பட்டப்பகலில் 28.02.1992 அன்று ஆழ்கடலில் கடற்படையின் கடற்படைக்கலத்தை வழிமறித்து தாக்கிய கடற்புலிகள்.

0 0
Read Time:6 Minute, 42 Second

யாழ்மாவட்டம் வெற்றிலைக்கேணியில் நிலைகொணடிருந்த படையினருக்குத் பாதுகாப்பு வழங்குவதற்காக என்கிறபோர்வையில் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து வெற்றிலைக்கேணிக்குமான இடைப்பட்ட பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படையின் கரையோர ரோந்துக்கலமான சவட்டன் ஈடுபட்டுககொண்டிருந்தது.

அவ்வேளைகளில் கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள்மீது மிலேசத்தனமான தாக்குதல்களை நடாத்தி தமது வெறியாட்டத்தையும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தனர்.இதனால் அம்மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் அவர்களது இருப்பும் கேள்விக்குறியானது.இது சம்பந்தமான அனைத்துத் தகவல்களும் தலைவர் அவர்களிடம் கடற்புலிகளின் தளபதிகளால் தெரிவிக்கப்பட்டது.இது சம்பந்தமான அனைத்து விடயங்களையும் தீவிரமாக
ஆராய்ந்த தலைவர் அவர்கள் அந்த நேரம் வளர்ந்து கொண்டிருந்த கடற்புலிகளை அழைத்து கரையோர மக்களின் பாதுகாப்பிற்க்கு கடற்புலிகளாகிய நாங்களே பொறுப்பு
ஆகவே அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் இயல்பு வாழ்க்கை வழமைக்குத்திரும்ப வேண்டுமென்றால்
தாக்குதல் நடாத்தும் அவ் இலங்கைக்கடற்படையின் கரையோர ரோந்துக்கலமான சவட்டன் மீது தாக்குதல் நடாத்தி மக்களைக்காப்பாற்றுமாறு கட்டளைபிறப்பித்தார்.அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளின் கன்னித் தாக்குதலென்பதால் அதற்கேற்றவாறு தாக்குதல் திட்டத்தை கொடுத்தார்.
அதற்கமைவாக அந்தக்காலப்பகுதியில் கடற்புலிகளின் துணைத்தளபதியாகவிருந்த பிருந்தன்மாஸ்ரர் அவர்கள் தலைமையிலான அணிகள் கடற்படையின் ரோந்துகலத்தின் நடமாட்டத்தை ராடர்மூலம் கண்காணித்து தரவுகளை சேகரித்தார்கள்.அதேநேரம் சிறப்புத்தளபதி சூசை அவர்களும்
அந்தக்காலப்பகுதியில் கடற்புலிகளின் தளபதியாகவிருந்த லெப்.கேணல் கங்கைஅமரன் அவர்களும் அந்தக்காலப்பகுதியில் கடற்தாக்குதல் தளபதியாகவிருந்த லெப்.கேணல் சாள்ஸ் அவர்களும் இது கடற்புலிகள் முதலாவதாக நடாத்தும் தாக்குதலென்பதால் தலைவர் அவர்கள் கொடுத்த தாக்குதல் திட்டத்திற்கேற்ப அனைத்து வேலைகளையும் திறம்படசெய்துமுடித்தார்கள்.பிருந்தன்மாஸ்ரின் ராடர் மூலமான வேவுத்தகவல்களின் அடிப்படையில்
28.02.1992 அன்று மதியம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து வெற்றிலைகேணிப் படைமுகாமை நோக்கி வந்த இலங்கைக் கடற்படையின் கடற்கலமான சவட்டன் மீது யாழ்ப்பாணம் தாழையடி கடற்பரப்பில் வழிமறித்துத் தாக்குதல் நடாத்தினார்கள்.இச் சமர் சுமார் இரண்டு மணித்தியாலயம் நீடித்த இக்கடற்சமரை கடலில் தளபதி கங்கைஅமரன் அவர்களும் தளபதி சாள்ஸ் அவர்களும்
வழிநாடாத்தினார்கள்.
இவ் அனைத்து நடவடிக்கைகளையும்
சிறப்புத் தளபதி சூசை அவர்களும்
துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரும் தாழையடி பிரதேசத்திலிருந்து வழிநடாத்தினார்கள்.
அந்தநேரம் படகுகளை இறக்குவதற்க்கு இயந்திரவலு இல்லாததால் பொதுமக்களே வெற்றிலைக்கேணி முகாமிலிருந்து தாழையடிப் பிரதேசம் நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கும் மத்தியில் படகுகளை இறக்கி ஏற்றி
பாதுகாத்தார்கள்.
இவ்வெற்றிகரத்தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
வெவ்வேறு பிரதேச கடலனுபவம் கொண்ட கரையோர மக்களை ஒன்றினைத்து இக்கடற்சமருக்கான படகுகளை இறக்கி ஏற்றி விழுப்புண்ணடைந்தவர்களையும்
வீரச்சாவடைந்தவர்களையும்.கடுமையான எறிகணைத்தாக்குதலுக்கும் மத்தியிலும் கரையோரமக்களின் பூரணபங்களிப்புடன் குறிப்பிட்டநேரத்திற்க்குள் செவ்வனவே செய்து முடித்தார்.
லெப்.கேணல் மறவன் மாஸ்ரர்.எனவே சாதகமற்ற களமாக இருந்தாலும் மக்களுக்காக எதையும் செய்யத் தயாராகவிருந்தார்கள் கடற்புலிகள்.
இத்தாக்குதல் மூலம் ஆழ்கடலிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தினால் இதுதான் நடக்கும் என சிங்கள அரசாங்கத்திற்க்கு எடுத்துரைத்தனர் கடற்புலிகள்.
இத்தீரமிகு தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகள் விபரம் வருமாறு.

கப்டன் .தமிழரசன்.
பரமகுரு உதயகுமார்.
வீரப்பிறப்பு:14.04.1973
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் சஞ்சீவன்
வைரமுத்து ஜெயேந்திரன்
வீரப்பிறப்பு:04.06.1972
மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

2ம் லெப்டினன்ட் ஆனந்தன்
அழகன் அண்ணாத்துரை
வீரப்பிறப்பு:16.08.1970
புனிதநகர், உடுத்துறை, யாழ்ப்பாணம்

2ம் லெப்.சிவலோகநாதன்.
வேலாயுதபிள்ளை விக்னேஸ்வரன்
வீரப்பிறப்பு:21.03.1972
தாளையடி, உடுத்துறை, யாழ்ப்பாணம்

இவர்களது படங்களும் இனைக்கப்பட்டுள்ளது.
அன்றைய களத்திலிருந்தவர்களுடன்.

எழுத்துருவாக்கம்.சு.குணா.
திகதி.11.04.2021

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment