ஓயாத அலைகள் ஒன்று

0 0
Read Time:45 Minute, 59 Second

விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.

ஓயாத அலைகல் நினைவூடல்

இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.

(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)

சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.

ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது.
ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.

இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.

கடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முல்லைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.

அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடிhயமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.

எங்கே ஓடுவது?

திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர்.
எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.

தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை; தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.

அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற்பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)

இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.

இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.

முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின்போது.

இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.

ஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.

இதையொட்டிய சம்பவமொன்று….
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள்.
இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).

கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது.

(அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த வெற்றிகர நடவடிக்கையின் போது தரையிலும் கடலிலும் 320 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

முதல் நாள் 18.07.1996 அன்று லெப்.கேணல் சுதர்சன் உட்பட 158 போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர்.

லெப்.கேணல் சுதர்சன் (அல்பிரட் யூட்ஜெராட் – முல்லைத்தீவு)

மேஜர் திருச்சிற்றம்பலம் (நவநீதன்) (செபமாலை பத்திநாதன் – மன்னார்)

மேஜர் கலைரதன் (கலைச்செல்வன்) (சுப்பிரமணியம் ரவீந்திரன் – மட்டக்களப்பு)

மேஜர் ஜெயா (முத்துக்குமார் விஜயகுமாரி – யாழ்ப்பாணம்)

மேஜர் சுலக்சி (செந்தமிழி) (நல்லையா நவமணி – மட்டக்களப்பு)

மேஜர் கண்ணகி (சிவசுப்பிரமணியம் சுபகௌரி – யாழ்ப்பாணம்)

மேஜர் தங்கேஸ் (மில்ரன்) (நாகராசா தனசேகர் – வவுனியா)

மேஜர் நாயகன் (கணேசன் செந்தூரன் – யாழ்ப்பாணம்)

மேஜர் கேசவன் (பசீலன்) (விமலராஜன் வரதராஜன் – திருகோணமலை)

மேஜர் நெடுஞ்செழியன் (ராஜ்) (சிவசுப்பிரமணியதேவா அகிலன் – யாழ்ப்பாணம்)

மேஜர் தேன்மொழி (றமணி) (அருமைத்துரை யூடிற்றா – மன்னார்)

மேஜர் திருமாறன் (பாலசுப்பிரமணியம் சிவகுமார் – திருகோணமலை)

கப்டன் குணபாலன் (சின்னத்துரை சந்திரகுமார் – அம்பாறை)

கப்டன் சிவகரன் (அத்தநாயக்கா குட்டி – அம்பாறை)

கப்டன் சிவராஜ் (குழந்தைவேல் உலகநாதன் – அம்பாறை)

கப்டன் மணிமாறன் (ராசப்பர் தேவசகாயம் – அம்பாறை)

கப்டன் முத்தமிழன் (கிருஸ்ணப்பிள்ளை மனோகரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் மங்களன் (கிட்ணப்பிள்ளை விக்னேஸ்வரன் – முல்லைத்தீவு)

கப்டன் பெரியதம்பி (செல்வராசா தர்மராசா – வவுனியா)

கப்டன் தயாளன் (பரமசாமி சந்தோதரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் இமயவரன் (கந்தவனம் தவேந்திரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் புத்தூரன் (ஆறுமுகம் ரவிமோகன் – யாழ்ப்பாணம்)

கப்டன் இளந்தேவன் (செல்வராசா தர்மசீலன் – முல்லைத்தீவு)

கப்டன் கிருபா (இராசையா கலாநிதி – யாழ்ப்பாணம்)

கப்டன் ஜீவினி (கவிதா) (நீலக்குட்டி சுலோசனா – மட்டக்களப்பு)

கப்டன் றமா (பாலசிங்கம் சறோஜினி – கிளிநொச்சி)

கப்டன் மகாதேவி (செல்லத்தம்பி ஜெயலட்சுமி – யாழ்ப்பாணம்)

கப்டன் பிறேமாவதி (தயாகுணம் தயாபரி – யாழ்ப்பாணம்)

கப்டன் கோதை (அருட்பிரகாசம் ராணி – யாழ்ப்பாணம்)

கப்டன் யசோதா (கணபதிப்பிள்ளை சரஸ்வதி – முல்லைத்தீவு)

கப்டன் மதி (திருநாவுக்கரசு சிவசக்தி – யாழ்ப்பாணம்)

கப்டன் எழிற்செல்வன் (ரஞ்சித்) (முத்து சிவராசா – யாழ்ப்பாணம்)

கப்டன் மதுரன் (இனியவன்) (இராஜரட்னம் கிருஸ்ணகுமார் – யாழ்ப்பாணம்)

கப்டன் திருவுடைச்செல்வன் (திருநீலகண்டன்) (வெங்கடாசலம் பாலசுப்பிரமணியம் – கண்டி)

கப்டன் மயூரன் (கிட்ணன் செல்வன் – யாழ்ப்பாணம்)

கப்டன் சுடர்மணி (தினேஸ்) (ஒப்பிலாமணி தெய்வேந்திரன் – திருகோணமலை)

கப்டன் பாபு (சின்னராசா பகீரதன் – யாழ்ப்பாணம்)

கப்டன் கதிரொளி (சூசைதாஸ் அஜந்தன் – யாழ்ப்பாணம்)

கப்டன் சாலமன் (கதிரன் ரவீந்திரராசா – யாழ்ப்பாணம்)

கப்டன் தென்றல் (முருகேசு ஜெயா – யாழ்ப்பாணம்)

கப்டன் செங்கொடி (இருதயநாதன் லூட்ஸ்வாசுகி – யாழ்ப்பாணம்)

கப்டன் இசையழகன் (கிளறன்ஸ்கிளின்ரஸ் கொலின்ஸ் – யாழ்ப்பாணம்)

கப்டன் தமிழேந்தி (கீறோராய்) (குமாரசாமி சிவகேதீசன் – யாழ்ப்பாணம்)

கப்டன் கலைமதி (குழந்தையன் சுதாஜினி – யாழ்ப்பாணம்)

கப்டன் சமுத்திரன் (சண்முகசுந்தரம் சுந்திரசிவா – யாழ்ப்பாணம்)

கப்டன் கீரன் (கிள்ளிவளவன்) (இரத்தினசிங்கம் தவளைக்கிளி – யாழ்ப்பாணம்)

கப்டன் புலவர் (சிவபாதசிங்கம் சத்திஜேந்திரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் மணாளராஜன் (மன்னன்) (சிவகுணம் சிவரஞ்சன் – மட்டக்களப்பு)

கப்டன் வேங்கையன் (வதனன்) (சுப்பிரமணியம் கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் இராமகுமார் (ராம்குமார்) (சந்தனம் யோகேஸ்வரன் – வவுனியா)

கப்டன் கவிஞன் (தங்கவேல் ரமேஸ்வரன் – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் கடத்தன் (பரமன்) (சின்னராசா தேவராசா – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மறவன் (முருகையா தினேஸ்குமார் – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சாந்தகௌரி (ஆரோக்கியம் மேரியசிந்தா – மன்னார்)

லெப்டினன்ட் பார்த்தீபா (சுப்பிரமணியம் நாகராணி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ராணி (வேதநாயகம் மங்களேஸ்வரி – திருகோணமலை)

லெப்டினன்ட் பிருந்தா (செல்லையா கௌரி – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சுதனி (பசுபதி ஜீவரானி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சுடர்மணி (அன்சர்) (நடராசா நடனகுமார் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வாகீசன் (இராசையா ஆனந்தரூபன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மேலவன் (வேலவன்) (ஞானப்பிரகாசம் அன்ரனி – வவுனியா)

லெப்டினன்ட் தூயவன் (றீயாட்) (சிறீஸ்கந்தராசா செல்வகுமார் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தமிழ்வாணன் (மாணிக்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அன்பழகி (நரசிங்கம் மகாலட்சுமி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சுதாமதி (நடராசா காளிங்கேஸ்வரி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நன்மாறன் (நீக்கிலான் கிரிஸ்ரியோகதாஸ் – மன்னார்)

லெப்டினன்ட் அறிவொளி (நடராசா மோகனராசா – வவுனியா)

லெப்டினன்ட் நற்காணன் (விஸ்வரட்ணம் பத்மசொரூபன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சின்னக்குட்டி (மாசிலாமணி விஜயகுமார் – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் மணியரசன் (குணசேகரம் சந்திரகுமார் – திருகோணமலை)

லெப்டினன்ட் சாந்தன் (விக்கினேஸ்வரன் விஜயபாஸ்கரன் – மன்னார்)

லெப்டினன்ட் திவ்வியன் (அருள்மணி) (வேதநாயகம் பிரான்சிஸ் – மன்னார்)

லெப்டினன்ட் நிலவழகன் (வேலுப்பிள்ளை பிரதீபன் – வவுனியா)

லெப்டினன்ட் சேதுகாவலன் (பிரான்சிஸ் மோசஸ் – இரத்தினபுரி)

லெப்டினன்ட் சுக்கிரீபன் (விசுவநாதன் நகுலகுலசிங்கம் – கிளிநொச்சி)

லெப்டினன்ட் பாரதிதாசன் (ஐங்கரன்) (கைலாயப்பிள்ளை கமலதாசன் – வவுனியா)

லெப்டினன்ட் பரமதேவா (மருதன் சண்முகலிங்கம் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இசைக்கோன் (பத்மநாதன் யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மதி (அரிச்சந்திரன் வசீகரன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தயாபரன் (அன்பன்) (நாகேந்திரம் சுதர்சன் – மன்னார்)

லெப்டினன்ட் தாமரை (விநாயகமூர்த்தி மலர்விழி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அஜித்தா (குமாரவேலு பகிரதி – கிளிநொச்சி)

லெப்டினன்ட் யாழிசை (குகதாசன் ஜெயகௌரி – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் கோமான் (சிவலிங்கம் உதயராயன் – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் வாழேந்தி (செந்தமிழன்) (அன்னலிங்கம் செல்வகுமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஆதப்பன் (ஈசன்) (பழனிவேல் ரகுமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வளவன் (சாந்தகுணசிங்கம் குலேந்திரராஜ் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருச்சுனன் (வேலுப்பிள்ளை பிரதீபன் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அற்புதன் (கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மானவீரன் (முத்தையா தனபால் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மகாசோதி (தம்பிமுத்து ரவீந்திரன் – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் தயாகாரன் (பத்தகுட்டி கதிரமன் – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் கூர்வேலன் (லட்சுமணன் சுந்தரம் – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் சிவாகரன் (மயிலுப்போடி ஞானசேகரம் – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் ராதா (குழந்தைவேல் காளிதாஸ் – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் கவி (தங்கவேல் தவராஜா – அம்பாறை)

2ம் லெப்டினன்ட் இராஜசீலன் (சுப்பிரமணியம் மதியழகன் – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் கருணாகரன் (பழனியாண்டி புஸ்பராசா – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் செல்வகணேசன் (கந்தசாமி விஜயசங்கர் – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் மணாளன் (மாயழகு பொன்மணிராசா – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் மதி (முருகுப்பிள்ளை இராஜேஸ்வரன் – வவுனியா)

2ம் லெப்டினன்ட் செம்பியன் (பேரின்பநாயகம் சால்ஸ்பொனிக்ஸ் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சொக்கன் (மாரிமுத்து முருகேஸ்வரன் – மன்னார்)

2ம் லெப்டினன்ட் மன்மதன் (தேவசிகாமணி முகுந்தப்பிரியன் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (இம்ரான்) (தம்பிமுத்து மதியழகன் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் செல்வம் (பாலச்சந்திரன் வதனி – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வதனி (ஜெகநாதன் சசிகலா – மாத்தளை)

2ம் லெப்டினன்ட் வேதினி (தர்மன் தர்சினி – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சந்திரா (இராசையா பரமேஸ்வரி – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (இராஜகோபால் மஞ்சுளா – மன்னார்)

2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சிதம்பரப்பிள்ளை மல்லிகாதேவி – மன்னார்)

2ம் லெப்டினன்ட் மணியரசன் (ஆரோக்கியநாதன் ரெஜினோல்ட் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் காவியன் (சுந்தரம் உதயகுமார் – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் புயலவன் (கணேசபிள்ளை தமிழ்ச்செல்வன் – திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் அறிவுக்குமரன் (இராமன் உதயகுமார் – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் நிசா (நிலா) (சண்முகம் பத்மாதேவி – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் குகதா (சண்முகலிங்கம் சுஜாதா – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இன்பா (நடராஜபிள்ளை உசாநந்தினி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை செம்பியன் (காசிப்பிள்ளை கனகசிங்கம் – திருகோணமலை)

வீரவேங்கை நிலவழவன் (பிள்ளையான் யோகராசா – அம்பாறை)

வீரவேங்கை விமலகுமார் (ஆனந்தன் உதயகுமார் – மட்டக்களப்பு)

வீரவேங்கை சுகிர்தன் (சின்னத்தம்பி பரமேஸ்வரன் – மட்டக்களப்பு)

வீரவேங்கை கமலகாசன் (தெய்வநாயகம் கேதீஸ்வரன் – மட்டக்களப்பு)

வீரவேங்கை தங்கராசா (தம்பிராசா உதயகுமார் – மட்டக்களப்பு)

வீரவேங்கை அற்புதமேனன் (பொன்னையா சுப்பிரமணியம் – மட்டக்களப்பு)

வீரவேங்கை ஆதிகரன் (பத்மன் பத்மசீலன் – மட்டக்களப்பு)

வீரவேங்கை தனபாலினி (நல்லையா சுகந்தினி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வேல்விழி (ஐயாத்துரை பத்மலோஜி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மயூரன் (சுப்பிரமணியம் சிவகுமார் – கிளிநொச்சி)

வீரவேங்கை இன்பன் (அருளானந்தம் பிறேமானந்தசீலன் – கிளிநொச்சி)

வீரவேங்கை திருக்குமரன் (பாலசிங்கம் பாஸ்கரன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கோபி (தவநாதன் றொபேட்கோகுலசேகரம் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஒப்பிலாமணி (மனோபாலசிங்கம் இராசசங்கர் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை துரைக்குட்டி (யோகாம்பிள்ளை அன்ரனிராஜ் – முல்லைத்தீவு)

வீரவேங்கை வில்லவன் (அருச்சுனன்) (தவராசா ரஜனிக்காந் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மதிநிலவன் (குருநாதன் இராகுலன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வளநாடன் (சிவனேசன் தர்மராயன் – முல்லைத்தீவு)

வீரவேங்கை தவயோகன் (மாணிக்கராசா சந்திரமோகன் – கிளிநொச்சி)

வீரவேங்கை காங்கேயன் (மயில்வாகனம் நாகநாதன் – முல்லைத்தீவு)

வீரவேங்கை சிவநீதன் (மாயவன் மகேந்திரன் – வவுனியா)

வீரவேங்கை முரளி (இராமநாதன் ரஞ்சன் – மன்னார்)

வீரவேங்கை நல்லதம்பி (தங்கராஜா விநாயகமூர்த்தி – மட்டக்களப்பு)

வீரவேங்கை நித்தி (மோகனதாஸ் தவக்குமார் – மட்டக்களப்பு)

வீரவேங்கை மைதிலி (தம்பிராசா மஞ்சுளா – வவுனியா)

வீரவேங்கை வாணி (இராசலிங்கம் சுமதி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திலகரி (சின்னராசா குமுதினி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தளிர் (நித்தியானந்தன் நிசாந்தினி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்வானி (யோகலிங்கம் றஜனி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை யாழினி (வரதராசா யோகேஸ்வரி – கிளிநொச்சி)

வீரவேங்கை தேனல்லி (கோபால் மணி – மட்டக்களப்பு)

வீரவேங்கை அக்கினோ (சிற்றம்பலம் செல்வராணி – அம்பாறை)

வீரவேங்கை வேண்மகள் (முருகன் செல்வரதி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கமலா (சுப்பிரமணியம் ரதிதேவி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அபிராமி (சிவப்பிரகாசம் கிருஸ்ணாம்பாள் – கிளிநொச்சி)

வீரவேங்கை மாதுமை (மாணிக்கம் வளர்மதி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இனியவன் (நோயல் ஜெப்றி – கிளிநொச்சி)

வீரவேங்கை நீதிபாலன் (அழகிப்போடி உமாசுதன் – மட்டக்களப்பு)

வீரவேங்கை சுவர்ணன் (நல்லதம்பி சோதிலிங்கம் – யாழ்ப்பாணம்)

இரண்டாம் நாள் 19.07.1996 அன்று ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர்.


கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை (இராமலிங்கம் செல்வராசா – மன்னார்)

கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன் (வேதமணி) (உலகநாதன் ரமேஸ் – யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான் (அப்துல்லா) (சாமித்தம்பி புலேந்திரன் – அம்பாறை)

கடற்கரும்புலி மேஜர் பதுமன் (ஆனந்தமயில் பாலமுரளி – யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் சுடரொளி (செபமாலை இரத்தினமலர் – யாழ்ப்பாணம்)

லெப்.கேணல் சேரன் (கதிரவேல் ஜெயராஜ் – திருகோணமலை)

மேஜர் மகேந்திரன் (நாகராசா பொன்ராஜா – மட்டக்களப்பு)

மேஜர் வதனன் (பாலசிங்கம் விஸ்ணுவர்தன் – யாழ்ப்பாணம்)

மேஜர் மதுவன் (தீபன்) (திருச்செல்வம் விஜயவீரன் – யாழ்ப்பாணம்)

மேஜர் மாறன் (கணபதிப்பிள்ளை யோகராசா – திருகோணமலை)

மேஜர் செந்தூரன் (நேரியன்) (ஜோன்பிள்ளை கருணைநாதன் – யாழ்ப்பாணம்)

மேஜர் வளவன் (சாரட்னம் சிறீஸ்காந்தராஜா – கிளிநொச்சி)

மேஜர் புலிக்குட்டி (கரி) (ஆனந்தராஜா ஜெயமோகன் – வவுனியா)

கப்டன் மூர்த்தி (குமாரசாமி இராசரத்தினம் – மட்டக்களப்பு)

கப்டன் அருள்ராஜ் (திருமேனி பவளசிங்கம் – மட்டக்களப்பு)

கப்டன் காளி (இரத்தினம் ஜெகதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் கலைவாணண் (குழந்தைவேல் ரவேந்திரன் – மட்டக்களப்பு)

கப்டன் பெருமாள் (கௌதமன்) (அருளம்பலம் டிங்கராசா – யாழ்ப்பாணம்)

கப்டன் ஊரன் (கௌதமன்) (அடைக்கலம் இன்பசோதி – யாழ்ப்பாணம்)

கப்டன் ஆனந்தகுமார் (சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் – லுணுகல)

கப்டன் ஈழவன் (காராளசிங்கம் சசிகரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் கணேசன் (கந்தசாமி சந்திரமோகன் – திருகோணமலை)

கப்டன் மணியம் (செல்லத்துரை விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் செந்தூரா (முருகன் ஜோதிமலர் – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் யசோதனன் (ரஞ்சித்) (சண்முகம் வசந்தராஜா – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் சிவபாதன் (சத்தியராஜ்) (சுப்பிரமணியம் ஆனந்தன் – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் கலைஞானம் (சுப்பிரமணியம் கதிர்காமத்தம்பி – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் வேலவன் (கந்தையா ரதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கலைப்புயல் (நாகமணி குணசீலன் – வவுனியா)

லெப்டினன்ட் எழில்வாணன் (குழந்தைவேல் சிறீமுருகன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சந்திரிக்கா (கணபதிப்பிள்ளை மகேஸ்வரி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மங்களா (அழகேந்திரன் காந்தரூபி – வவுனியா)

லெப்டினன்ட் தண்மதி (செல்வத்துரை கோணேஸ்வரி – திருகோணமலை)

லெப்டினன்ட் கலீபன் (இராசநாகம் கிருஸ்ரியன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மெய்நம்பி (திருச்செல்வம் அமலதாஸ் – கிளிநொச்சி)

லெப்டினன்ட் ஆனந்தராஜ் (தம்பிப்பிள்ளை விஜயரத்தினம் – மட்டக்களப்பு)

லெப்டினன்ட் தமிழன்பன் (தம்பு சிறீஸ்கந்தராசா – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நாதன் (ஐயம்பிள்ளை நந்தகுமார் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தாமரைச்செல்வி (வேலு பரிமளம் – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் பொன்முடி (யோசப்மரியநாதன் சந்திரஉதயன் – மன்னார்)

லெப்டினன்ட் தில்லைநம்பி (இரத்தினம் பாஸ்கரன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வாணண் (மாணிக்கம் தயாளன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நிமலன் (யோகேஸ்வரன் நிருந்தன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஏகலைவன் (குமாரசாமி நிரஞ்சன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வேந்தன் (பரமசிவம் கிருஸானந்தசிவம் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பெருந்தேவன் (நவரத்தினம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பூவாணி (முத்துக்கறுப்பன் விஜயகுமாரி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சுபா (ஜெகநாதன் ஜெயந்தி – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் காதாம்பரி (விநாயகமூர்த்தி கவிதா – முல்லைத்தீவு)

லெப்டினன்ட் இளம்பிறை (தங்கராசா பாஸ்கரமோகன் – யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மதுமிதா (கணபதிப்பிள்ளை கலைவேனி – வவுனியா)

லெப்டினன்ட் வெற்றிமணி (சின்னத்தம்பி சசிகுமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் திலகன் (சுப்பையா வசந்தகுமார் – திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் சுதன் (இராமப்பிள்ளை உதயன் – திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் எழில்நிலவன் (சின்னத்துரை ஜோசேப் – திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் காந்தரூபன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை – திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் சாமந்தி (சீவரட்ணம் ஜெயந்தினி – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சுரேந்தினி (பராமனந்தன் ஜனார்த்தனி – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இசைத்தமிழ் (ஜெகநாதன் பிறேம்குமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் நாதன் (அங்கமுத்து சந்திரகுமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் செழியன் (கணபதி ரதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மெய்யப்பன் (மாணிக்கம் ரவிக்குமார் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கபிலன் (பாலச்சந்திரன் பிரசாத் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இளந்திரையன் (வீரகத்தி ஜேசுலின் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் செழியன் (பிரகலாதன் ரகுநாதன் – வவுனியா)

2ம் லெப்டினன்ட் காவியநாயகி (தர்மலிங்கம் சர்மினி – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் காஞ்சனாதேவி (சண்டிகா) (சின்னையா அனுசா – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சௌந்தன் (சின்னத்தம்பி சிவகுமார் – கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் புண்ணியராசா (கேதீஸ்) (நவமணியம் நேசன் – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் வரதராயன் (இளையவன் நிமலேந்திரன் – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் விவேகானந்தி (கந்தராணியம் மதிவதனி – முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் பொற்செல்வி (இராசதுரை கோமதி – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் விசித்திரன் (செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன் – யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருளியன் (அருட்செல்வன்) (அரசரட்னம் வர்ணராசா – திருகோணமலை)

வீரவேங்கை ஈழராணி (ஈழவதனி) (சின்னத்தம்பி கனகாம்பிகை – வவுனியா)

வீரவேங்கை நாகப்பன் (கந்தையா புண்ணியமூர்த்தி – மட்டக்களப்பு)

வீரவேங்கை நித்தியசீலன் (நடராசா அருமைநாயகம் – மட்டக்களப்பு)

வீரவேங்கை சிலம்பரசன் (நடராசா தவராசா – அம்பாறை)

வீரவேங்கை அருள்மாறன் (இராமரத்தினம் வனேஸ்வரன் – கிளிநொச்சி)

வீரவேங்கை நாகமைந்தன் (பத்தநாதன் ஜெயசீலன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை துளசிதரன் (தெய்வேந்திரம் சசிகரன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்வேங்கை (யோகரத்திணம் நகுலேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை செல்வந்தன் (நாகேந்திரன் காண்டீபன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மலையரசி (வேலாயுதம் தமிழ்ச்செல்வி – திருகோணமலை)

வீரவேங்கை மாலதி (இரத்தினசிங்கம் சுகந்தி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சஞ்சிகா (குமாரசாமி பிறேமலா – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இந்திரமலர் (கணேஸ் வசந்தகுமாரி – மாத்தளை)

வீரவேங்கை கஜேந்திரன் (சுந்தரலிங்கம் விக்னேஸ் – திருகோணமலை)

வீரவேங்கை அங்கதன் (தேவராசா விஜயகுமார் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஆதிரையன் (தியாகராசா யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இசைவாணன் (சின்னவேல் பத்மநாதன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுகுணன் (அண்ணாமலை சூரியகுமார் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சேரன் (தர்மலிங்கம் தயாளன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மித்திரன் (முத்துப்பிள்ளை உதயன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இராவணன் (கிருஸ்ணபிள்ளை சுரேஸ் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்வாணி (தம்பிராசா ஜெயரூபன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வாணன் (ரவி) (கந்தசாமி குகதாஸ் – கிளிநொச்சி)

வீரவேங்கை மித்திரன் (முத்துத்தம்பி உதயன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிரசாந்தன் (பசுபதி மனோகரன் – கிளிநொச்சி)

வீரவேங்கை கோகுலதாசன் (பொன்னுச்சாமி பாஸ்கரன் – வவுனியா)

வீரவேங்கை பவானி (வீரசிங்கம் பிறேமிளா – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கூர்வேலன் (சுப்பிரமணியம் லக்ஸ்மணன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்மாறன் (தர்மலிங்கம் சந்திரரட்ணம் – முல்லைத்தீவு)

வீரவேங்கை கமலன் (சதாசிவம் திருச்செல்வம் – கிளிநொச்சி)

வீரவேங்கை முத்துச்செல்வன் (செல்வராசா சிவகுமார் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பாரிவேல் (இளங்குமரன்) (தம்பு சதீஸ் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலாமோகன் (முருகன் ரமேஸ்குமார் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இனியவன் (கைலாசப்பிள்ளை கோகுலன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிறைசூடி (இராசரத்தினம் இராகவன் – வவுனியா)

வீரவேங்கை சபேசன் (செல்வராசா சதீசன் – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நிமாலினி (தர்மலிங்கம் சிவகௌரி – யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பரமேஸ்வரி (சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி – கிளிநொச்சி)

18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது.

இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.

இக்கடற்சமர், அலம்பிலிருந்து முன்னகர்ந்த படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல் உட்பட ஓயாத அலைகள் – 1 நடவடிக்கையில் 21.07.1996 நான்காம் நாள் அன்று இரண்டு கடற்கரும்புலிகள், உட்பட்ட 12 போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர்.

கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் – சங்கத்தானை, யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் – அக்கரைப்பற்று, அம்பாறை)

மேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் – கும்புறுப்பிட்டி, திருகோணமலை)

கப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா – குமுழமுனை, முல்லைத்தீவு)

கப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் – கரடியனாறு, மட்டக்களப்பு)

கப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் – தாளையடி, யாழ்ப்பாணம்)

கப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் – திருகோணமலை)

லெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி – சேந்தான்குளம், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா – மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி – அக்கரைப்பற்று , அம்பாறை)

வீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment