
யாழ்.மாநகர சபைக்குட்பட்ட தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாத்தல் என்னும் பிரேரணையை யாழ்.மாநகர சபையில் முன்வைத்து அது தொடர்பான எனது உரை
(1.7.2020)யாழ்.மாநகர சபை எல்லகை;குள் தொல்லியல் திணைக்களத்தால் 13; அடையாளப்பட்ட இடங்கள் உள்ளன. அவ் இடங்களில் மிக முக்கியமான மந்திரி அரண்மனை. ஏன் எனில், மந்திரிமனை என்பது தொல்லியல் சார்ந்த இடம் என்பதற்கு அப்பால் தமிழர்களின் இருப்பினை அடையாளப்படுத்துகின்ற அல்லது ஆவணப்படுத்துகின்ற ஒரு மரவுரிமை சின்னமாகும். அவ்வாறான தமிழரின் மிக முக்கியமான இவ் மரிவுரிமைச் சின்னமானது தற்போது சமூக சீர்கேடுகள் நடைபெறுகின்ற இடமாகவும், கால்நடைகளைக் கட்டுகின்ற இடமாகவும் காணப்படுகின்றது.எமது பாரம்பரிய நிலங்களினை தொல்லியல் சட்டங்கள் மூலம் பலவந்தமாக கையகப்படுத்துகின்ற தொல்லியல் திணைக்களமும் இதில் பாரமுகம் காட்டுகின்றது. அதற்கும் காரணம் உள்ளது.யாழ்.மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகின்ற ஒரு இடம் யாழ்ப்பாணம் கோட்டையாகும். யாழ்ப்பாணம் கோட்டை என்பது காலணித்துவ ஆட்சிக்காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது ஒன்று மட்டுமே. ஆனால் அதற்கு முற்பட்ட தமிழ்வரலாறு ஒன்று அதில் உள்ளது. 2017 – 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் னுரசாயஅ பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த ஒரு பேராசிரியர் தலமைiயிலான குழுவினால் தெரிவிக்கப்பட்ட விடயம் என்னவெனில் யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றை ஒரு நாளாக எடுத்துக் கொண்டால். குறித்த அந்த ஒரு நாளில் இறுதியாகக வருகின்ற 3 நிமிடங்கள் தான் அது காலணித்துவத்திற்கு உட்பட்ட வரலாற்றைக் குறிக்கின்றது. முன்னால் இருக்கின்ற 23 மணித்தியாலங்கள் 57 நிமிடங்கள் முழுக்க முழுக்க காலணித்துவ ஆட்சிக்கு முற்பட்ட தமிழர்களின் பாரம்பரியத்தை அவர் இருப்பை பறைசாற்றுகின்றது. ஆனால் இன்று அது மறைக்கப்பட்டு முற்றுமுழுதாக ஒரு காலணித்துவ ஆட்சியில் கட்டப்பட்ட ஒரு தொல்லியல் சின்னமான மட்டும் அது காட்டப்படுகின்றது.தொல்பொருள் திணைக்களமானது மந்திரிமனையை இன்னமும் அது ஒரு தொல் பொருள் சின்னமாக அறிவித்து அதனை பாதுகாக்காமைக்குரிய முக்கிய காரணம் மந்திரி மனை தமிழர்களின் பூர்வீக அதன் தனிகரற்ற இருப்பை பறைசாற்றுவதனால் தான். தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் பூர்வீக நிலங்களைப் பறித்தெடுத்து அதனை பௌத்தமயமாக்குதல் மற்றும் தமிழர்களின் இருப்பை பறைசாற்றுகின்ற மரவுரிமைச்சினைங்களை அழித்தல் அழியவிடுதல் போன்ற செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் முன்னெடுத்து வருகின்றது என்பது வெளிப்படை. அதன் தொடர்ச்சி தான் இந்த நல்லூர் இராஜதானியின் மந்திரி அரண்மனையும்.100 வருடங்களுக்கு மேற்பட்ட பொருட்களை தொல்பொருள் சட்டத்தின் கீழ் அதனை உள்வாக்கின்ற தொல்பொருள் திணைக்களம் குறித்த அரமனையை உள்வாங்காமல் பாதுகாக்காமல் அழியவிடுதற்கு காரணம் அது தமிழரின் மரவுரிமைச் சின்னம் என்ற ஒரே ஒரு காணத்தினால் தான்.உள்ள காணியை ஒருவர் உரிமை கோருவதனால் அதனை ஒரு பேணிப் பாதுகாக்க வேண்டிய இடமாக அறிவிக்கமுடியாமல் இருப்பதாக கூறுகின்ற தொல்பொருள் திணைக்களம். கண்ணியாவில் ஒரு அம்மா அது தன்னுடைய காணி என்று கூறும் போதும் அதனை தொல்பொருள் திணைக்களம் அபகரீக்கின்றது.அத்துடன் 2010 ஆண்டுக்கும் 2012 ஆண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் யாழ்ப்பாணத்தில் பல பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்திய தொல் பொருள் திணைக்களம் மந்திரிமனையை தொல்லியல் சின்னமாக அறிவித்து அதனை பாதுகாக்க தவறிவிட்டது. குறித்த வழக்கு கூட 2012 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் தான் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. அக வழங்கு காரணமாகத்தான் அவ் மரவுரிமைச் சின்னம் பாதுகாக்கப்பட வில்லை என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.ஆக திட்டமிட்டே மந்திரிமனை அழிந்து போகவேண்டும் அல்லது அழிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அதனை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட வில்லை . அதற்கு காரணம் எல்லோருக்கும் தெரிந்த ஆவணப்படுத்தப்பட்ட நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கின்ற நல்லூர் மந்திரி மனையின் வரலாற்றை திரிவுபடுத்த முடியாது என்று அவர்கள் உணர்ந்ததே காரணமாகும். ஏன் எனில் யாழ்ப்பாணத்தில் பல தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்களாக அறிவித்து அதன் வரலாறுகளை பௌத்தமயமாக்கிய பதிவிவுகள் உள்ளன. கந்ரோடை அகழ்வராச்சிகள் அப்பிரதேசம் பெருங்கற்காலத்திற்குரியது என்றும் கூறுகின்றன. அங்கே கிடைக்கப்பெற்ற அகழாய்வுப் பொருட்களில் தமிழ் பிராமி பொறித்த பானை ஓடும் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. பலதரப்பட்ட பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள், நாகம் பொறித்த நாணயங்கள், கருங்கல் அம்மி, லட்சுமி உருவம் ஆகியவை பௌத்த காலத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. சிங்கள இன எழுச்சியின் காரணமாக இங்கே தமிழ் வரலாற்றின் தரவுகளை மறுத்து அந்த கால எல்லைக்குப்பிறகு சுண்ணாகத்தில் கிடைத்த காந்தரோடை மரபைச் சேர்ந்த புத்தர் உருவம் போன்ற பௌத்தத் தரவுகளை மட்டும் பிரபலமாக்கி, கந்தரோடை கதுரகொட என்ற பெயர் கொண்டு பௌவுத்த மரபுச் சின்னமாக இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.. அதே போல நெடுந்தீவில் குறுநில மன்னனான வெடியரசன் ஆட்சி புரிந்த வெடியரசன் கோட்டை தற்பேர்து புத்தர் மூன்று முறை வந்து சென்ற இடமாக மாற்றப்படுகின்றது. அவ்வாறான வரலாற்றுச் சிதைவுகளை செய்து வரலாறுகளைத் திரித்து நல்லூர் மந்திரிமனையில் சிங்கள பௌத்த சாயத்தினை பூசமுடியாது என்ற காரணத்தினால் அதனை நல்லூர் மந்திரிமனை சிதைந்துபோகட்டும் என்று அது பாதுகாக்கப்படவில்லை.ஒன்றினை அழிப்பது மட்டும் தான் வன்முறை அல்ல. அதனை பாதுகாக்காமல் அழியவிடுவதும் வன்முறைதான். மந்திரிமனை போன்ற தமிழர்களின் மரவுரிமைச் சொத்துக்களை அழியவிடுவதும் ஒரு வன்முறை தான். அந்த வன்முறையை தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளுகின்றது. தொல்லியல் திணைக்களம் மந்திரிமனையை பாதுகாக்கவேண்டும் என்ற கடமையில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் எங்களுடை வரலாற்று மரவுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கே உள்ளது. அந்த வகையில் இவ்வாறான மரவுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.எவ்வாறு பாதுகாக்கபட வேண்டும் பாதுகாக்கலாம்?யாழ்.மாநகர சபைக்குள் உள்ள மந்திரிமனை போன்ற பாதுகாக்க வேண்டியதாக அறிவிக்காமல் அழிந்து போகவிடப்படகின்ற தமிழர் மரவுரிமைச் சொத்துக்களை அடையாளப்படுத்தப்படவேண்டும் நல்லூர் மந்திரிமனை யாழ்.மாநகர சபையால் ஒரு பாதுக்காக்கப்படவேண்டிய ஒரு தமிழர் மரவுரிமைச் சொத்தென அறிவிப்பதோடு அவ் மரவுரிமைச் சொத்தின் வரலாறு புனிதம் ஆகியவற்றை எடுத்து கூறுகின்ற அறிவித்தல் பலகைகள் யாழ்.மாநகர சபையினால் நிறுவப்படவேண்டும். அத்துடன் குறித்த மரவுரிமைச் சொத்துக்களை சேதப்படுத்தவோ அல்லது சமூகசீர்கேடுகளில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதற்கான அறிவித்தல் பலகையும் இடப்படல் வேண்டும்.கிழக்கு மாகாணத்தினை கபளீகரம் செய்வதற்கு ஒரு விசேட செயலயிணை அமைக்க முடியும் என்றால் எங்களுடைய மாநகர அதிகார வரம்பிற்குள் உள்ள தமிழர் மரவுரிமைச் சொத்துக்களை அழிந்து போகாமல் பாதுகாக்க எம்மால் மட்டும் ஏன் ஒரு செயலணியை அமைக்க முடியாது. அந்த வகையில் காலம் தாழ்த்தாது உடனடியாக மாநகர சபை இவ் மரவுரிமைச் சொத்துக்களை பாதுகாப்பது பராமரிப்பது தொடர்பான விசேட செயலணியை அமைக்க வேண்டும். அச் செயலணிக்கு எங்களுடைய கட்சி சார்பாக என்னையும் உறுப்பினர் தனுஜனையும் பரிந்துரைக்கின்றேன்.அத்துடன் எங்களுடைய மக்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அவர்கள் தான் பிழை என்று சொல்லி விட்டு கடந்து போக முடியாது எங்களுடைய தரப்பிலும் பிழைகள் உள்ளன. மந்திரிமனை போன்ற தமிழர்களின் மரவுரிமைச் சொத்துக்கள் அழிந்து போதவற்கும், மற்றும் அங்கு நடைபெறுகின்ற சமூக சீர்கேடுகள் அனைத்துக்கும் காரணமும் நாங்கள் தான். அவர்களுடைய சிந்தனைக்கு நாங்கள் செயல் வடிவம் கொடுக்கின்றோம். எங்களுடைய சமூகம் ஒன்றை புரிந்த கொள்ள வேண்டும் சின்ன சிறகுகளையும் தங்களது இளமைக்கால கனவுகளையும் வெட்டி எறிந்து விட்டு எங்களுடைய இளைஞர்கள் யுவதிகளின் தியாகங்களாலும் அர்பணிப்புக்களாலும் கட்டியெழுப்பட்ட வரலாறு எம் வரலாறு. மந்திரிமனை போன்ற மரவுரிமைச் சொத்துக்களின் மகிமை எங்களுடைய மக்கள் சிலருக்கு விளங்கவில்லை. அது ஒரு கைவிடப்பட்ட பாழடைந்த மண்டபம் என்ற நோக்கில் தான் ஒரு சிலருடைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. யாமுனா ஏரிப்பகுதியில் ஒன்று கூடுகின்ற இளைஞர்கள் சிலர் மதுபானங்களை அருந்திவிட்டு அவ் போத்தல்களை உடைத்து யமுனா ஏரிக்குள் போடுகின்றார்கள். ஆக மனத்திலும் மாற்றங்கள் வேண்டும். தமிழரின் மரவுரிமைச் சொத்துக்களை பாதுகாக்கப்டவேண்டும் அதன் புனிதம் காக்கப்பட வேண்டும் என்ற மன உறுதி எம்மில் வேண்டும்.அந்தவகையில் இவ் மரவுரிமைச் சொத்துக்களை பாதுகாக்கும் யாழ்.மாநகர சபையின் முதலாவது நடவடிக்கையாக மேற்கூறித்த அறிவித்தல் பலகை நிறுவப்படவேண்டும்அத்துடன் நிறுவப்படுகின்ற செயலணி தமிழர் மரவுரிமைச் சொத்துக்களை எவ்வாறு பாதுகாப்பது, அதனை பராமரிப்பது அதனை மாநகர சபை பொறுப்பேற்பது பற்றி ஆராய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.எமது பல ஆயிரம் ஆண்டுகால தமிழ்வரலாறு புறக்கணிக்கப்பட்டு பலவந்தமாக புதைக்கப்படுவதை நிறுத்துவதற்கு இச் சபை ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.
நன்றி
வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
இப் பிரேரணையை கௌர உறுப்பினர் செல்வவடிவேல் ஆசிரியர் வழிமொழிய சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது அத்துடன் ஒரு செயலணியை உடனடியாக அமைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ReplyReply to allForward |