வங்கக் கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

0 0
Read Time:1 Minute, 58 Second

வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு சுமந்து 27 வது தடவையாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட வளர்ந்தோர் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்மாதம் ஆறாம் திகதி Aargo Seon நகரில் சிறப்பாக நடைபெற்றது.

பொதுச்சுடர்,ஈகைச்சுடர் ஏற்றலை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

காலை எட்டு முப்பது மணிக்கு ஆரம்பமாகிய ஆட்டங்கள் இரவு 9 மணி வரை நடைபெற்று பரிசளிப்புடன் இனிதே நிறைவுபெற்றது.இளையோர் மற்றும் பெண்கள் அணிக்கான போட்டிகள் எதிர்வரும் 14.01.2024 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

சுற்றுப்போட்டி முடிவுகள்

· முதலாம் இடம் : யங்பேட்ஸ் விளையாட்டுக்கழகம் லுசேர்ன்

· இரண்டாம் இடம் : யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் லீஸ்

· மூன்றாம் இடம் : புளுஸ்ரார் விளையாட்டுக்கழகம் லவுசான்

· சிறந்த விளையாட்டு வீரர் : செல்லத்துரை நிஷாத் யங்ஸ்ரார் வி.க

· சிறந்த பந்துகாப்பாளர் : ஜோர்ச் லிப்பாஸ்கி யங்பேட்ஸ் வி.க

· இறுதி ஆட்ட நாயகன் : விஜயராஜா தனுசன் யங்பேட்ஸ் வி.க

· அதிக இலக்குகளை அடித்த வீரர் : தங்கராசா ஆகாஷ் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம்

தமிழீழ விளையாட்டுத்துறை

சுவிஸ் கிளை

11.01.2024

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment