ஸ்ரான்லி வீதி அகலிப்பு தொடர்பில் இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் தலமையில் ஆராயப்பட்டது.

0 0
Read Time:2 Minute, 21 Second

அதனைத்தொடர்ந்து நேரடியாக ஸ்ரான்லி வீதிக்கு களவிஜயம் செய்யப்பட்டு உடைத்தகற்றப்பட வேண்டிய வர்த்தக நிலையங்களின் பகுதிகள் தொடர்பில் நேரடியாக பார்வையிடப்பட்டது. இக்கூட்டத்திலும் இடம் பார்வையிடுதலிலும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர பிரதி ஆணையாளர், மாநகர பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், மின்சாரசபை மின் அத்தியட்சகர், ரெலிக்கொம் பொறியியலாளர் மற்றும் குறித்த வீதி அகலிப்பு பணியில் ஈடுபட உள்ள ஒப்பந்தகார நிறுவனமான hanco நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர், பொறியியலாளர் உள்ளிட்ட ஊழியர்கள், யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆகியோர் பங்குபற்றினர் . குறித்த வீதி அகலிப்புக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக கடை உரிமையாளர்களால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.


ஸ்டான்லி வீதியானது வீதி நடுவில் இருந்து இரு பக்கமும் 8m அகலிக்கப்பட உள்ளது. இவ்வீதியில் வாகன தரிப்பிடம், வாய்க்காலுடன் கூடிய நடைபாதை, பெற்றோல் நிலைய சந்தியில் சுற்றுவட்டம் என்பன அமைக்கப்படவுள்ளன.

குறித்த வீதி புனரமைப்பு பணிகளை விரைவாக ஆரம்பித்து முடிவுறுத்தி தருமாறு மாநகர முதல்வரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த வீதி புனரமைப்பு பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில்
இதனால் ஏற்படும் அசௌகரியங்களை பொறுத்துக்கொள்ளுமாறும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் அன்புரிமையுடன் கேட்டுகொள்கிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment