மண்டைதீவுச் சமர் எவ்வாறு நடைபெற்றது.

0 0
Read Time:5 Minute, 38 Second

1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது இந்நடவடிககையின் தரைத் தாக்குதலனியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார்.

ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்படடது.
இத்தாக்குதல் பற்றி அணிகளுடன்
கதைத்த தளபதி பால்ராஐ் அவர்கள்
உள்ளுக்கு பானு அண்ணை தான் வருவார். நான் தெலைத்தொடர்புக்கருவியூடாக கதைத்தால் நீங்கள் நினையுங்கோ அண்ணைதான் கதைக்கிறார் என்றார்.
அதன் பின்னர் சிலகாலம் பயிற்சிகளில் ஈடுபட்ட எமதணிகள் 1995ம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அவரவர் மாவட்டங்களுக்குச் சென்றன .


போர் நிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும்
அவ் அணிகள் ஒன்றாக்கப்பட்டு மூத்த தளபதி பானு மூத்த தளபதி சொர்ணம் தலைமையில் பளை எனுமிடத்தில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன .இப்பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் பயிற்சிக்காக பயிற்சியிடத்திற்க்கு புறப்பட்ட வேளையில் ஒரு வாகனம் வந்ததைக் கவனித்த சொர்ணமண்ணை வாகனத்தருகே
சென்றார் . அங்கே தலைவரைக் கண்டவுடன்.அண்ணை கதைக்க ஒழுங்குபடுத்தட்டா எனக் கேட்க தலைவரோ ஒரே கதைக்கிறது தான் விடு பயிற்சி பாா்க்க எனக்
கூறிவிட்டு பயிற்சியிடத்திற்க்குச் சென்று பயற்சிகளைப் பார்வையிட்டு.சில ஆலோசனைகளையும் வழங்கினார்.சிலவாரங்கள் பயிற்சிகள் நடைபெற்றன அதன் பின்னர் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்றது .இத் தாக்குதலில் ஈடுபடுகின்ற போராளிகளை 27.06.1995 அன்றிரவு கடற்புலிகள் செவ்வனவே மண்டைதீவூக்குள் தரையிறக்கினர். 28.06.1995 அன்று அதிகாலை இத்தாக்குதல் ஆரம்பித்தது குறிப்பட்ட நேரத்திற்க்குள் முகாம் விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்தது . இத்தாக்குதலை உள் நடவடிக்கைகளை மூத்த தளபதி பானு அவர்கள் உள்ளேயிருந்து வழி நாடாத்த கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்த இவையிரண்டையும் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார் .இச்சமரில் மக்களின் பங்களிப்பும் மிகவும் அளப்பரியது.


இச்சமர் முடிந்தவுடன அச் சண்டையில் பங்குபற்றிய அணிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் அணிகளைபாராட்டியதுடன் .தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறவும் இல்லை.தமிழீழத்தில் இதுவரை இடம்பெற்றச் சமர்களில் ஆயுத மற்றும் கூடிய இராணுவத்தை குறைந்த இழப்புகளுடன் இச் சமர் இடம் பெற்றதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

எழுத்துருவாக்கம்..சு.குணா.


இவ்வெற்றிகரத் தாக்குதலில் எட்டு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

லெப்.கேணல் சூட்டி
தம்பிமுத்து கோவிந்தராஜன்
அம்பாறை

மேஜர் தமிழ்மாறன் (கஜேந்திரன்)
அரசரட்ணம் பாலகிருஸ்ணன்
பள்ளிககுடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை

கப்டன் மாறன்
குணநாயகம் குலேந்திரன்
அல்வாய், யாழ்ப்பாணம்

கப்டன் எழிற்செல்வன் (ஜவான்)
செல்லப்பு தயாபரன்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் அகிலன்
அருச்சுனன் சிவரதன்
சங்கானை கிழக்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

லெப்டினன்ட் உதயா
கந்தையா சித்திரகுமாரி
கண்டி, சிறிலங்கா

2ம் லெப்டினன்ட் இசையழகன் (கிறிஸ்ரி)
கந்தையா கணேசமுர்த்தி
கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரவேங்கை பாமினி
சின்னவன் நகுலேஸ்வரி
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment