Read Time:1 Minute, 18 Second
28.03.2021 கிட்டு பூங்கா நுழைவாயிலுக்கு தீ வைப்பு நல்லூர் கிட்டுப் பூங்காவின் நுழைவாயில் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது
இந்தச் சம்பவம் தாயக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தொடர்ச்சியாக ஈழத்தமிழர் போராட்ட அடையாளச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது கிட்டு பூங்கா விற்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது,
கிட்டு சிறுவர் பூங்கா திறந்து வைப்பு – ஓகஸ்ட் 1994