Wiesbaden நோக்கிய அமைதிக்கான பெண்கள் நடைப்பயணம் – நாள் 3

0 0
Read Time:2 Minute, 12 Second

“கோபப்படுவதால்” எதுவும் நிகழ்ந்துவிடாது. கோபம் கழிந்ததும் நாம் எமது இயல்பு வாழ்விற்குத் திரும்பிவிடுவோம், ஆனால்; போராடப் புறப்பட்டால், தமிழினப்படுகொலைக்கான குற்றத்தை இங்குள்ள அரசுகள் மீது சுமத்தினால் தடைகளும் பிரச்சனைகளும் குறுக்கேவரும். சிறைசெல்லவேண்டிவரும்.

என்னைப்பொறுத்தவரை, என்னைச் சிறையிலடைத்தால் நான் வெளியேவரும்போது இப்போது இருப்பதைவிட பலமடங்கு உறுதியுடன் வெளியேவருவேன். நான் உள்ளேபோனால் எவ்வித வேலையும் செய்யத்தேவையில்லை, நாடுகடத்தப்படும் தமிழர்களுக்காக நான் போராடவேண்டியதில்லை. அதனால் சிறை செல்ல நான்பயப்படுவதில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரத்தை விடவா இங்கே கொடுமை நிகழப்போகிறது. நாம் சாகவில்லையே, அத்தோடு இங்கே போராட நிறைய வழியிருக்கிறது. சிறிலங்காவில் இதைச் செய்யவியலாது, கொன்றுவிடுவார்கள்.

“தவிபு களுக்கு நிதிதிரட்டியது” எனது உரிமை என வழக்காடும் ஆனந்தராஜா அவர்கள் வதிவிட அனுமதியைப் பறிப்பதற்காக யேர்மனிய அரசு முயல்கிறது. நாடுகடத்த முயல்கிறது, அதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை. எமது அமைப்பின் இணையத்தளத்தை, வங்கிக்கணக்கை, பொதுமக்களின் உதவிகளைப் பெறும் Gofundme இணைப்பை என அனைத்தையும் யேர்மனிய அரசு முடக்கிவிட்டது. எமது அலுவலகம் உடைக்கப்பட்டு அனைத்தும் எடுத்துச்செல்லப்பட்டது. ஆனாலும் நாம் நிற்கிறோம்.

நாம் தொடர்ந்து அஞ்சாது போராடுவோம்.

  • விராஜ்மென்டிஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment