தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பேரெழுச்சியுடன் ஆரம்பித்த நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம் 2021.

எதிர் வரும் 46வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு   தமிழ் இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மனித நேய செயற்பாட்டாளர்கள்   04.01.2020 திங்கட்கிழமை அன்று Strasbourg மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய  பாராளுமன்றம் மற்றும் ஆலோசனை அவை முன் இருந்து தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணத்தினை ஆரம்பித்தார்கள்.

மேலும்

வீரத்தின் விழுது கேணல் சாள்ஸ். வீரவணக்கநாள் இன்று.

05.01.2008அன்று தமிழீழத்தையே துயரத்தில் ஆழ்த்தி அனைவரது இதயங்களையும் சிதறடிப்பதுபோல் வந்தது அந்தச் செய்தி… “கேணல்சாள்ஸ்அவர்கள்..வீரச்சாவாம்” . எப்படி..?என்ன நடந்தது..?இனம் புரியாத ஏக்கம் இதயத்தை வாட்ட துயரம்தொண்டையை அடைக்க நம்பமுடியாத அந்த செய்தியுடன் !!

மேலும்

சமாதான சதிவலையில் சரித்திரமாகி கடல்மடியில் எழுதிய வரலாறுகள்

இந்தோனேசியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பிலிருந்த போராளிகளுக்கு பணிக்கப்பட்டிருந்தது அதற்கமைவாக மாவீரரான லெப்.கேணல் வெற்றியரசன்( ஸ்ரிபன்) அவர்கள் தலைமையிலான கப்பல் ஒருபடகையும்

மேலும்

தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ஸ்ராஸ்பூர்க் நகரிலிருந்து பரிஸ் நகர் வரை மனிதநேய ஈருருளிப் பயணம்

எதிர்வரும் 46 ஆவது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க வைப்பது காலத்தின் தேவையாகும்.

மேலும்

சம்பவம்.திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனானநேரடிச் சமரின் போது.

1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  இராணுவ ஆக்கிரமிப்புக்கள்  இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன்.

மேலும்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் வாழ்த்துச் செய்தி!

நம்பிக்கை வாழ்வின் ஆதாரம். வழமையை விடக் கூடுதலான எதிர்பார்ப்புகளுடன் பிறந்துள்ளது 2021. கடந்த ஆண்டு எமக்குத் தந்த அனுபவங்களால் புத்தாண்டு மீதான எதிர்பார்ப்பு வழமையைவிட அதிகமாகவுள்ளது.

மேலும்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு வாழ்த்துச் செய்தி!

புத்தாண்டை வரவேற்போம்….!புதிதாகப் பிறக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டை புத்துணர்வோடும், நம்பிக்கையோடும் வரவேற்றுக் கொள்வோம். பிறக்கும் புத்தாண்டில் அனைத்து உறவுகளும் அமைதியையும், நிம்மதியையும், ஆரோக்கியமான வாழ்வையும், வளங்களையும் பெற்று வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.

மேலும்