ஸ்ரான்லி வீதி அகலிப்பு தொடர்பில் இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் தலமையில் ஆராயப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நேரடியாக ஸ்ரான்லி வீதிக்கு களவிஜயம் செய்யப்பட்டு உடைத்தகற்றப்பட வேண்டிய வர்த்தக நிலையங்களின் பகுதிகள் தொடர்பில் நேரடியாக பார்வையிடப்பட்டது. இக்கூட்டத்திலும் இடம் பார்வையிடுதலிலும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர பிரதி ஆணையாளர், மாநகர பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், மின்சாரசபை மின் அத்தியட்சகர், ரெலிக்கொம் பொறியியலாளர் மற்றும் குறித்த வீதி அகலிப்பு பணியில் ஈடுபட உள்ள ஒப்பந்தகார நிறுவனமான hanco நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர், பொறியியலாளர் உள்ளிட்ட ஊழியர்கள், யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆகியோர் பங்குபற்றினர் . குறித்த வீதி அகலிப்புக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக கடை உரிமையாளர்களால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

மேலும்

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு!

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான ஓகஸ்ற் 30ம் திகதியினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 30.08.2021 திங்கள் அன்று சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது.

மேலும்

கடற்கரும்புலிகளினால் முதலாவதாக மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகுத் தாக்குதல்

1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர்.

மேலும்

தமிழக முதல்வர் மு.க ஸ்ராலினுக்கு யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் நன்றி தெரிவிப்பு.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு கணிசமான இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து தஞ்சம் கோரி ஏதிலிகளாக வாழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசாங்கத்தின் தரவுகளின் படி 108 முகாங்களிலும் மற்றும் முகாங்களுக்கு வெளியிலுமாக 92,978 இலங்கை தமிழ் அகதிகள் தமிழகத்தில் வாழ்கின்றனர்.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பம் : பிரித்தானியா (02.09.2021) – ஐக்கிய நாடுகள் அவை சுவிசு (20.09.2021)

சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தியபடி எதிர்வரும் 02.09.2021 அன்று பிரித்தானியாவின் பிரதமர் இல்லத்தில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பித்து 20.09.2021 அன்று ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்) நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஒருமித்த குரலாக தமிழர்களின் வேணவாவினை பறைசாற்ற இருக்கின்றது.

மேலும்

நாவலர் கலாச்சார மண்டபம் சிறப்பாக புனரமைக்க உடனடி நடவடிக்கை

நாவலர் கலாச்சார மண்டபம் யாழ் மாநகர சபையால் சரியாக பராமரிக்கப்படவில்லை எனவும் அதனை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும்

மேலும்

மேஐர்.செல்வராசாமாஸ்ரர்.அவர்களின் வீரவணக்க நாள்!

1989ஆம் காலப்பகுதியில் மணலாற்றுக்காட்டிலிருந்து இந்தியஇராணுவத்திற்க்கு எதிராக போரை வழிநடாத்திக்கொண்டிருந்தார் தேசியத்தலைவர் அவர்கள்.அக்காலப்பகுதியில் தலைவர் அவர்களை பிடிப்பதற்காக இந்தியஇராணுவம் மணலாற்றுக்காட்டுப்பகுதிகளை நோக்கி பாரிய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களையும் நடாத்திக்கொண்டும் அடிக்கடி பாரிய இராணுவ முன்னேற்ற நகர்வுகளையும் மேற்கொண்டுவந்தது.

மேலும்

புல் மேய்வதற்காக குளத்திற்குள் சென்ற பசு மாடு போராட்டத்திற்கு பின் காப்பாற்றப்பட்டது.

நேற்று யாழ் நகர குளம் தூர்வாரப்பட்டுக்கொண்டிருந்த போது புல் மேய்வதற்காக குளத்திற்குள் சென்ற பசு மாடு அதற்குள் புதைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்தது.

மேலும்

சுவிஸ் நடுவனரசின் தொற்றுத் தடுப்புக் கலந்தறிதல்

கடந்த நாட்களில் சுவிற்சர்லாந்தில் மகுடநுண்ணித்தொற்று (கோவிட்-19) பெருகி வருகின்றது. மருத்துவமனை நாடும் மகுடநுண்ணித் தொற்று நோயாளிகளின் தொகையும் பெரும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவு சுவிற்சர்லாந்து நடுவனரசு முன்னர் அறிவித்திருந்த இயல்புவாழ்வு திரும்பும் திட்டம் தள்ளிவைக்கப்படவுள்ளது.

மேலும்

ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக ஜெனிவாவில் (Geneva) அமைந்துள்ள ஐ.நா நோக்கிய பயணம் – பிரான்சு

தமிழீழ உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,தமிழ் மக்களை திட்டமிட்டு இன அழிப்பு செய்த சிறி லங்கா அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்

மேலும்