கேணல் சங்கர் தலைவரின் நம்பிக்கைக்குாிய ஒரு தளபதி

0 0
Read Time:3 Minute, 6 Second

தலைவருடன்
இற்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய காலம். தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேசமயப்பட்டு வந்த அதே நேரத்தில் எமது விடுதலைப் போராட்டத்தின் மீது இந்தியத் தலையீடு நேரடியாகப் பதிந்திருந்தது. இந்திய மண்ணில் எமது நடவடிக்கைகள் பரவியிருந்தன.


சனநெரிசல் மிகுந்த தமிழகத்தின் தலைநகர் சென்னையில் எங்கு திரும்பினாலும் திரைப்பட விளம்பரங்களும் சினிமா நட்சத்திரங்களின் உருவெட்டுகளுமே நிறைந்திருந்தன. குறுகிய இடைவெளிகளினூடாகக் குதித்துப் பாயும் முச்சக்கர வண்டிகளின் இரைச்சல், வாகனங்களின் அலறல், மனித ஒலிகள் என எல்லாம் ஒன்றாகக் கலந்து காதை அடைக்கும் சத்தப் பூமி.
ஒலி அலைகளின் தொல்லை குறைந்த பகுதி. சென்னையின் சனநெரிசல் நிறைந்த வியாபாரப் பகுதியினின்றும் சற்று விலகி அமைந்திருக்கும் ஒரு குடியிருப்பு. புலிகளின் செயற்பாட்டிடங்கள் பலவும் காணப்பட்ட பகுதி. அரசியல், மருத்துவம், தொழினுட்பம் எனப் பல்வேறு பிரிவுகளும் அங்கேதான் அமைந்திருந்தன.
தலைவர் அவர்களின் செயற்பாடுகளுக்கான பிரதான களமும் அங்கேயே அமைந்திருந்தது. தலைவர் அவர்களின் சந்திப்பிடமும் அங்குதான் இருந்தது.

தமிழகத்தின் கரையோரங்களில் புலிகளின் முகாம்கள் பல அமைந்திருந்தன. தமிழீழப் பிரதேசங்களிற்கான பிரதான விநியோக மையங்கள் அங்கிருந்துதான் செயற்பட்டன. ஒரு மையத்தின் பொறுப்பாளி என்ற வகையில் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக அழைக்கப்பட்டேன்.
நீண்ட நேரம் காத்திருந்தேன். அழைப்பு வரவில்லை. சங்கரண்ணையுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததும் இப்போதைக்கு அழைப்பு வராதென்பதை உணர்ந்து கொண்டேன்.
நீண்ட அவ்வுரையாடல்கள் என்னவென்பதை நாம் இதுவரை அறியவில்லை. ஆனால், விடுதலை இயக்கத்தின் அன்றைய வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் அவை முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாகத் தமிழ்நாட்டின் நிர்வாக, அரசியல் உயர்மட்டங்களுடன் நியாயத் தர்க்கம் புரிவதில் சங்கரண்ணையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ச. பொட்டு
பொறுப்பாளர், புலனாய்வுத்துறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment