ஐக்கிய நாடுகள் சபையின் 51வது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்மானத்தின் சாதக பாதக தன்மை-திருமதி. அனந்தி சசிதரன்

0 0
Read Time:10 Minute, 50 Second

*சுரேன் குருசாமி எடுத்த 13ம் திருத்தச்சட்ட நிலைப்பாட்டை எந்த இடத்திலும் தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் சுமந்திரனைவிட சுரேந்திரன் குருசாமி மிகவும் ஆபத்தானவர் அதற்காக நான் சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கவில்லை……. திருமதி. அனந்தி சசிதரன்.

இலங்கையில் ஏற்பட்ட இனப்படு கொலைக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குமான நீதி கோரியும், இதே சூழ்நிலையில்  அன்புக் கணவனை இழந்ததும்  இவ்வாறு தமிழ் மக்களுக்கான நீதிகோரி சுமார் 11 வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தில் பங்கு கொள்கின்ற இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பின் இணைத் தலைவர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் 51வது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்மானத்தின் சாதக பாதக தன்மை பற்றிய ஒரு நேர்காணலை வழங்கியுள்ளார்.இக் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
*ஐக்கிய நாடுகள் சபையின் 51வது கூட்டத் தொடரில் தமிழர் சார்ந்து வழங்கப்பட்ட தீர்மானத்தின் சாதக பாதக தன்மை* பற்றிய கேள்விக்கு அவர் வழங்கிய பதில்
நான் ஒரு போர் சாட்சியாக இருக்கின்ற காரணத்தினால் 2014ம் ஆண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஐ நா சபை கூட்டத் தொடரில் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட தரப்பாக எங்களது நிலைப்பாட்டை பேசியுள்ளேன். இன்று 51வது கூட்டத் தொடரில் வழங்கப்பட்ட தீர்மானத்தை நான் பாதகமாகத்தான் பார்கின்றேன். ஏன் என்றால் இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையின்படி தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையாக ஒட்டுமொத்த இலங்கையராகத்தான் பொருளாதார பிரச்சனைக்கு குரல் கொடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் அப்படியல்ல வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் உரிமைக்காகத்தான் போராடினார்களே தவிர சிங்கள மக்களின் சாப்பாடு போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. 70 வருட இன அழிப்பு பிரச்சினைக்கான தீர்வை தனியாக பாரக்காமல் பொறுப்பு கூறவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து கேட்டுக் கொண்டு வந்த இடத்தில அப்படியே அமரவிட்டு பொருளாதார நெருக்கடியை பற்றி கூறுவதும் சிறுவர் நலம் சார்ந்து அவர்களின் பாதுகாப்பு தொடர்பான ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதன் ஊடாக சிறுவர் ஆட்சேர்ப்பு தொடர்பான விடுதலைப் புலிகளின் மீது ஒரு வழக்குத்தொடுக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஒரு அச்சம் எழுகின்றது.அத்துடன் இந்தியாவுடன் சேர்ந்து சில தமிழ் அமைப்புக்களும் இணைந்து 13 திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கொண்டுவந்துள்ளது. இது மிக பிழையான ஒரு விடயம். இனியாவது தமிழர்கள் ஒன்றிணைந்து ஆக குறைந்த பட்சம் சமஷ்டியாவது வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
*நீங்கள் கூட்டுக்கட்சியில் இருக்கின்றீர்கள். கூட்டுக்கட்சியை தலைவர் திரு. விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் கூட திரு. மோடிக்கு அனுப்பிய 13 திருத்தசட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன*?.
13 திருத்தச் சட்டம் ஏற்றுக் கொள்கின்றவர்களது அரங்கிலிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. நான் 13 ஐ நிராகரிக்கின்றேன். அது எங்களுக்கான தீர்வு அல்ல என நான் பல இடங்களில் கூறுகின்றேன். அவர் தலைவராக இருந்தும் இந்த பேச்சு வார்த்தை விவாதங்களில் என்னை அழைக்காமல் தன்னிச்சையாக செயற்படுகின்றார். தமிழ்கூட்ணியில் கூட ஒரு அக முரண்பாடு இருக்கின்றது. எனவே அவரது தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன்.
*திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முதல்தடவையாக வலியுறுத்துகின்றோம் என கூறினார்.*13ம் நம்பர் திருத்த சட்டம் என்றால் என்ன?. இந்த ஒப்பந்தத்தினை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.*
கௌரவ திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழர்களின் தீர்வு தமிழீழம்தான்என்ற நிலைப்பாட்டை உடையவர். அவர் எப்போதுமே உரையாற்றுகின்ற பொழுது தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்றுதான் கூறுவார். மாறான நிலைபாட்டை எடுத்தவர் அல்ல.ஆனால் அவரின் தலைமைகள் திரு. ஶ்ரீகாந்த, திரு. விக்னேஸ்வரன், திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் எல்லோரும் சேர்ந்து 13ம் திருத்தச்சட்டத்தினை விவாதிக்கும் பொழுது அவர் மௌனமாகவே இருந்திருக்கின்றார். இதற்கு அவர்கள் சொன்ன நிலைமை விடுதலைப்புலிகள் மௌனித்த பிறகு எங்களுக்கு இருந்த ஒரே பிடி 13ம் திருத்தச்சட்டம் ஒன்று ஏற்கனவே இச் சட்டம் இருந்திருந்தால் யுத்தம் முடிந்தவுடனே இந்திய அரசு அப்பொழுதே கேட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் அதை பற்றி கேட்கவில்லை. இப்போது அவர்கள் கேட்பது பொறுத்தமற்றது.எங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை நாங்கள்தான் கேட்க வேண்டும்.
*ஆனால் தமிழரசுக்கட்சி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வலியுறுத்தவில்லையே *
அந்த நேரம் தமிழரசுக்கட்சிக்கும் ரெலொவிற்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர்கள் கேட்கவில்லை.
*ஐ நா திடலுக்கு ரெலோ பேச்சாளர் சுரேன் குருசாமி வந்த பொழுது ஒரு கலகலப்பு ஏற்பட்டது. அதன் பின்பு வெளிநாட்டிலுள்ள சில இயக்க ஆதரவாளர்கள் கூறியிருந்தனர் திரு. சுமந்திரனை விழுத்துவதற்குத்தான் திரு. சுரேந்திரனை அவர்களை கொண்டுவந்திருப்பதாக இதில் என்ன நிலைப்பாடு இருக்கின்றது. உங்கள் கருத்து என்ன?. *
இதில் உங்களுக்கே தெரியும் திரு. சுரேந்திரன் குருசாமி அண்மைக்காலமாகத்தான் அரசியலில் வெளிப்படுகின்றார். ஒருபோதும் மக்களுடைய தமிழ் மக்களுடைய நலன் சார்ந்து அவர்கள் முரண்பாடு எழவில்லை. ஏதோ தனிப்பட்ட தங்களுடைய கட்சி அல்லது தனிப்பட்ட தங்களுடைய அதிகாரப் போட்டி காரணமாகத்தான் போட்டி உருவாகியிருக்கின்றது. எனவே நாங்கள் இவர்களது அதிகாரப் போட்டியினை பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. என்னுடைய கணிப்பின்படி திரு. சுரேன் குருசாமி அவர்கள் எடுத்துக் கொண்ட 13 ம் திருத்தச்சட்டத்தின் ஏற்றுக் கொள்கின்ற நிலைப்பாட்டிலிருந்து தமிழரசுக்கட்சி மாறி ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றது.  திரு. சுமந்திரனைவிட மிக ஆபத்தானவராக திரு. சுரேன் குருசாமி அவர்களைப் பார்க்கலாம். ஏன் என்றால் அவருடைய பல பக்கச் செயற்பாட்டில் தெரிந்து கொள்ள முடிக்கின்றது.
*நீங்கள் திரு. சுமந்திரனைவிட மிக ஆபத்தானவராக திரு. சுரேன் குருசாமி அவர்களைப் பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது எவ்வகையிலான ஆபத்தாக கருதுகின்றார்கள். தனிப்பட்ட அரசியல் ரீதியாகவா அல்லது தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயத்திலா?. *
எங்களுடைய மக்களுடைய அரசியல் ரீதியாக. அதற்காக நான் திரு. சுமந்திரன் அவர்களுக்கு வெள்ளையடிக்கின்றேன் என்பதல்ல. அவரும் எங்களுக்கு எதிரான செயற்பாட்டினை இலங்கை அரசுடன் சேர்ந்து செய்திருந்தார். இப்பொழுதும் அவரது அறிவு எங்களுக்கு பாதகமாகத்தான் அமைகின்றது. இருந்த போதிலும் ஒப்பீடு அடிப்படையில் திரு. சுமந்திரனைவிட மிக ஆபத்தானவராக திரு. சுரேன் குருசாமி அவர்களைப் பார்க்கலாம்.    
*நீங்கள் ஐ நா சார்ந்து அல்லது அரசியல் சார்பாக மக்களிடம் ஏதாவது கூற விரும்புகின்றீர்களா*?.
உண்மையில் அரசியல் பற்றி பேசுகின்ற பல பக்கங்கள் தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளை உற்றுப் பார்க்க வேண்டும். அதன் பின் இதனை பற்றி பேச வேண்டும்.ஒரு ஆழமான ஆய்வு ஒன்று மக்களுக்கு இருக்க வேண்டும்.
நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment