கேணல் இளங்கீரன் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

0 0
Read Time:1 Minute, 30 Second

வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரின் போது 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.

சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். பல சமர்க்களங்களை சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் சிறப்பு கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர்.
ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்ராச்சின் தலைமையில் சண்டையிட்டபோது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழிநடத்தியவர் இளங்கீரன்.
வன்னிப் பெருநிலப்பரப்பின் கண்டி வீதியை கைப்பற்றும் சிங்களத்தின் “வெற்றி நிச்சயம்” என்ற நடவடிக்கைக்கு எதிரான புலிகளின் முறியடிப்பு தாக்குதல்களில் இவரின் பங்கு அளப்பரியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment