புற்றுநோயை குணப்படுத்துவதற்கு புதிய வகை மருந்து ஒன்றை கண்டு பிடித்துள்ளார் ஒர் ஈழத்தமிழன். Dr கோகுலரமணன்

0 0
Read Time:3 Minute, 7 Second

Osteosarcoma என்று அழைக்கப்படும் எலும்பில் வரும் புற்றுநோயில், புற்று நோயை உருவாக்கும் காலங்களில் Chemotherapy சிகிச்சை முறையால் அழிக்கப் படமுடியாத கலங்களை அழிப்பதற்கான புதிய மருந்தை Dr கோகுலரமணன் சுந்தரலிங்கம் கண்டு பிடித்து உள்ளார். அந்த ஆராட்சிக்கான அங்கீகாரம் University of Leicester ஆல் வழங்கப்பட்டு இருந்தது. இது ஒரு புதிய வகை மருந்து மிகவும் வீரியமாக Osteosarcoma கலங்களைக் கொல்லக் கூடியது.

பெரும்பாலான மருந்துகள் organic வகையைச் சார்ந்தவை அவை carbon, hydrogen மற்றும் oxygen அணுக்களால் பெரும் பாலும் ஆக்கப்பட்டவை. விஞ்ஞானிகள் தற்போது உலோக அணுக்களை உள்ளடக்கிய புதிய மருந்துகளை உருவாக்கி அதன்மூலம் புதிய முறையில் புற்று நோய்க் கலங்களைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்.

Dr சுந்தரலிங்கம் அண்மையில் Osteosarcoma என்று அழைக்கப்படும் எலும்பில் வரும் புற்றுநோயில், புற்று நோயை உருவாக்கும் காலங்களில் Chemotherapy சிகிச்சை முறையால் அழிக்கப் படமுடியாத கலங்களை அழிப்பதற்கான புதிய உலோகம் அணுக்களை உள்ளடக்கிய மருந்தைக் கண்டு பிடித்து உள்ளார்.
இதற்குரிய ஆரம்பக்கட்ட பரிசோதனையைத் தனது ஆராட்சி கூடத்தில் மருந்தைத் தயாரித்து மேற்கொண்டு இருந்தார். இது methotrexate மருந்தால் கொல்லமுடியாத Osteosarcoma கலங்களை 400 மடங்கு தீவிரமாகக் கொல்வதுடன் Cancer ஆல் பாதிப்படையாத மற்ற கலங்களை உதரணத்திற்க்கு நுரையீரல், மார்பகம், தோல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றை மிகவும் குறைந்த அளவே தாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆராட்சி இன்னும் பல கட்டங்களை நோக்கி நகர இருக்கிறது. அடுத்தகட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்களிற்கு இந்தமருந்து செலுத்தி அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.

அது வெற்றி அளிக்கும் பட்சத்தில் அவர் கண்டு பிடித்த அந்தப் புதிய வகை மருந்து Osteosarcoma கலங்களைக் கொல்லும் திறன் உள்ள மருந்தாக அடையாளப்படுத்தப்படும்.

இவர் ஏற்கனவே இளம் விஞ்ஞானிக்கான வெற்றியாளராக 2020இல் Inorganic Biochemistry Discussion Group என்ற அமைப்பால் வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.bcrt.org.uk/news/2021/july/research-grant-awarded-which-aims-to-develop-new-bone-seeking-metal-based-drugs-to-kill-chemotherapy-resistant-osteosarcoma-cells

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment