ஆழ்கடல் விநியோக படகுச் சாரதி – லெப்.கேணல்.பிரசாந்தன்

1 0
Read Time:6 Minute, 52 Second

1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சியையும் பெற்று வெளியேறிய காலப்பகுதியில் கடற்புலிகளின் விசேட தரைத்தாக்குதலணி ஒன்று மாவீரான லெப் கேணல் டேவிட்/ முகுந்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டபோது அவ்வணிக்குள் உள்வாங்கப்பட்ட பிரசாந்தன் .

அங்கு தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றான். இப் படையணி ஒரு பெரும் தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சிக்காக மற்ற தரைத்தாக்குதலணிகளுடன் இணைந்து அப்பயிற்சிகளில் பங்குபற்றியது.பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .இவர்கள் எடுத்த பயிற்சிக்கான சமரான பூநகரிக் கூட்டுத்தளம் மீதான தாக்குதலில் பங்குபற்றி தனது முதலாவது தாக்குதலிலேயே தனக்கான ஒரிடத்தை பதித்தான்.அதனைத் தொடர்ந்து .1994ம் ஆண்டு ஆரம்பத்தில் இப்படையணியில் இருந்த போராளிகளும் வேறு பலபோராளிகளும் உள்வாங்கப்பட்டு தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கடற்புலிகளின் கடற்தாக்குதலணியாக (கிளாலிக் கடற்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாள்ஸ் அவர்களின் நினைவாக) சாள்ஸ் படையணியாக உருவாக்கம் பெற்றது. இப்படையணியில் உள்ளவர்களுக்கு அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு கடற்சமர் மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கும் ஏற்றவாறு வளர்த்தெடுக்கப்பட்டனர்.இப்பயிற்சிகளில் சிறந்து விளங்கியவன் குறிப்பாக ஐம்பது கலிபர் துப்பாக்கியின் சிறந்த சூட்டாளனாக அங்கிருந்த போராளிகளுள் சிறந்து விளங்கிய பிரசாந். அக்காலப் பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான கடற்சமரில் முன்னணிஆயுதமாக தனது ஐம்பது கலிபர் துப்பாக்கியுடன் செனறு வந்தவன் .ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் படகுச் சாரதியாகவும் சென்று வந்தான்.சிலகாலம் கப்பலிலும் கடமையாற்றிய பிரசாந் கடலனுபவங்களையும் எனைய பல அனுபவங்களையும்.பெற்றுத் திரும்பியவன் இங்கு வந்து முல்லைத்தீவுச் சமரில் கைப்பற்றப்பட்ட ஆடலறிப் பீரங்கிகளை சக போராளிகளுடன் இணைந்து பாதுகாப்பாக நகர்த்துவதில் முக்கிய பங்காற்றினான். அதன் பின் சாள்ஸ் படையணியின் துணைப் பொறுப்பாளராக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்படுகிறான்.அப் பணிகளில் மிகவும் திறமையாகக் செயற்பட்ட பிரசாந் தொடர்ந்து சிறப்புத் தளபதி அவரகளின் பணிப்புரைக்கமைவாக விமானத்தாக்குதலால் விநியோகம் பாதிக்கப்படாமலிருக்க சாளையில் பிறிதொரு ஒடுபாதை (படகுகள் இறக்கி ஏற்றுவதற்க்கு )அமைக்கச் சொன்னதற்கமைவாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அமைத்தான் . என்ன வேலையாகிலும் சிறப்பாகச் செய்வதிலும் பிரசாந்திற்க்கு நிகர் பிரசாந்தே தொடர்ந்து புதிய கனரக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவ் ஆயுதங்கள் வன்னிக்குக் கொண்டு வருவதிலும் பெரும் பங்காற்றியவன் .அக் கனரக ஆயதங்கள் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டபோது அவ் ஆயுதங்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டபோது பிரசாந்தும் ஒருவனாகச் சென்று பயிற்சியில் சிறந்து விளங்கி அக் கனரக ஆயுதத்தின் சிறந்த சூட்டாளனாகவும் அவ் ஆயுதத்தின் பொறுப்பாளனாகவும் பயிற்சி முடித்து வெளியே வந்தான்.அக்காலப் பகுதியில் கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாத கடற்படையினர் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர்.இது சம்பந்தமாக சிறப்புத் தளபதி சூசை அவர்கள் போராளிகளுடன் கலந்தாலோசித்து கொண்டிருந்தபொழுது நான் எனது ஆயுதத்தால் அடித்து நிற்பாட்டுவேன் என்று போராளிகளுக்கு நம்பிக்கையூட்டினான். 25.05.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் விநியோகப் பாதுகாப்பு நடவடிக்கையின்போது கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது தனது நீண்ட கடற்சண்டை அனுபவத்தின் மூலமும் மதிநுட்பமாகவும் சக போராளிகளின் துணையுடனும் தனது கனரக ஆயுதத்தால் சிறிலங்காக் கடற்படையின் அதிதொழில் நுட்பம் கூடிய அதிவேக டோறாப் படகை அடித்து சொன்னதைப் போலவே நிற்பாட்டி வீரச்சாவடைகிறான்.

பல போராளிகளை ஆயுதத்துறையில் தன்னைப்போலவே வளர்த்த ஒருவீரன் பெரும் நெருக்கடிக்குள்ளும் போராளிகளை கட்டுப்பாட்டோடு வைத்திருந்த பொறுப்பாளன். இப்படியாக பிரசாந்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இவனது பெயரில் உற்பத்தி செய்யப்பட்ட படகு ஆழ்கடல் சண்டைப் படகுகளின் கட்டளைப் படகாக செயற்பட்டதுடன் இவனால் வளர்க்கப்பட்ட போராளிகள் அப்படகின் முன்னனி ஆயுதத்தின் சூடுனராகவும் கட்டளை அதிகாரிகளாகவும் செயற்பட்டனர்.

எழுத்துருவாக்கம்…சு.குணா..

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment