30. 03. 2022 சுவிற்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் ஆற்றுப்படுத்துனர்கள் ஒன்றுகூடல்

0 0
Read Time:6 Minute, 42 Second

சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல் (CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுதிருந்தது.

பேர்ன் பல்கலைக்கழக வரலாற்றில் 700 ஆண்டுகளுக்குப் பின் முதற்தடவையாக பிற இனத்தவர், பிற சமயத்தவர் இந்த கல்வியினை பெற்றுள்ளது வரலாற்று நிகழ்வாக 28.05.2018 அமைந்திருந்தது. சைவெநறிக்கூட மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரும், சைவத்தமிழ் அருட்சுனையருமான தர்மலிங்கம் சசிக்குமார் வெளிவாரி பட்டய கல்விக்கான தேர்வில் பல்சமய இல்லத்தின் உதவியுடன் தோற்றி மேற்காணும் பட்டயத்தினைப் பெற்றிருந்தார்.

ஈராண்டு செயற்பாட்டு கோட்பாட்டு கல்விக்கு பின்னர் இவர் தேர்விற்கு தோற்றியிருந்தார். சமயபோதனையில் நீண்டகால அனுபவம் உள்ள 14 நிபுணர்கள் இந்த கல்வியினை மேற்கோண்டு நிறைவுத் தேர்வில் 10 சமயபோதகர்கள் தேர்வில் அக்காலத்தில் சித்தியடைந்திருந்தனர்.

ஈழத்தமிழ் சைவ அருட்சுனையரான தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் மே 2018ல் சுவிற்சர்லாந்து நாட்டின் நடுவன் அரசின் நீதி மற்றும் காவற்துறை அமைச்சர் மற்றும் முன்னைநாள் சுவிஸ் அதிபர் திருமதி. சமறூக்கா முன்னிலையில் பேராசிரியர் ஈசாபெல் நோற்ரோவிடமிருந்து பட்டயத்தினைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

700 ஆண்டுகளுக்கு மேலாக சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக ஈழத்தவரான தர்மலிங்கம் சசிக்குமார் இறையியல் ஆற்றுப்படுத்தல் பட்டயக் கல்வியை 2018ல் பெற்றுள்ளதும் 2022ல் பேர்ன் மாநில அரசால் ஆற்றுப்படுத்துனராக இணைக்கப்ட்டுள்ளதும் தமிழ் மக்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.

இப்பட்டயக் கற்கை நெறியினை வழிநடத்திய ஈசாபெல் பேசுகையில், இதுவரைகாலமும் ஒரு சமயம் மட்டும் கோலோச்சி வந்த சமயநெறியால் ஆற்றுப்படுத்தல் எனும் துறையினை இன்று அனைத்து சமயத்தவர்களும் பெற வழி செய்துள்ளோம் எனப் பேசியிருந்தார். அவர் பேசியதுபோல் 30.03.2022 அன்று «தகைசார் பல்சமய ஆற்றுப்படுத்துனர்கள் ஒன்றுகூடல்» பேர்ன் மாநில அரசால் முன்னெடுக்கப்பட்டது.

சுவிற்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள 32 மருத்துவமனைகள் ஒன்றிணைந்து உலகின் 8 சமயங்களைச் சேர்ந்த பிறசமயக் குருமார்கள், மதபோதகர்களை ஆற்றுப்படுனர்களாக பணி பகிர்ந்தளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஒன்றுகூடல் ஆற்றுப்படுத்தல் தகை உடையோர் தம் இனத்தவர்களக்கு, தமது தாய்மொழியில், தமது சமய நெறியில் ஆற்றுப்படுத்தல் பணியாற்ற நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதன் பெறுபேறாக சமயத் தலைவர்கள் சட்டப்படி மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள முகாம்களுக்கு சென்று தமது கல்வியால் அவர்களை ஆற்றுப்படுத்த பேர்ன் மாநில அரசு செறிவான ஒழுங்கு செய்துள்ளது.

  1. 2022 பேர்ன் மாநில அரசால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஒன்றுகூடலில் பங்கெடுத்திருக்கும் சமய அமைப்புக்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றுகூடி எதிர்காலத்தில் சுவிசில் சமயக்குரு ஆற்றுப்படுத்துனராக பணியாற்ற, குருவானவர் கொண்டிருக்க வேண்டிய தகையினை வரையறையாக வரைந்து மாநில அரசிடம் கையளித்திருந்தனர். இதனை பேர்ன மாநில அரசு முற்றும் முழுதாக ஏற்றுக்கொண்டுகள்ளது. ஈழத்து சைவத்தமிழ் மக்களுக்கு தமிழில் ஆற்றுப்படுத்துனர்கள் அதிகளவில் தேவை எனும் வேண்டுகையினை சைவநெறிக்கூடம் இவ் வரைவுடன இணைத்திருந்தது.

இவ்வேண்டுகையும் ஆற்றுப்படுத்துனர் தொடர்பான வரைவும் பேர்ன் மாநில அரசால் ஏற்றுக்கொண்டிருப்பினும், இதனை நிலையான சட்டமாக்குவதற்காக இம்முன்மொழிவு பேர்ன் மாநில பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் கூட்டத்தொடரில் இவ் வேண்டுகை ஆயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் என சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

சுவிற்சர்லாந்தில் அமைந்திருக்கும் கோவில்கள் சமயப்பணிகள் தாண்டி தமிழ்மக்களின் சமூகப் பொதுத்தேவைகளையும் நிறைவுசெய்யவும் இவ்வாறான கல்வி உதவும் எனவும் கருத்துப்பகர்ந்தார்.

ஆற்றுப்படுத்துனர்கள் தொடர்பாக நடைபெற்ற இப்பெரும் ஒன்றுகூடலுடன் பணிகள் முற்றுப் பெறவில்லை. அடுத்தகட்ட பணிகள் தொடரும், சைவநெறிக்கூடம் தொடர்ந்தும் பேர்ன் மாநில மற்றும் சுவிற்சர்லாந்து நடுவன் அரசிடம் தமிழர் நலன்சேர் திட்டங்களை வலியுறுத்தும் எனவும் சிவருசி ஐயா தெரிவித்தார்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment