சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அம்பிகை செல்வகுமார் இன்று 27ந் திகதி மதியம் 12 மணிக்கு பிரித்தானியாவில் ஆரம்பிக்கவுள்ளார்.

0 0
Read Time:2 Minute, 9 Second

சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அம்பிகை செல்வகுமார் என்ற தமிழ்ப் பெண்மணி இன்று 27ந் திகதி மதியம் 12 மணிக்கு பிரித்தானியாவில் ஆரம்பிக்கவுள்ளார்.

ஜெனிவாவில் ஜ.நா மனித உரிமைப் பேரவையில் மீண்டும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கி இலங்கையின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்து போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை இலங்கை பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் இலங்கை குறித்து இணைத் தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன் வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள், மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அம்பிகை, எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனித நேயத்தோடு சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை தான் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment