பிரான்சில் தியாக தீபம் நினைவு சுமந்த சிறப்பு அறிவாய்தல் அரங்கிற்கு அனைவருக்கும் அழைப்பு!

0 0
Read Time:3 Minute, 0 Second

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழியல் இளங்கலைமாணிப் (BA) பட்டகர்களால் நடாத்தப்படும் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு ஆறாவது ஆண்டாக எதிர்வரும் *ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.01 மணிக்கு Le Blanc Mesnil Ecole Jean Jaurès 15 Ave jean Bart 93150 Le blanc Mesnil * எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

ஆய்வு இதழ் வெளியீடு :

பட்டகர்கள் பல்வேறுபட்ட தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றைத் தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பு இருந்த காலப்பகுதியில் அவரின் பெயரால் நடத்தப்படும் அறிவாய்தல் அரங்குகளில் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் இந்த ஆய்வுக்கட்டுரைகள் தமிழ், பிரெஞ்சு மொழிகளில் நூலாகவும் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு ஆய்வுகளை மேற்கொண்ட ஆறு பட்டகர்களில் பிரான்சில் பிறந்து தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ் பயின்று பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களும் அடங்குகின்றனர். இது தமிழ் இனம் சார்ந்த ஆய்வுத்தளத்தின் அறிவியல் பாய்ச்சலின் படிமலர்ச்சியாகக் கொள்ளப்படுகிறது.
அரசியல்,மொழி,பண்பாடு,குமுகம்,பெண்ணியல் தளங்களில் பன்மொழி அறிவுடைய இளையோரின் பங்களிப்பு எதிர்காலத்தில் முழுவீச்சுடன் இருப்பதற்கான முதற்புள்ளியாக இது கருதப்படுகிறது.
மேலும், இவ்வாண்டு Le Blanc Mesnil நகரசபையின் ஆதரவுடனும் தமிழ்ச்சங்கத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெறவுள்ளது.

தியாக தீபம் ஆய்வரங்கில் *தாயக எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார் * அவர்களின் பொன் வண்டு சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வும் நடைபெறவுள்ளது.

ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து 1998 இல் தங்க விருது பெற்றவர். புயலை எதிர்க்கும் பூக்கள், மனிதர்கள் போன்ற பல சிறுகதைத் தொகுப்புகளையும் புள்ளிகள் கரைந்த பொழுது உட்பட பல புதினங்களையும் எழுதியுள்ளதோடு புலிகளின் குரல் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். தேசியப் பாடல்கள் அடங்கிய இறுவட்டுகளும் இவரின் படைப்பில் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment