பிரான்சில் இடம்பெற்ற தாயக விடுதலைக்கு உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

0 0
Read Time:1 Minute, 41 Second

தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்து உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு நேற்று (12.02.2023) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு திரான்சி நகரில் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் நினைவுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.தாசன் அவர்கள் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழக சுரத்தட்டு (கீபோட்) வாத்தியக் கலைஞர் திரு.பபா அவர்கள் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் வாணி ஜெயராம் அவர்களின் திருஉருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து வாணிஜெயராம் அவர்களின் நினைவுசுமந்த பாடல்கள், கவிதை மற்றும் நினைவுரைகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.

(படங்கள் : யூட்,வினுயன்)

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment