அமைதிக்கான பெண்கள் நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கும் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த Hilde எனும் பெண்மணி.

0 0
Read Time:4 Minute, 38 Second

எல்லோரையும் போல Hilde (ஹில்ட)வும் முதலில் தவிபு களைத் “தீவிரவாதிகளாகவே” நினைத்தவர். ஆனால் 2018 இல் சுவிசு நாட்டில் தவிபு விற்கு நிதிதிரட்டியவர்கள் மீதான வழக்கில் மொழிபெயர்ப்பாளராக வந்தபிறகு, அவ்வழக்கில் முழுமையாக ஆழமாகப் பணிபுரிந்தபிறகு தவிபு களை ஆழமாக உள்வாங்கியவர். இன்று தவிபு களை அழித்த அதே மேற்குலகிற்கு எதிராக நடைப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்தளவிற்கு அவர் ஆழமாக தவிபு களை நேசிக்கக் காரணம், மென்டிஸ் அவர்களது கற்பித்தலே ஆகும்.

English, French, Deutsch மற்றும் அவரது தாய்மொழியான Dutch ஆகியமொழிகளில் நன்கு தேர்ச்சிபெற்றவர். இயற்கையை நேசிப்பவர். காடுகளிலும், மலைகளிலும், மகிழ்ச்சியைத் தேடுவது அவர் வாழ்வின் பெரும்பயனாகக் கருதுபவர்.

“தமிழினப்படுகொலை” என்ற சொல்லைப் பிறர் உச்சரித்தாலோ, அன்றி அவர் உச்சரிக்கவேண்டி ஏற்பட்டாலோ இயல்பாகவே கலங்கிஅழும் மனநிலையுடைய பெண். சாகும்வரை தமிழினத்திற்காகப் போராடுவதே என் கடமை எனச் சொல்லிக்கொண்டிருப்பார்.

ஈழத்தமிழர் மீது அமெரிக்க, பிரித்தானிய அரசுகள் பின்புலமாக நின்று நிகழ்த்திய படுகொலைகளை நன்கறிந்தவர். இப்பொழுது லெப்.கேணல் திலீபனை உள்வாங்கியதன் மூலமே, இந்த நடைப்பயணத்தை லெப்.கேணல் திலீபன் உண்ணாதிருந்து போராடிய காலப்பகுதியில் நடாத்தவேண்டுமெனத் திட்டமிட்டார்.

“தவிபு களுக்கு நிதிதிரட்டியது எமது உரிமை” என எதிர்வழக்காடும் நாதன்தம்பி, ஆனந்தராஜா ஆகியோருக்கான வழக்குகளிலும் ஆலோசகராக இருக்கிறார். தண்டனைக்கு அஞ்சி, நீதிமன்றில் மண்டியிட்டு மன்னிப்புக்கோரி, தவிபுகளைத் தீவிரவாதிகளாக்கிய தமிழர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம், அவர்கள் “தவிபு களை ஆழமாக நேசிக்காமையே” என்ற உளவியலை நன்கு புரிந்தவர்களில் Hilde முக்கியமானவர்.

Berlin தீர்ப்பாயம் நடைபெற்றபோது முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திப் பணிபுரிந்த Hilde, அங்கு தேவைப்பட்ட நிதியின் பங்கிலும் காத்திரமான உதவியைச் செய்தவர். இத்தனைக்கும் அடிப்படை ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை அவர் ஆழமாக நேசித்ததேயாகும்.

தமிழீழத்தில் அமைதிநிலவவேண்டும் என்ற குறிக்கோளோடு செயற்பட்ட முன்னாள் யேர்மனிய வெளியுறத்துறை அபிவிருத்தி அமைச்சரான Heidamarie wickzorec zeul இடம் கையளிப்பதற்காக தனது நடைப்பயணத்தில் சந்திக்கும் தமிழ்ப்பெண்களிடம் அறியும் கதைகளை Hilde “நாட்குறிப்பாக” ஒவ்வொருநாளும் எழுதிவருகிறார்.

நடைப்பயணத்தில் பங்குபெறவியலாத, உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்ப்பெண்களாகிய அனைவரும், ஈழத்தமிழ்ப்பெண்கள் மீது சிறிலங்கா, இந்திய இராணுவத்தினர் நடாத்திய படுகொலைகள், பாலியல்வன்புணர்வுச் சம்பவங்கள், வன்முறைகளைக் கடிதமாக எழுதி அனுப்பவேண்டுகிறோம். உங்களது கடிதங்களும் Hedamarie wickzorec Zeul அவர்களிடம் கையளிக்கப்படும்.

மின்னஞ்சலூடாக கடிதங்களை அனுப்பமுடியும், ஆனால் கையால் எழுதி,கையெழுத்திட்டு, படியெடுத்து, மின்னஞ்சலூடாக அனுப்புவதே சிறந்தது.

யேர்மனிவாழ் ஈழத்தமிழர்களே, Hilde வுடன் இணைந்து ஒருநாளாவது நடைப்பயணம் மேற்கொள்ள உங்களை அழைக்கிறோம்.

செயலே முதன்மையானது…!

அமைதிக்கான பெண்கள் நடைப்பயணம் – 4 ஆம் நாள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment