பேர்ன் மாநில ஞானலிங்கேச்சுரத்தில் அமைச்சர்கள் – சுவிஸ்

0 0
Read Time:8 Minute, 16 Second

சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் பல்சமய இல்லம் அமைந்துள்ளது. எண் சமயங்கள் ஒன்றாக ஒரு திடலில் இருப்பது இதன் சிறப்பாகும்.

14.12.2014ம் ஆண்டு பல்சமய இல்லம் திறப்பு விழாக் கண்டிருந்தது. 01.02.2015 அன்று சமயக்குரவர்கள் நால்வர் கோபுரத்தில் எழுந்து தமிழ் பாடும் காட்சியுடன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் செந்தமிழ் திருமறையில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா கண்டிருந்தது.
எண் சமயங்களும் ஒரே கூரையில் அருகருகாக இருந்தபோதும் ஒவ்வொரு சமய மன்றங்களும் கட்டற்று தனித்தனியாக தத்தமது கொள்கைகளுடன் இயங்கி வருகின்றன.
சுவிற்சர்லாந்து நாட்டின் பொதுச் சட்டத்தின்படி சமய அமைப்புக்களுக்கு நிதிக்கொடை மாநில அல்லது நடுவன் அரசால் அளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மன்றமும் தத்தமது மக்களது கொடையில் இயங்கி வருகின்றன.
பல்சமய இல்லத்தில் பங்காளராக உள்ள சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்து அரசினால் சைவத் தமிழ் மக்களது சார்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்மக்களின் சமூக வாழ்விற்கு தமது பங்களிப்பினை அளித்து வரும் பொதுமன்றம் ஆகும். கருவறையில் தமிழ் ஒலிக்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திரு. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் முதலாவதாக ஆற்றுப்படுத்தல் கற்கையினை பேர்ன் பல்கலைக்கழகத்தில் கற்று பட்டயத்தினை சுவிஸ் அதிபர் திருமதி. சமறுக்கா அவர்களிடம் இருந்து பெற்றிருந்தார்.
சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்தில் இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு எனும் ஐந்து தளங்களில் பயணித்து வருகின்றது. 2022ல் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் சார்பாக நால்வர் ஆற்றுப்படுத்தல் கற்கையினை மேற்கொண்டு வருகின்றனர். சமயச்சடங்குகளுடன் மட்டும் நின்றுவிடாது மக்களது இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருப்பது என்பதும் தமிழ் வழிபாட்டின் நோக்காக அமைந்துள்ளது. இப் பயணத்தில் சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்து நடுவன் மற்றும் மாநில அரசுடன் இணைந்து பயணிக்கின்றது.
22. 06. 2022 புதன்கிழமை அன்று பேர்ன் மாநில அரசு முதன் முறையாக தமது கூட்டத்தொடரினை ஆட்சி மன்றத்திற்கு வெளியில் பல்சமய இல்லத்தில் ஆற்றியருந்தது.
மாநில அமைச்சர்களான:

  • திருமதி. அஸ்திரித் பேர்ச்சி (நிதி அமைச்சர்),
  • திருமதி. கிறிஸ்ரின் கெஸ்லெர் (கல்வி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர், மற்றும் மாநில முதல்வர்),
  • திரு. பியர் அலான் ஸ்னெக் (நலவாழ்வு, சமூக மற்றும் இணக்கவாழ்வு அமைச்சர்),
  • திரு. கிஸ்தோப் நொய்மான் (கட்டுமான மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்),
  • திரு. பிறிஸ்தோப் அம்மான் ( பொருளாதார-, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்),
  • திரு. பிலிப் முல்லெர் (பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர்),
  • திருமதி. எவி அலெமான் (உட்துறை மற்றும் நீதி அமைச்சர்) ஆகியோர் முற்பகல் 11.00 மணிக்கு பல்சமய இல்லத்திற்கு வருகை அளித்திருந்தனர்.

மாநில அமைச்சின் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னராக பல்சமய இல்லத்தின் அருகில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு 11.10 மணிக்கு வருகை அளித்திருந்தனர்
சைவநெறிக்கூடத்தின் நிர்வாக உறுப்பினர்களை மாநில அமைச்சர்கள் நேர்கண்டனர். திருமதி. மலா ஜெயக்குமார், திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி ஆகியோர் அமைச்சர்களை வரவேற்று தமிழ் வழிபாட்டுத் திருக்கோவிலை அமைச்சர்களுக்கு விளக்கிக் காண்பித்தனர். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை சுவிற்சர்லாந்து அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் எனும் வேண்டுகை வாய்மொழியாக இதன்போது சைவநெறிக்கூடத்தால் முன்வைக்கப்பட்டது.
திருக்கோவில் வருகை அடுத்து பல்சமய இல்லத்தில் அமைந்துள்ள மசூதி, தெர்க்கா, தேவாலயம், பௌத்த விகாரை ஆகிய வழிபாட்டு இடங்களையும் அமைச்சர்கள் சுற்றிப்பார்த்தனர். அச்சமய மன்ற உறுப்பினர்கள் பேர்ன் மாநில அமைச்சர்களுக்கு வரவேற்பினை அளித்திருந்தனர்.
11.45 மணிக்கு பல்சமய இல்ல நிர்வாகம் சிறுகூட்டத்தினை பேர்ன் மாநில அரசுடன் நடாத்தியிருந்தது. இதன்போது 7 மாநில அமைச்சர்களும், பேர்ன் மாநில சமய விவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையர் திரு. தாவித் லொயிற்வில்லெர், பல்சமய இல்லத்தின் மன்றத் தலைவி திருமதி. றெகுலா மாதர், பல்சமய இல்லத்தின் பதில்தலைவர் திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி, பல்சமய இல்லத்தின் இயக்குனர் திருமதி. காறின் மிக்கிற்யுக் ஆகியோர் பங்கெடுத்தனர்.
12.30 மணிக்கு பல்சமய இல்லத்தில் அமைந்துள்ள வணக்கம் உணவகத்தில் அறுசுவைத் தமிழ் உணவு திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களால் சமைத்துப் பரிமாறப்பட்டது.
ஈழத்து சைவத் தமிழ்ச்சமையல் உணவினை அமைச்சர்களும் 8 சமயத்தின் சார்பாளர்களும், பல்சமய இல்லத்து நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் உண்டு மகிழ்ந்தனர். 13.45 மணிக்கு விருந்தோம்பல் நிறைவுற்றது.
14.00 மணிமுதல் பேர்ன் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டத்தொடர் பல்சமய இல்லத்தின் மேல் மண்டபத்தில் நடைபெற்றது.
15.30 மணிக்கு இடைவேளையின்போதும் பழக்குளையல், அனிச்சல், குளம்பி மற்றும் தேனீர் விருந்தும் வணக்கம் உணவகத்தில் அளிக்கப்பட்டது.
பல்சமய இல்லம் பல்பண்பாடுகள், பல்லின மக்கள் இணக்கத்துடன் வாழும் இல்லமாக விளங்குகின்றது. இதன் ஒரு பங்காளராக சைவநெறிக்கூடம் தொடர்ந்தும் தமிழ்மக்களின் மேன்மைக்கு உழைக்கும் எனும் நம்பிக்கையுடன் இன்றைய அமைச்சர்கள் ஒன்றுகூடல் நிகழ்ந்திருந்தது அனைவருக்கும் நிறைவை அளித்திருக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment