பெப்ரவரி 4 ஆம் தேதி, இலங்கைக்கு சுதந்திர நாள்,ஆனால் தமிழீழத்திற்கு கரி நாள்.

0 0
Read Time:4 Minute, 55 Second

இந்த நாளை முன்னிட்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் முகப்புத்தகத்திலும் அனைத்து சமூக வலைப்பக்கங்களில் பகிரும் வகையில் காட்சி படம், பல மொழி சுவரொட்டிகள், பதாகைகள் வடிவமைத்து உள்ளோம்.

“பெப்ரவரி 4 கருப்பு நாள்” என்கிற உலக பரப்புரையும், #GenocideSrilanka என்கிற ஹெஷ்டாகும் உருவாக்கி உள்ளோம்.

இதை தொடர்ந்து பல்வேறு சிவில் சமூகங்கள்,அமைப்புகள் இளையோர் அமைப்புகளோடு சேர்ந்து பணியாற்றி, பெப்ரவரி 4 ஆம் நாள் ஒரு சமூக வலைத்தள புரட்சி ஒன்றை நடாத்த அனைத்துலக தமிழ் இளையோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளோம்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துவரும் சிறிலங்கா தொடர்பாக பன்னாட்டு சமூகம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்றுவரை ஈழ தமிழர்களுக்கு அடிப்படை உரிமை கிடைக்காத நிலையில் நீதியும்கூடக் கிட்டவில்லை.

எங்களின் உரிமைக்காக நாங்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தை ஆதரித்து எங்களுடன் தோளோடு தோள் நிற்குமாறு உலகிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

நாம் அனைவரும் ஒற்றுமையாக புயலென வீறுகொண்டெழுந்து உலகிற்கு எங்களின் குரலை உரக்க ஒலிக்கச் செய்வோம்.

இலங்கையின் சுதந்திர நாள்
தமிழீழத்தின் கரி நாள்.

GenocideSrilanka

இந்த பரப்புரையின் விதிமுறைகள் ⚠️

1.அனைத்து சமூக ஊடகங்களிலும் உங்கள் காட்சிப் படமாகப் பயன்படுத்த(profile picture) 2 ஆவது படத்தை ஸ்கிரீன்ஷாட் செய்யவும்.

  1. அடுத்தது 3 ஆவது படத்தை (சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழீழத்தின் கரி நாள் என்கிற வசனத்துடன் உள்ள படம்) ஸ்கிரீன்ஷாட் செய்து பெப்ருவரி 4ம் திகதி அனைத்து சமூக வலைத்தளங்களில் #GenocideSrilanka உடன் பதிவுசெய்யவும்
  2. தரமான படங்களின் (காட்சிப் படம், பன்மொழி சுவரொட்டிகள், முகநூல் பதாகை) பதிவிறக்க இணைப்பு எங்கள் பயோவில் கிடைக்கிறது(website link)

4.பதிவிறக்குங்கள், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் எல்லா இடங்களிலும் பரப்பவும் (ஐ.ஜி., எஃப்.பி., ட்விட்டர், வாட்ஸ்அப், வைபர், சிக்னல் & போன்றவை)

  1. இந்த பதிவை பரவலாக பகிரவும்

6.இனப்படுகொலை தொடர்பான அனைத்து படங்களையும் எங்கள் ஹேஷ்டேக் மற்றும் சிறிலங்கா அரசு “சுதந்திர” தினத்தில்அறிவிக்க இருக்கிற அதிகாரபூர்வ ஹேஷ்டேகை பயன்படுத்தி பகிருங்கள்.

7.லோகோ இல்லாமல் இந்த படங்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம், எனவே இது உலகளவில் பகிரப்படலாம், எனவே தயவுசெய்து உங்கள் லோகோவைப் பயன்படுத்த வேண்டாம்🙏🏾

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ✊🏾❤️💛🐅


Campaign BLACK DAY ◼️

GENOCIDESRILANKA

February 04th is the independence day of Srilanka but it’s a black day for Tamileelam.

The International community yet to take serious actions on Srilanka for the structural genocide against Tamils, war crimes and crimes against humanity.

The justice for Eelam Tamils are still due and the fundamental rights are still being rejected. Let’s remind ourselves that justice delayed is justice denied.

We are asking everyone’s solidarity on this campaign to show the world what Eelam Tamils are demanding.

Let’s Rise Up and make a clear statement.

SRILANKA’S INDEPENDENCE DAY
TAMILEELAM’S BLACK DAY

GENOCIDESRILANKA

Instructions ⚠️

● Screenshot the 2nd image, without text to use as your profile picture on all socials.

● Screenshot the 3rd image, with text to post on 04th February along with #GenocideSrilanka

● Share this post widely

● Download link is available on our bio for the High quality images (Profile Pic, multilingual posts, fb banner)

● Download, Share with family and friends and circulate everywhere (IG, FB, Twitter, Whatsapp, Viber, Signal & etc)

● Post many pictures as possible related to Eelam Tamil genocide with our hashtag and the official hashtag for independence day which is yet to be confirmed by Srilanka.

Please be kindly not use your logo 🙏🏾

Thamilarin Thaakam Thamileela Thaayakam
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ✊🏾❤️💛🐅

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment