திருமலையில் இருந்து ஆரம்பித்த பேரணி நெடுங்கேணியில் நிறைவு பெற்றது.

0 0
Read Time:2 Minute, 50 Second

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று நெடுங்கேணி வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றதுஇன்று காலை 09.00 மணிக்கு திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. அங்கிருந்து புதுக்குடியிருப்புநோக்கி சென்று ஒட்டுசுட்டான் சந்தியை அடைந்து இரவு7 மணியளவில் நெடுங்கேணியை ௮டைந்து அங்கிருந்து புளியங்குளம் ஊடாக வவுனியாமாவட்டத்தை அடைந்தநிலையில் போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

நாளையதினம்  காலை 7.45 ம‌ணி‌க்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பு  பேரணி ஆரம்பித்து  வவுனியா நகரில் நடை பவனி  நடைபெறுகிறது. காலை 9.00  ம‌ணி‌க்கு பண்டார வன்னியன் சிலை அருகே வாகன பேரணியாக புறப்பட்டு   9.15 மணிக்கு பட்டாணிச்சூர் முஸ்லிம் மகா  வித்யாலயத்தின் முன்பாக நடைபேரணி  நடைபெறும் .அடுத்து  நெளுக்குளம் 9.45 மணிக்கு  அடுத்ததாக 10,30 மணிக்கு  பூவரசன்குளம் அடுத்ததாக  11 மணிக்கு மடுவீதி அடுத்ததாக 11.30 மணிக்கு  முருங்கன்  அடுத்ததாக 12.30 ம‌ணி‌க்கு மன்னார் நகரில் நடைபவனி.

அங்கிருந்து மன்னார் மாவட்டம் நோக்கி பயணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment