முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மீதான இலங்கை முப்படையின் முற்றுகையும் அதற்கெதிரான விடுதலைப்புலிகளின் ஊடறப்புத் தாக்குதலும்.

2 0
Read Time:7 Minute, 30 Second

இலங்கை இராணுவத்தின் 53;55.57.58 மற்றும் 59ஆவது டிவிசன்கள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டு இறுதிப் போருக்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை எதிரியின் இத்திட்டத்தைமுறியடிப்பதற்கான சிறந்ததொரு தாக்குதல் திட்டமொன்றை தேசியத் தலைவர் அவர்களால் மூத்த தளபதி சொர்ணம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

திட்டத்தின்படி அப்போது தேவிபுரம் பகுதியை இலங்கை இராணுவத்தின் 57மற்றும் 58ஆவது டிவிசன் படைகளை முற்றுமுழுதாக ஆக்கிரமித்து இருந்தனர்.இவ் ஆக்கிரமித்த பகுதிக்குள்முல்லைத்தீவு சாலையிலிருந்து ஊடுருவி படையினருக்கெதிராக பாரிய தாக்குதலைத் தொடுத்து தேவிபுரம் பகுதியைக் கைப்பற்றி பின்னர் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியூடாக புதுக்குடியிருப்பை நோக்கி ஒரு அணியும் தேவிபுரம் உள்வீதியூடாக இரணைப்பாலை நோக்கி மற்றுமொரு அணியும் நகரும் அதேசமயம் இவர்களுடன் சென்றவர்களும் ஏற்கனவே இராணுவம் ஆக்கிரமித்த பகுதிக்குள் நின்ற கேணல்.கிட்டுப்பீரங்கிப் படையனிப் போராளிகள் மற்றும் கரும்புலிகள் அணியும் விசுவமடு தேராவில் பகுதிக்கு ஊடுருவி சென்று அங்கு நிலைநிறுத்தப்பட்ட ஆட்லறிகளுக்கு பாதுகாப்புக்கு நிற்க்கும் படையினர் மீது தாக்குதல் நடாத்தி ஆட்லறிகளை கைப்பற்றி கரும்புலிகள் கொடுக்க கேணல்.கிட்டு பீரங்கிப் படையினர் அவ் ஆட்லறிகளை பயன்படுத்தி இணங்காணப்பட்ட இலங்கைப் படைத்துறை நிலைகளுக்கு தாக்குதல் நடாத்தி இவ் ஊடறப்புத் தாக்குதல் அணிகளுக்கு வலுச்சேர்ப்பார்கள்.அதுமட்டுமல்லாமல் அங்கிருக்கும் மோட்டார்நிலைகளைக்கைப்பற்றி அங்கிருக்கும் மோட்டார்களைக் கொண்டு படையினருக்கெதிராகத் தாக்குதலை நடாத்தி அங்கிருக்கும் படையினரை அழித்து இம்முற்றுகையிலிருந்து மீண்டெழுவதேஇத் தாக்குதல் திட்டமாகும்.இத் தாக்குதல் பற்றி தான் வீரச்சாவடைந்தால் தனது உடலைத் தாண்டி தனக்கு அடுத்த நிலையில் இருந்த கட்டளைத் தளபதி லோறன்ஸ் அவர்கள் அணிகளை வழிநடாத்தவேண்டும் என அணித்தலைவர்களிடம் தெளிவாக கூறினார் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள்.அத்துடன் மருத்துவர் காந்தன் அவர்களோடு வரும் அணிகள் காயமடைகிறவர்களுக்கு சிகிச்சையளிப்பார்கள் என்றும் கூறினார்.தேசியத் தலைவர் அவர்கள் கொடுத்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் மற்றும் கணனிப் பிரிவுச் சிறப்புத் தளபதி சாள்ஸ் அன்ரனி அவர்கள் மற்றும் தளபதிகள் பொறுப்பாளர்கள் தலைமையில் தொளயிரம் ஆண் பெண் போராளிகள் 08.03.2009 அன்று அதிகாலை கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதியில் உள்ள சாலையிலிருந்து தேவிபுரம் பகுதிக்குள் ஊடுருவியிருந்தார்கள்.ஊடுருவிய அணிகள் அங்கு பல்வேறு தாக்குதல்களை கிட்டத்தட்ட தொடர்ந்து மூன்று நாட்களாக இலங்கை இராணுவத்திற்க்கு எதிராக படைகட்டுபாட்டுப் பகுதியில் நின்று உறுதியோடு களமாடினார்கள்.இவர்களுகான வழங்கல் நடவடிக்கைக்காக இரணைப்பாலை பகுதியிலிருந்து கட்டளைத் தளபதி ரமேஷ் அவர்களின் தலைமையில் ஒரு அணி உள் நுழைந்திருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைமையிலான அணியுடன் ஒரு வழங்கல் பாதையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது அம்முயற்சி வெற்றயளிக்கவில்லை.இவர்களுடன் சென்ற கேணல்.கிட்டு பீரங்கிப் படையணியினர் மற்றும் கரும்புலிகள் அணியினர் தங்களுக்கு கொடுத்த பணியினை செவ்வனவே செய்து முடித்தார்கள்.இவ் இராணுவநடவடிக்கையை களத்தில் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் வழிநடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் மூத்த தளபதி பொட்டு அவர்கள் ஒருங்கினைக்க மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடாத்தினார்.இவ் ஊடறப்புச் சமரை களத்தில் வழிநடாத்திய மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் பாரிய விழுப்புண்ணடைந்ததாலும் பிரதான வழங்கல் பாதையை கைப்பற்றமுடியாமல்போனதாலும் இச் சமர் வெற்றியளிக்காமல்போனதாலும் போராளிகள் தமது தளங்களுக்கு திரும்பினார்.இதனால் ஏற்பட்ட பலத்த சேதத்தினால் இராணுவம் தன்னைப் புதுப்பித்து பின்நிலைகளைப் பலப்படுத்தி முன்னேற கால அவகாசம் ஏற்பட்டது.இக்கால அவகாசத்தை பயன்படுத்தி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள புலிவீரகள் தங்களது நிலைகளை பலப்படுத்தினார்கள்.இவ் ஊடறப்புச் சமரை களத்தில் வழிநடாத்திய மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் இரண்டாம் நாள் படுகாயம் அடைந்தார்.தொடர்ந்து அணிகளை கட்டளைத் தளபதி லோறன்ஸ் அவர்களும் கணனிப் பிரிவுச் சிறப்புத் தளபதி சாள்ஸ் அன்ரனி அவர்களும் அணிகளை வழிநடாத்தி அணிகளையும் பாதுகாப்பாக சாளைத்தளத்திற்கும் பின்னகர்த்தினார்கள்.இவ் இராணுவ நடவடிக்கையில் சாள்ஸ் அன்ரனி அவர்களும் காயமடைந்தார்.இத் தாக்குதலில் …..லெப் .கேணல். மூர்த்தி அவர்கள்.லெப்.கேணல். டட்லி. அவர்கள்.லெப் .கேணல்…தமிழின் அவர்கள்.லெப் .கேணல் ..காந்தன் அவர்கள் இவர்களுடன் சேர்ந்து இன்னும்பல போராளிகள் வீரச்சாவடைந்தார்கள்.இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோமாக…

எழுத்துருவாக்கம். சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment