பல்சமய இல்லத்தில் இஸ்லாமியர்களின் நோன்பு துறப்பு

0 0
Read Time:2 Minute, 10 Second

பல்சமய இல்லத்தில் இஸ்லாமியர்களின் நோன்பு நிறைவில் பல்சமய இல்லத்தில் நோன்பு துறப்பும் பல்சமயங்களிலும் “திரு இரவுகள்” மேடைக் கலந்துரையாடலும் INTERRELIGIÖSES FASTENBRECHENUND PANEL ZU HEILIGEN NÄCHTEN

இதில் சைவநெறிக்கூடத்தின் சார்பில் அருளினி முருகவேள் கலந்துகொண்டார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரவேல் நாட்டுத்தூதர் ஈவாற் றவேல் அம்மையார்  மற்றும் பேர்ன் மாநில அரசு சுவிஸ்சில் இருந்து நாடுகடத்தப்படுவோருக்கான மனிதவுரிமைகள் கண்காணிப்புக்குழுவின் தலைவரும் பல்சமயஇல்லத்தின் தலைவருமாகிய றேகுலா மேடர் அவருடன்  சமயவிவகார அமைச்சக அதிகாரி திருவாளர் டாவிட் லொய்ற்வீலர் கலந்து சிறப்பித்தார். நோன்பில் வருகையளித்த யூத மக்களுக்கான கோசற் எனும் புனித உணவை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்ச்சுனைஞ்ஞர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் சைவ முறையில் வழங்கியுள்ளார். இஸ்லாமியர்களின் நிகழ்வில் யூத புனிதவுணவை சைவக்குருவானவர் வழங்கிய செயல் பலரையும் மகிழ்வித்தது. உலகில் யூத புனித உணவிற்க்கான சான்றிதள் பெற்ற முதல் தமிழ் அருட்ச்சுனைஞ்ஞர் இவராவார். பல்சமய இல்லத்தில் பலநூறு இஸ்லமியர்களின் நேன்புநிறைவில் எட்டுச்சமய தலைவர்களும் அரசியல்தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர். 19.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுகள் 22.00 மணிக்கு இஸ்லாமிய சமயக்குருவான முஸ்தபா மேமெற்றியின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment