ஆற்றுப்படுத்தல் கற்கைச்சான்று  சுவிற்சர்லாந்து

0 0
Read Time:5 Minute, 36 Second

ஆற்றுப்படுத்தல் என்பது பல் உட்பொருள் கொண்ட ஒரு சொலாகும். மேற்குலக நாடுகளில் 700 ஆண்டுகளுக்கு மேலாக சமய ஆற்றுப்படுத்தல் சமயக் கற்கையுடன் இணைத்து வழங்கப்பட்டு வருகின்றது. 

துயர் போக்குதல், துயரத்த்தில் இருக்கும்போது அவர்களுக்கு ஆறுதல் கூறுவது அல்லது அவர்களின் துன்பத்தை குறைப்பது. உள அமைதியை அளித்தல்,ஒருவருக்கு உள அமைதியையும், உறுதியை அளிப்பது. ஆதரவளித்தல்: ஒருவருக்கு தேவையான உதவியையும், ஆதரவையும் அளிப்பது. ஓய்வு அளித்தல்: உடல் அல்லது உள ஓய்வு அளித்தல். ஈடுசெய்யுதல்: உளப்பாதிப்பிற்கு ஈடுசெய்யுதல்.

மன மகிழ்ச்சியையும், நிறைவியையும் நல்மொழியாலும் ஆறுதல் வார்த்தையாலும் அளித்தல்.«ஆற்றுப்படுத்தல்» என்ற சொல் பல்வேறு சூழல்களில் மேற்குறிக்கும் பொருளில் அமைகின்றது.

கடந்த 2021 முதன்முதலாக சுவிற்சர்லாந்து சைவத்தமிழ் அருட்சுனையராக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் பேர்ன் பல்கலைக்கழகத்தில் சமய ஆற்றுப்படுத்தலில் பட்டயம் பெற்றிருந்தார்.

இக்காலத்தில் ஆற்றுப்படுத்தல் நோக்கத்திற்காக, பல்வேறு மத சமூகங்களின் அமைப்புக்களை ஒன்றுகூட்டி «பல்வேறு சமய ஆற்றுப்படுத்தல் மன்றமம்»2021 இல் பேர்ன் மாநிலத்தில் நிறுவப்பட்டது.

நோய், இறப்பு அல்லது மருத்துவத்தங்குகைகள் ஏற்பட்டால், மக்கள் தங்கள் மத அல்லது ஆன்மீக பின்னணிக்கு ஏற்ப ஆற்றுப்படுத்தல் சேவையினை பெறுதை இம் மன்றம் நோக்காக்கிக்கொண்டது. நிறுவனர்களில் ஒருவராக சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலும் உள்ளது.

2017 ஆம் ஆண்டில், பேர்ன் நகரில் மூன்று பிராந்திய தேவாலயங்கள் மற்றும் யூத சமூகங்களின் இடைநிலை மாநாடு ஒன்றிணைந்து «மருத்துவமனைகளில் கிறிஸ்தவர் அல்லாத மத உறுப்பினர்களுக்கு மத ஆதரவு» திட்டத்தைத் தொடங்கியது.

இம்மன்றம் தகுந்த தகையுடைய தோழர்களுக்குப் ஆற்றுப்படுத்தல் பயிற்சி அளித்து, அவர்களின் பணிகளை ஒழுங்கமைத்து, உரிய இழப்பீட்டை உறுதி செய்து, அவர்களின் பணியின் தரத்தை உறுதி செய்துவருகின்றது. கடந்த 2022ம் ஆண்டு சைவநெறிக்கூடத்தின் சார்பில் ஐவர் இச்சான்றிதழ் கற்கையில் பங்கெடுத்திருந்தனர்.

இரண்டாம் கட்ட கற்கை தொடங்கப்பெற்று 21.03.2024 புதன்கிழமை பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில் கற்கைச்சான்றிதழ் அளிக்கும் விழா நடைபெற்றது. பேராசிரியர்கள் திருமதி அந்திரோய அபிரகாம், திரு. பாஸ்கால் மோஸ்லி, திரு. பிலிப் கோனிக் நெறியாள்கையில் கற்கைகள் மற்றும் கோட்பாட்டுப் பயிற்சிகள் நடைபெற்றிருந்தன. செயற்பாட்டுப் பயிற்சிக்கு கற்கையாளர்கள் மருத்துவமனைகள், மூதாளர் இல்லம் போன்ற நலன்பேண் நிலையங்களுக்கு நேரில் சென்று பட்டறிவு பெற்றனர்.

2024ம் ஆண்டின் கற்கையில் சைவநெறிக்கூடத்தின் முன்மொழிவில் முருகருசி. சிவலிங்கம் சுரேஸ்குமார், திரு. செல்லையா தர்ணன், திருமதி. மலாக ஜெயக்குமார், திருமதி லலிதா இலக்ஸ்மணன் ஆகியோர் பங்கெடுத்து சான்றிதழ் பெற்றனர்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சைவநெறிக்கூடத்தின் சார்பில் கற்கை நெறியாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பொன்னாடை அளித்து மதிப்பளிக்கப்பட்டது. சுவிற்சர்லாந்தில் தமிழ்மக்களுக்கு தமது தாய்மொழி தமிழில் சமய ஆற்றுப்படுத்தல் கிடைக்க இக்கற்கை வாய்ப்பளித்துள்ளது என முருகருசி சுரேஸ்குமார் நன்றி நவின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment