அரசுக்குள் இருக்கும் செந்தமிழர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்: – மனோ கணேசன்

0 0
Read Time:2 Minute, 4 Second

“ஒரே நாடு: ஒரே சட்டம்” என்பதை நடைமுறையாக்க ஆராய்ந்து 28-02-2022 க்கு முன் அறிக்கை சமர்பிக்கும்படி ஜனாதிபதி கோதாபய பதின்மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை நியமித்து, அதில்;

பொதுமன்னிப்பு பெற்ற (பாவமன்னிப்பு?) ஞானசாராரை தலைவராக நியமித்துள்ளார். குழுவில் ஒன்பது சிங்கள நபர்களின் பெயர்களும், நான்கு முஸ்லிம் நபர்களின் பெயர்களும் இருக்கின்றன. ஒரு தமிழ் நபரின் பெயரும் இல்லை.

(ஒருவேளை சிங்கள பெயருக்குள் தமிழ் நபர்கள் ஒளிந்து இருக்கிறார்களோ, என்னவோ என்று தேடியும் பார்த்தேன். அடித்து கேட்டும் பார்த்தேன்…. ம்ஹும்…!)

முஸ்லிம் பெயர்கள் இருக்கின்றன என்பதாலேயே முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்பட போகிறது என்பதல்ல.

உண்மையில் முஸ்லிம்களைதான் இங்கே குறி வைக்கிறார்கள், அதற்கு கூடவே துணைக்கு சில முஸ்லிம்களை வைத்துக்கொள்ள போகிறார்கள் என்பதுவே பட்டவர்த்தனம்.

ஞானசாரரை தலைவராக போட்டால், உள்ளே என்ன நடக்கும் என புதிதாக வகுப்பெடுக்க தேவையில்லையே! பையை திறக்காமலேயே பைக்குள் என்ன இருக்கிறது என விளங்குகிறது!

ஆனால், பெயருக்கு கூட ஒரு தமிழரை நியமிக்க மறுக்கும் இந்த மனிதரின் வெறுப்பு மனப்பான்மை நமக்கு வெறுப்பூட்டுகிறது.

இதற்கு அரசுக்குள் இருக்கும் செந்தமிழர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என கேட்க விரும்புகிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment