இந்தியாவிற்கான கடல் விநியோகத் தடைகளை தகர்த்த பெண் கடற்கரும்புலிகள்.

0 0
Read Time:7 Minute, 18 Second

யாழ்குடாவிலிருந்து இடம்பெயர்ந்து பூநகரி பள்ளிக்குடாப்பகுதியில் மீள்குடியமர்ந்து கடற்தொழிலில் ஈடுபட்டமீனவர்கள் மீது தொடர்ச்சியாகக் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடாத்திவந்தனர்.அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளின் இந்தியாவுக்கான கடல்விநியோகத்திற்க்கும் இக்கடற்படையினர் பாரிய அச்சுறுத்தலாகவுமிருந்தனர்.

உண்மையில் அக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்துதான் மருந்துப் பொருட்களை கடற்புலிகள் கொண்டுவந்துகொண்டிருந்தனர்.இது அக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் வன்னிப்பெருநிப்பரப்பில் கடும்பொருளாதாரக் கட்டுப்பாட்டிற்க்கும் மத்தியில் யாழ்குடாவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் வன்னிப்பெருநிலப்பரப்பிலிருந்த அனைத்துமக்களுக்குமான மருத்துவப் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. போதியமருந்துப்பொருட்கள் இல்லாததால் பொதுமக்கள் தொற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களினாலும் மக்கள் உயிரிழப்புக்களை சந்தித்துக்கொண்டிருந்தனர். இதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப மருந்துப்பொருட்களை இந்தியாவிலிருந்து தாயகத்திற்க்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தது.இதற்க்கு இலங்கைக்கடற்படையின் படகுகள் இடையூறு விளைவித்தனர். இக்கடற்படையினரின் நடவடிக்கையானது பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.இவ்விடயத்தை கடற்புலிகள். தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.இவ்விடயத்தை கவனத்திலெடுத்து தீவீரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள். மக்களுக்கான மருத்தவ விநியோகத்தில் பாரியநெருக்கடி ஏற்பட்டுள்ளதை புரிந்துகொண்டு மிகதுரிதமாக இவ் விநியோக நடவடிக்கைக்கு இடையூறாக உள்ள கடற்படையினர்மீது தாக்குதல் நடாத்தி மக்களைப் பாதுகாக்குமாறு கூறி கடற்புலிகளை வழியனுப்பினார்
தலைவர் அவர்கள்.அதற்கமைவாக கடற்புலிகளின் கடற்தாக்குதல் படையணிகளான வசந்தன் படையணி, நரேஸ் படையணி, மாதவி படையணி, சாள்ஸ் படையணி, நளாயினி படையணி மற்றும் கடற்கரும்புலிபடையணிகளை இணைத்து ஒரு தாக்குதற்திட்டத்தை விளங்கப்படுத்தினார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள்.அதற்கமைவாக லெப்.கேணல். நிறோயன் மேஐர் .ராஐ்மோகன் தலைமையிலான சண்டைப் படகுத்தொகுதிகள் கடற்படைக்கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி கொடுக்க கடற்கரும்புலிகள் கடற்படைக்கலங்களைமூழ்கடிப்பார்கள்.இதுவே திட்டமாகும்.தாக்குதற் திட்டத்தின்படி மன்னார் கிராஞ்சியிலிருந்து சண்டைப்படகுகள் கடற்கரும்புலிப்படகுகளையும் அழைத்துக்கொண்டு கடற்படைக்கலங்களை நோக்கி போவார்கள் ஆனால் கடற்படைக்கலங்களோ இவர்களைக்கண்டு காரைநகர்கடற்படைத்தளத்திற்குள் ஓடிவிடுவார்கள்.கடலில் கடற்படைக்கலங்கள் வருகிறது என்ற தகவல் கட்டளைமையத்திலிருந்து வந்ததும் கடற்புலிகள் வெளிக்கிட்டுப்போவார்கள் கடற்படைக்கலங்களோ இவர்களைக் கண்டு ஓடிவிடுவார்கள்.இது தொடர்ச்சியாக நடைபெற தளபதி நிறோஐன் அவர்கள் சிறப்புத்தளபதியிடம் ஒருமாற்றுத்திட்டத்தைக் கூறினார்.அதாவது அக்காலம் மாரிகாலமென்பதால் அடிக்கடி காலநிலைகளில் மாற்றமேற்படுவது வழமை இதைப்பயண்படுத்தி கடும் மழைமற்றும் கடும் கடல்கொந்தளிப்பான காலப்பகுதியில் தாங்கள் கடற்கரும்புலிப்படகுகளை காரைநகர் கடற்படைத்தளத்திற்குள் அழைத்துச்சென்று தாக்குதல் நடாத்தி கடறபடைக்கலங்களை மூழ்கடிப்போமெனக் கூறினார்.அதற்க்கு சூசை அவர்கள் அனுமதியளித்தார்.அதற்கமைவாக கடுமையான காலநிலைகளுக்கு மத்தியில் 10.11.1996 அன்றிரவு கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் கடற்கரும்புலிகளின் படகுகளுமாக காரைநகர் கடற்படைத்தளம் நோக்கி புறப்பட்டனர்.காரைநகர்கடற்படைத்தளத்திற்குள் நிற்கும் கடற்படைக்கலங்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள்.ஆனால் இவர்கள் காரைநகர் கடற்படைத்தளத்திற்கு அருகில் நின்ற உட்பகுதிக்குள் செல்லமுயன்றபோது அங்கு காவல்கடமையில் நின்ற டோறா பீரங்கிக்கலங்கள் இவர்கள் மீது தாக்குதலைத் தொடர இப்பெண்கடற்கரும்புலிகள் அக்கலம்மீது தாக்குதல் நடாத்தி 11.11.1996 அன்று அதிகாலை வீரச்சாவடைந்தனர்.
இத்தாக்குதலின் மூலம் இந்தியா விநியோகம் தங்குதடையின்றி நடைபெற்றது.
இவ்வெற்றிகர தாக்குதலில்.
கடற்புலிகளின் நளாயினி கடற் தாக்குதல் படையணியின் முன்னை நாள் பொறுப்பாளரான
கடற்கரும்புலி மேஐர்.பாரதி.
(கமலரானி வீரகத்தி யாழ்ப்பாணம்)


கடற்கரும்புலி கப்டன்.இன்னிசை.
(புஸ்பலதா இராசதுரை யாழ்ப்பாணம்.)


ஆகியோர் வீரகாவியமானார்கள்.இவர்களின் தியாகத்தினால் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்களுக்கான இந்தியா மருத்துவ விநியோகத்திற்கான தடைகள் துடைத்தெறியப்பட்டு அவ்விநியோக நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றது.தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப
இவ்வெற்றிகர நடவடிக்கைகளை கடலில் லெப்.கேணல் .நிறோஐன் அவர்கள் அணிகளை வழிநடாத்த
அணைத்து நடவடிக்கைகளையும் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் கிராஞ்சி தளத்திலிருந்து வழிநடாத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment