தவளை பாய்ச்சல் நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (456) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்

0 0
Read Time:1 Minute, 39 Second

11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “தவளை பாய்ச்சல்” நடவடிக்கையில். பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 456 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்கு இலக்காகும் படையிருக்கான உதவிகள் சென்றடைவதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் பலாலி படைத்தளத்திற்குள் 11.11.1993 அன்று ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு அணி படைத்தளதினுள் தாக்குதல்களை நடாத்தி சிறிலங்கா படையினரை நிலையை வைத்து தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வழியேற்படுத்தியது.

இந்த சிறப்பு நடவடிக்கையில் மேஜர் தொண்டமான், மேஜர் கலையழகன் உட்பட்ட 13 கரும்புலிகள் வீரகாவியமாகினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment