ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின்எதிர்கால திட்டத்திற்கு அமைவாக
அவரது ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் வழங்கல் அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில்,
01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப் கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தவேளையில் 55 கடல்மைல் தூரத்தில் இலங்கைக் கடற்படையின் டோறாப் பீரங்கிப் படகுகள் வழிமறிக்கமுற்பட்ட வேளையில் அக்கடற்படையினருடன் சண்டையிட்டு வந்து கொண்டிருந்தனர்.அதே சமயம் தளபதி நிறோஐன் அவர்கள் தலைமையிலான சண்டைப்படகுகள் வந்து கடற்படையினரை வழிமறித்து தாக்குதல் நடாத்தி வழங்கல் படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த வேளையில், காங்கேசந்துறையிலிருந்து வந்தடோறாப்படகுகள் கப்டன் ஈழமைந்தன் அவர்களின் வழங்கல் படகை வழிமறிக்க முற்பட்டவேளையில் அக்கடற்படையினருடனான மோதலில் ஈழமைந்தனின் படகு பற்றி எரிந்து கடலில் மூழ்கியது. (ஈழமைந்தனின் படகு அன்றையதினம் எரிபொருள் ஏற்றிக்கொண்டு வந்தது .)தொடர்ந்து மேலதிகமாக வந்த பலடோறாப்படகுகளுடன் .தளபதி நிறோஐன் அவர்களின் சாதுர்யத்தால் (அதாவது கடற்படை வழங்கல் படகின்மீது தான் தாக்குதல்களை மேற்கொள்வான் ஏனெனில் வழங்கல் படகுகள் பொருட்களை ஏற்றி வருவதால் வேகம் குறைவாகத்தான் வரும் .ஆகவே சண்டைப்படகுகள் டோறா மீது தாக்குதல் நாடத்தி தூரத்திற்க்கு கலைத்தவிட்டு சண்டைப் படகுகள் வழங்கல் படகுகளின் வேகத்திற்கு ஏற்றமாதிரி வந்தார்கள்.இதனால் கடற்படைக்கு வழங்கல் படகுகளை இன ங்காணுவது மிகவும் இயலாதநிலையில் இருந்தது.இவ்யுக்தியைக் கையாண்டார் தளபதி நிறோஐன் அவர்கள்.) ஏனைய வழங்கல் படகுகள் பாதுகாப்பாக சாலைத் தளம் வந்தடைந்தது இந்நடவடிக்கையில் கடற்புலிகளின் பிரதான கட்டளைத் தளமான சாலைத் தளத்தின் ராடர் கட்டளைத்தளத்தின் பொறுப்பாளராகவும் வழங்கல் தொகுதிக் கட்டளை அதிகாரியுமான லெப் கேணல் தர்சன்/ தேவநேயன் உட்பட பதினொரு போராளிகள் அன்றைய தினம் கடலிலே காவியமானார்கள்.
லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்)
முத்துக்குமார் கலைஞானசேகர்
அழியவளை, தாழையடி, யாழப்பாணம்
மேஜர் குணசீலன்
மார்க்கண்டு கந்தசாமி
அரசடி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
மேஜர் இமையகாந்தன்
சண்முகம் சத்தியசேகர்
சிலாவத்தை, முல்லைத்தீவு
கப்டன் பருதி
சின்னத்தம்பி ஜெகதீஸ்வரன்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
கப்டன் புதியவன்
நித்தியானந்தம் உதயகுமாரன்
ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
கப்டன் ஈழமைந்தன்
நவரட்ணம் நவதீபன்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
கப்டன் வான்கவி
குமாரசாமி செல்வரஜினி
கரணவாய் கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
லெப்டினன்ட் காண்டீபன் (ஈழவன்)
அன்ரனிதாஸ் றொனால்ட்
மாத்தளை, சிறிலங்கா
2ம் லெப்டினன்ட் தமிழீழவள்
சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி
சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்
2ம் லெப்டினன்ட் எழில்வள்ளி
அற்புதலிஙகம் சுகிர்தா
தொல்புரம் மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரவேங்கை மலையரசி
காந்தீபராசா சகுந்தலாதேவி
சங்கானை கிழக்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
லெப். கேணல் தர்சனுக்கு ஏற்கனவே இரு சகோதரர்கள் மாவீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ் அனைத்து நடவடிக்கைகளையும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் சாலைத் தளத்திலிருந்து வழிநடாத்தினார்.தொடர்ந்து படகுகளிற்க்கு பொருட்கள் வழங்கிய கப்பலை பற்றிய தகவல்களை இலங்கைக் கடற்படையினர் இந்தியக் கடற்படையினருக்குத் தெரிவித்தனர்.
அதற்கமைவாக 01.05.1999 அன்று மாலை இந்தியக்கடற்படையினர் இந்திய விமானப்படையின் உதவியுடன் பின்தொடர்ந்து கப்பலிலிருந்தவர்களை சரணடையச் சொல்லியும் எச்சரிக்கை வேட்டுக்கைளைத்தீர்த்தும் .கப்பலிலிருந்தவர்கள் தங்களைத் தாங்கள் அழிக்கவேண்டும் இல்லையேல் தங்களிடம் சரணடையவேண்டும் இதில் எதையாவது ஒன்றைச் செய்யவேண்டும் .என்பதற்காக கடும் அழுத்தத்தைத் தொடுத்தனர்.ஆனாலும் போகும் வரை போவோம் இல்லாவிட்டால் முடிவெடுப்பம் என்ற கப்பல் தலைவரின் உறுதிமிக்க செயற்பாட்டாலும் தலைவர் அவர்களின் ஆலோசனை மிக்க செயற்பாட்டாலும் .05.05.1999 அன்று இவர்களின் கப்பலானது கப்பல்கள் செல்லும் பிரதான பாதைக்குச் சென்று மற்றக் கப்பல்களுடன் சென்றபோது, ஏற்பட்ட காலநிலைமாற்றத்தால் உண்டான கடற்கொந்த ளிப்பால் இந்தியக் கடற்படையால் இவர்களது கப்பலை அடையாளம் காணமுடியாமல் போனதால் இவர்களது கப்பல் தங்களது பாதையில் சென்றது.உண்மையில் இந்த ஐந்து நாட்களும் கப்பலிலிருந்தவர்கள் தாங்களும் கப்பலும் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதில் உறுதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.கப்பல் தவைரின் செயற்பாடும் மிகவும் அளப்பரியது .கப்பல் தலைவரின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டால் தான் அன்றைய பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டது எனச் சொன்னால்.அது மிகையாகாது.
எழுத்துருவாக்கம்..குணா.
