பேர்ன் – சுவிற்சர்லாந்து அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்நாட்காட்டி 2023

பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் நாட்காட்டி பதிப்பெடுத்து சிலைத்திங்கள் நடுப்பகுதியில் எமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் விடுப்பு எடுப்பதற்கு வாய்ப்பாக இவ்வடிவடிவத்தில் நாட்காட்டி பகிரப்படுகின்றது.

மேலும்

30 ஒக்டோபர் 1995 யாழ்ப்பாண வரலாற்று இடப்பெயர்வு நாள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமத்தில் இருந்து 600,000இற்கும் அதிகமான மக்கள் வெளியேறி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 26 வருடங்களாகின்றன. கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி, அதாவது இதேபோன்ற ஒரு நாளில் இரவோடிரவாக அம்மக்கள் வெளியேறிய சந்தர்ப்பத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

மேலும்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரான்ஸ்.

மேலும்

தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும் ..

தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும் கடந்த 22.10.2022 தொடக்கம் 24.10.2022 வரை சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்னில் (Bern)தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

தியாகதீபம் திலீபன் போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் ஞாபகார்த்தமாக தியாகதீபம் திலீபன் ஏற்பாட்டுக்குழுவினால் செப்ரெம்பர் 24 மற்றும் 25ம் திகதிகளில் நல்லூரில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மேலும்

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்…. ​22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான்.

மேலும்

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான 21கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்!

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

மேலும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்

1987 ஒக்டோபர் 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் 21 வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 68க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

மேலும்

பிரான்சில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு!

பிரான்சில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு.

மேலும்