைமையிலான கப்பல் இன்னொருபடகையும் என பொறுப்பெடுத்தது அதன்படி லெப்.கேணல் ரஞ்சன் தலைமையிலான கப்பலின் இழப்பிற்க்குப் பின் நடக்கும் முதல் விநியோகம் என்பதால் மிகவும் அவதானத்துடன் இந் நடவடிக்கை இடம்பெற்றது .
இந்நடவடிக்கையானது ஸ்ரிபன் தான் கொண்டு செல்லும் படகை கரையிலிருந்து இருநூற்றம்பது மையிலில் தூரத்தில் வைத்து நிர்மலனிடம் கொடுக்க
நிர்மலன் அந்த இருபடகுகளையும் முல்லைத்தீவு கடலிலிருந்து இருநூறு கடல்மைல் தூரத்தில் அப்படகுகளை விட அப்படகுகள் கடற்புலிகளின் கடற்சண்டைப்படகுகளின் துணையுடன் அப்படகுகள் தமிழீழத்தை வந்தடையும் இதுவே திட்டமாகும்.திட்டத்திற்கமைவாக முதலாவதாக நிர்மலனின் கப்பல் படகுகளை விடவேண்டிய இடத்திற்க்குப் தனது படகுடன் புறப்பட அதன் பின் இரண்டாவது நாள் ஸ்ரிபனது கப்பல் தனது படகுடன் புறப்பட்டது .புறப்பட்ட அன்றிரவு மூன்று
கப்பல்கள் சுமார் நான்கு கடல்மைலகள் தூரத்தில் கிடையாக வேகமாக சென்றதை ஸ்ரிபனது கப்பலிலிருந்தவர்கள் ராடர் மூலமாக கண்காணித்தனர். இருந்தாலும் இரவென்பதாலும் கப்பல்களின் போக்குவரத்துப் பாதையென்பதாலும் இவர்கள் அக்கப்பல்களைக் கருத்திலெடுக்காமல் தங்களது பயனத்தைத் தொடர்ந்தனர்.14.06.2003அன்று அதிகாலை கடற்படைக்கப்பல்கள்
நிர்மலனின் கப்பலை வழிமறிக்க இத்தகவல்களை உடனடியாக ஸ்ரிபனுக்கு நிர்மலன் கூற ஸ்ரிபன் தனது கப்பலை சர்வதேச கப்பல் பாதையில் சென்றார்.நிர்மலனது கப்பல் கூட்டி வந்த படகில் லெப்.கேணல் தென்னவனுடன் இன்னொரு போராளியும் உடனிருந்தார் . இவ் இக்கட்டான சூழலில் நிர்மலனின் கப்பலிலிருந்த லெப் கேணல் வீரமனி கப்பலிலிருந்து படகை கட்டியிளுத்து வந்த கயிற்றை வெட்டி இம்முற்றுகையிலிருந்து தப்புமாறு பணித்தான் .படகில் முற்றுகையை விட்டுத் தப்ப முயற்சித்தபோதும் கடற்படைக்கப்பல்கள் விடவில்லை இருந்தாலும் ஒருகட்டத்தில் கடற்படைக் கப்பலை மோதுவதைப்போல படகிலிருந்தவர்கள் முயற்சித்தபோது கடற்படைக்கப்பல்கள் விலகின அம் முற்றுகையிலிருந்து படகும் வெளியேறியது .அந்நேரம் சமாதானச் சூழல் என்பதால் இவர்களை மீட்கப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது .ஒருகட்டத்தில் கப்பலிலிருந்தவர்களுடன் தொடர்பிலிருந்த தென்னவன்
கப்பலுக்கு வரவா எனக் கேட்க கப்பலுக்கு கட்ற்படைகப்பல்கள் தாக்குதல் மேற் கொள்கின்றன வரவேண்டாம் நீங்கள் தப்புங்கோ என்றவுடன் கப்பலிலிருந்தவர்களுடன் படகிலிருந்தவர்களின் தொடர்பும் துண்டிக்கப் படுகிறது.பேச்சுவார்த்தைகள் பயனின்றிப் போக நீண்ட கடலனுபவம் கொண்ட போரளிகள் பதினொருவரும் நாட்டுப்பற்றாளர் ஒருவருமாக கடலிலே காவியமானார்கள்.லெப் கேணல் தென்னவனின் படகு அன்றிரவு ஸ்ரிபனி
ன் கப்பலால் மீட்கப்படுகிறது.
இந்நடவடிக்கையில் செவ்வனவே பங்காற்றி
வெவ்வேறு சம்பவங்களில் கடலிலே காவியமான.
லெப் கேணல் ஸ்ரிபன்
வீரச்சாவு .17.09.2006
லெப் கேணல் தென்னவன்.
வீரச்சாவு .28.02.2007
எழுத்துருவாக்கம்..சு.குணா.











