இரண்டாவது ஆண்டாக மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் -2021

0 0
Read Time:1 Minute, 59 Second

‘மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இரண்டாவது ஆண்டாக எதிர்வரும் கார்த்திகை 20,21 ஆம் நாட்களில் நடாத்தப்படவுள்ளது என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.
தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என மூன்று மட்டங்களில் இத்திறனறிதல் நடாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் நடத்தப்படும் இத்திறனறிதலின் முடிவில் பங்குபற்றுபவரின் மின்னஞ்சலுக்கு சான்றிதழ்கள் உடனடியாகக் கிடைக்கப்பெறும் வகையிலான புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஊடகங்களில் வெளியிடப்படும்.

மாவீரர் நாளையொட்டி நடத்தப்படும் இத்திறனறிதலில் தமிழீழப் போராட்டம் தொடர்பான பரந்துபட்ட கேள்விகளும் பன்னாட்டுப் போராட்டங்கள் சார்ந்த கேள்விகளும் இருக்கும் என்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

‘வரலாற்றைப் படி! வரலாற்றைப் படை’ எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய இளையோரிடத்தேயும் பொதுமக்கள் மத்தியிலும் எமது இனம் சார்ந்த சரியான வரலாற்றை புதிய தொழில்நுட்பத்தூடு கொண்டு செல்வதே இத்திறனறிதலின் நோக்கம் எனவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment