யாழில் கொரோனா தொற்றால் TRO நாதன் என அழைக்கப்பட்ட சொக்கநாதன் யோகநாதன் உயிரிழப்பு

0 0
Read Time:5 Minute, 33 Second

திரு சொக்கநாதன் யோகநாதன் அவர்கள் நம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார். இவர் TRO நிறுவனத்தின் பொறுப்பாளரும் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றியவர்.

அன்னார் இன்று அதிகாலை(5/7/21) 3.30 மணியளவில் , யாழ் போதனா வைத்தியசாலையில் கொரானா தாக்கத்தின் காரணமாக இறைபதம் அடைந்தார் என்ற செய்தி நம்
அனைவரையும் அதிர்ச்சிக்கும் மனவேதனைக்குமுள்ளாக்கியது.

Center for Child development (CFCD) இதுவே வடமாணத்தின் முதன்மையான தொண்டு நிறுவனமாகும் . இந்நிறுவனமானது UNDP, USAID(IDEA), USAID(SCORE) War Affected People’s Association (WAPA), Belgium, TECH Outreach, Malaysia, Child First-UK, Ceylon Student’s Education Fund (CSEF), Australia இது போன்ற இன்னும் சில நன்கொடை அமைப்புகளின் செயல்திட்டங்களையும் தன்னகப்படுத்தி செயற்படுத்தியுள்ளது.

அமரர் யோகநாதன் அவர்கள் CFCD ன் முதுகெலும்பாகவும் அதை தாங்கி நிலைநிறுத்தும் தூணாகவும் செயற்பட்டவர்.

அவர் பாதிக்கப்பட்ட நம் தமிழ் சமூகத்தின் மேல் வைத்திருந்த உண்மையான அக்கறையுடன் நேர்மையான முறையில் விடாமுயற்சியுடன் செயற்பட்டவர்.

அன்னாரின் தொடர்ச்சியாக ஏனைய தொண்டுநிறுவனங்
களுடன் பேணிவந்த தொடர்புகளாலும், அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட உதவிகளாலும் போருக்கு முன்னும் பின்னும் பாதிக்கப்பட்ட மக்களினுடைய வாழ்க்கைதரத்தை மேம்படுத்த அயராது உழைத்தவர்.

வடமாகாணத்தில் CFCD ஐ ஒரு சிறந்த முன்மாதிரியான தொண்டு நிறுவனமாக நடத்துவற்கு அர்பணிப்புடனும் உண்மையாகவும் எதுவித எதிர்பார்ப்புமின்றி , அயராது தன்னலமற்றுச் செயற்பட்டவர்.

திரு யோகநாதன் அவர்கள் 1990ம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச சார்பற்ற தொண்டுநிறுவனங்களின் செயற்பாட்டுக்குழுவை உருவாக்குவதில் முன்னின்று உழைத்து , இடம்பெயர்ந்துவாழ்ந்த மக்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்தவர்.

எம்மக்களின்வாழ்வாதாரம் மேம்பட எல்லோரும் இணைந்து செயற்படு வேண்மென்பதையே அவர் தனது இறுதி விருப்பமாக வைத்தியசாலையிலிருந்து கேட்டுக்கொண்டார்.
வாழ்வாதாரத்தில் கீழ்தங்கியவர்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கும் உதவுவதே அவரின் முக்கிய விருப்பு என்பதை இது காட்டுகின்றது. இவரது பணியை ஏற்று தொடர்ந்து முன்னெடுப்பதற்கு துணைபுரியவதே நமது கடமையாகும்.

தன்னலமற்று செயற்பட்ட நாதன்அண்ணா இன்று நம்முடன் இல்லை என்பதை ஏற்க முடியாதுள்ளது . அவர் மனைவி மகள் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரித்து அவரது ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்.

நாதன் அண்ணாவின் இறுதி ஊர்வலம் இன்று

Mr.Sockanathan Yoganathan, Executive Director, Center for Child Development (CFCD)
It is with deep regret that we inform the untimely demise of our Executive Director Mr. Sockanathan Yoganathan today (5 July’21) in the early hours of 3.30 at the Jaffna Teaching Hospital. He was unfortunately a victim of COVID 19.
Center for Child development is a leading National NGO in the North which is implementing projects for UNDP, USAID(IDEA), USAID(SCORE) War Affected People’s Association (WAPA), Belgium, TECH Outreach, Malaysia, Child First-UK, Ceylon Student’s Education Fund (CSEF), Australia and a few other donors. The backbone of CFCD and the main pillar of the organization had been Mr. Yoganathan who has been known for his genuine interest for the affected communities. He constantly maintains contacts with appropriate donors to seek assistance and improve the living conditions of the affected and marginalized people during and after the war.
He has been the sole character to make CFCD as a model in the North through his dedication, hard work, sincerity and honesty. The important aspect is that for all this he has never accepted anything in return but worked throughout on an honorary basis.
Mr. Yoganathan is one who was instrumental in organizing and formulating the Council of Non-Governmental Organizations (CNGOs) of Jaffna District in 1990 which rendered maximum service to the displaced population at that time.
The last words that Mr. Yoganathan uttered while at the hospital are “please work together for the betterment of the people”. Thus, we can imagine his high hopes to assist the affected and under privileged population at all times. This has to be the primary task of all those at CFCD now and in future to “work for the people”.
We wish to extend our deepest sympathies to his beloved wife, daughter and the rest of the close family members at this time of great grief. Let us all pray together for his soul to rest in peace!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment