கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகப் பாதுகாப்பணிகள் மீது தாக்குதல் நடாத்த வந்த இலங்கைக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிவீரர்கள்

0 0
Read Time:7 Minute, 37 Second

 கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு சாளைத்தளத்திலிருந்து உயர நூற்றிஇருபது கடல்மைல்களுக்கு சென்று அங்கிருந்த விடுதலைப்புலிகளின் கப்பல்களிலிருந்து தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் லெப் .கேணல் சாள்ஸ் படையணியும், லெப்.கேணல்.நளாயினி படையணியும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அதேவேளை இவர்களுக்குப்  லெப்.கேணல். சாள்ஸ் மற்றும் லெப்.கேணல். நளாயினி படையணிகளின் இன்னொரு அணிகளும் கடற்கரும்புலி மேஐர் .புகழரசன் படையணியும்

கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் படையணி மற்றும் மேஐர்.வசந்தன்.படையனியும்  பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர். இவ்விநியோக நடவடிக்கை பெரும்பாலும் ஒவ்வொரு நாட்களும் நடைபெறும். இப்படியாகப் நடந்துகொண்டிருக்கும்போது கடற்படையினர் விநியோகப்படகுகள் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டால் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் அவ்விநியோகப்படகுகளை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் சமர் செய்வார்கள். அதேபோல 21.03.2001 அன்றும் விநியோக நடவடிக்கைக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கும் போது இலங்கைக் கடற்படையினர் கடற்புலிகளின் சண்டைப்படகுகளை நோக்கி வலிந்து ஒரு தாக்குதல் தொடக்கினர். சண்டைப்படகுகளின் அனைத்துத் தொகுதிக் கட்டளை அதிகாரி விநியோகப்படகுகள் சாளைத் தளத்திற்க்குள் போகட்டும் எனக்கூறி தவிர்த்துவந்தார். இந்த நிலையில் கடற்படையினரின் தொந்தரவு அதிகரித்துக்கொண்டிருக்கையில் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி அனைத்து கடற்புலிகளின்  சண்டைப்படகுகளை ஒருங்கினைத்து தொந்தரவு செய்து கொண்டிருந்த கடற்படையின் டோறாப்பீரங்கிப்படகுகள் மீது தீடீரென எதிரி நினைக்காத சந்தர்ப்பத்தில் ஒருமூர்கத்தனமான தாக்குதலைத் தொடுத்தனர். இத்தீரமிகு அதிரடித்தாக்குதலில் ஒருடோறாப் பீரங்கிப் படகு நிலைகுலைந்து நிற்க அவ்டோறாப்படகு கடற்புலிகளின் துல்லியமான சூட்டின் மூலம் அவ்டோறாவிலிருந்து வந்த கடற்படையினரின் தாக்குதலை நிறுத்தினார்கள். தொடர்ந்து அவ்டோறாமீது ஏறிய கடற்புலிவீரர்கள் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கைப்பற்றிவிட்டு அவ்டோறாவை மூழ்கடித்தனர். தொடர்ந்து கடற்படையினருக்கு ஆதரவாக விமானப்படையின்  விமானங்கள் துணைக்கு வந்து தாக்குல்களை நடாத்தினார்கள் விமானப்படையின் தாக்குதலை தமக்கு சாதகமாக பயன்படுத்திய கடற்புலிகள் தாக்குதலை நடாத்திக்கொணடு இலங்கைக்  கடற்படையின் போர்வீயுகத்திற்க்குள் உள்நுழைந்து இரண்டறக்கலந்து நின்றனர்.இதனால் இலங்கை விமானப்படையினர்  கடற்புலிகளின் படகுகளை இணங்காணமுடியாது தனது  கடற்படையின் டோறாப்படகுமீது குண்டுகளைப் போட்டது இதனால் மற்ற டோறாப்படகும் மூழ்கியது. உண்மையில் கடற்புலிவீரர்களி்ன் தந்திரோபாயமான நடவடிக்கையால் சிங்களம் அன்று இரண்டுடோறாப்படகை இழந்தது.

இத்தீரமிகு தாக்குதலில்  கடற்புலிகளின் பன்னிரன்டு சண்டைபடகுகள் கடற்படையின் இருபத்திஐந்து டோறாப்படகுகளுக்கு எதிராக கடுமையான போரிட்டனர். சுமார் நான்குமணித்தியாலயமாக  நீடித்த இச்சமரில் கடற்படையினர் பின்வாங்கினார்கள். இவ்வெற்றிச்சமரில் பங்குபற்றிய போராளிகளைச் சந்தித்த எமது தலைவர் அவர்கள் கனரக ஆயதத்தால் தாக்கி டோறாவைத் தாக்கமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளீர்கள். இனிவரும்காலங்களில் இப்படியான தாக்குல்களைத் தொடரவேண்டும் அதற்கு என்னவேண்டுமோ கேளுங்கள் நான் கொள்வனவு செய்து தருகிறேன் என்று கூறியதுடன், இலங்கைக் கடற்படைக்கு  உதவியாக வந்த விமானப்படையின்  குணடுவீச்சு  விமானங்களை தமக்குச் சாதகமாகப் பயண்படுத்தி  கடற்படையின் டோறாப்படகுகளுக்கு அண்மையாகச் சென்று அக்குண்டை டோறாமீது விழவைத்த கடற்புலிவீரர்களின் தந்திரோபாயத்தையும் எமது தலைவர் அவர்கள் பாராட்டினார். இத்தீரமிகு தாக்கதலில் செவ்வனவே பங்காற்றி வெவ்வேறு களங்களில் வீரச்சாவடைந்த ..
லெப்.கேணல்.சேரமான்(வீரச்சாவு.21.04.2001)

லெப்.கேணல்.பகலவன்.(வீரச்சாவு.04.02.2009) லெப்.கேணல்.கண்ணியத்தம்பி.(வீரச்சாவு.13.08.2007) கடற்கரும்புலிலெப்.கேணல்.அமுதசுரபி(வீரச்சாவு.26.10.2001.). தளபதி.விடுதலை(இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்காளில் வீரச்சாவு.)

லெப்.கேணல்..சீராளன்.(வீரச்சாவு.24.09.2006.)

லெப்.கேணல்.ஐெரோமினி.(வீரச்சாவு.15 11.2007) மேஐர்.ஆழியன்.(வீரச்சாவு.21.04.2001) மேஐர்.தமிழ்நம்பி(வீரச்சாவு.11.09.2007) இவ்வெற்றிகர தாக்குதலை தளபதி.சிறிராம்.(இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்காலில் வீரச்சாவு.) படமாக்கியிருந்தார். இத்தாக்குதல் கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் கடற்தாக்குதற்தளபதி கடலில் வழிநடாத்த அனைத்து நடவடிக்கைகைளையுயும் ஒருங்கினைத்து கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் செவ்வனவே வழிநாடாத்தியிருந்தார்.
இவ்வெற்றிகர பாதுகாப்புச் சமரில் வீரச்சாவடைந்தோர் விபரம்.

மேஜர் கலா (நாவுக்கரசி)
மார்கண்டு காஞ்சனா
குரும்பசிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்

மேஜர் தென்றல்
விநாயகம் மகேந்திரன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

கப்டன் மறவன்
சின்னத்தம்பி கதிர்காமநாதன்
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்.
ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

எழுத்துருவாக்கம்.சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment