இலங்கை மத்திய வங்கி ஆளுனரின் கையறு நிலை…

0 0
Read Time:3 Minute, 32 Second

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்று நிறுவனமான ‘பிரசன்னா’ அண்மையில் முடக்கப்பட்டது.மக்களுக்கு இந்த நடவடிக்கையின் உள்நோக்கம் புரியவில்லை.இதன் மறுவிளைவாக உண்டியல் வியாபாரம் களைகட்டியது.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், உல்லாசப்பயணிகளிடமிருந்து பெறும் வெளிநாட்டு நாணயங்களின் ‘சிறு’ தொகையை மட்டுமே வங்கியில் வைப்பிலிடுகிறார்கள் என்று மத்திய வங்கி சந்தேகிக்கிறது.
இதில் பெரும்பாலான டொலர்கள் வீடுகளிலோ அல்லது வங்கி லாக்கர்களிலோ பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்பதே மத்திய வங்கியின் கணிப்பு.
ஆகவே இன்று ஆளுனர் வெளியிட்ட அறிக்கையானது, இது குறித்த அடுத்த நடவடிக்கையை விபரிக்கிறது.1. $15,000 கையிருப்பு, $10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.2. இதை வங்கியிலுள்ள டொலர் கணக்கில் (dollar account) வைப்பிலிட 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை பணம் வந்த ரிஷி மூலத்தையும் வங்கிக்குச் சொல்ல வேண்டும். ( சரியான காரணம் சொல்லப்படாவிட்டால், வைப்பிலிட கொண்டு சென்ற பணம் பறிமுதலாகலாம்)
3. இந்த புதிய சட்டத்தை மீறினால், பதுக்கி வைக்கப்பட்டுள்ள  வெளிநாட்டு நாணயங்கள் காவல்துறையாலும், மத்திய வங்கியின் அதிகாரிகளாலும் பறிமுதல் செய்யப்படும்.
ஆகவே மத்திய வங்கி மற்றும் வர்த்தக-அரச வங்கிகளிலுள்ள வெளி நாணயக் கையிருப்பு, காலியாகி விட்டதையே இந் நடவடிக்கை காட்டுகிறது.
திறைசேரியிடம் சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை.’ காசை அச்சடித்தால் பணவீக்கம் அதிகரிக்கும்” என்று எச்சரித்த ரணிலும், நந்தலாலும் அச்சடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள்.
IMF உம், அரசிறைக் கொள்கையில் (Fiscal Policy)மாற்றம் கொண்டு வர வேண்டுமென அரசிற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
புதிய வரவு- செலவுத் திட்டம் வரப் போகிறது.VAT மற்றும் வருமான வரி அதிகரிக்கும்.உர, எரிசக்தி மானியங்கள் குறைக்கப்படும்.நட்டத்தில் இயங்கும் அரச பொதுத்துறைகள், சேவைத்துறைகள் தனியார் கம்பனிகளுக்கு விற்கப்படும்.இதனால் வேலை இழப்பு அதிகரிக்கும்.
வற்றிப்போன திறைசேரி, நிரம்ப ஆரம்பிக்கையில், அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகளும் கிட்டும்.
ஆனாலும் இதனால் ஏற்படும் வரிச்சுமை அழுத்தங்களினால் மக்கள் போராட்டம் விரிவடையும்.பொலிசும் இராணுவமும் அரச இயந்திரத்தைப் பாதுகாக்கும்.


-இதயச்சந்திரன்20-05-22

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment