சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய தமிழர் திருநாள்

0 0
Read Time:2 Minute, 45 Second

சுவிஸ் நாட்டின் வோ மாநிலத்தின் லவுசான் நகரில் கடந்த 21.01.2024 திகதி தமிழர் திருநாள் சிறப்புற இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து மற்றும் வோ மாநில பழைய மாணவர் சங்கம், லவுசான் தமிழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இத்திருநாள் தமிழரின் மரபுவழிப் பண்பாட்டின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய செயற்பாடுகளை தமிழ் இளையோர் அமைப்பு வருடம்தோறும் மேற்கொண்டு வருகின்றமை இதில் பிரதான விடயமாகும்.

இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளில் மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் பொங்கல் பொங்குதல், பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் ஆகியவை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள், கோலம் போடும் போட்டி, சிறியவர்கள், பெரியவர்களுக்கான முட்டி உடைத்தல் போட்டி, கயிறு இழுத்தல், பொதுவான கலை கலாச்சார நிகழ்வுகள், தமிழர் மரபு,வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை தெளிவு படுத்தும் விதமான குறுக்கெழுத்து விளையாட்டும், கேள்வி பதில் விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தது. அரங்கம் நிறைந்த மக்களுடன் இந்நிகழ்வான சிறப்புற நடந்து முடிந்திருந்தது.

தமிழர் என்ற பெருமிதத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடிய தமிழர் திருநாள் நிகழ்வானது தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிறைவுற்றது.

தமிழர் திருநாள் 2024 சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய ஆதரவாளர்கள், இன உணர்வாளர்கள், இளையோர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து

பொறுப்பாளர்


Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment