அவுஸ்ரேலியாவில்.தமிழின அழிப்புக்கு நீதி கோரி.கவனயீர்ப்பு.காணொளி.

முள்ளிவாய்க்கால் வலி சுமந்த நாள்களை நினைவில் தாங்கி, தமிழின அழிப்புக்கு நீதி கோரி.அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு.காணொளி.

மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – வீடுகளில் அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடாவருடம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலே இடம்பெறுவது வழக்கம்.  இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது எமது உரிமை சார்ந்த, எமது விடுதலை சார்ந்த,  எமது வாழ்வியல் சார்ந்த ஒரு நிகழ்வாக இருக்கிறது. கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட, அழிக்கப்பட்ட எமது தமிழினத்தின் துன்பியல் அனுபவங்களை நினைவு கூருவதாக அமைகின்ற ஒருநிகழ்வுதான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது. 

மேலும்

மே 18 – தமிழ் இனப்படுகொலையின் நினைவு நாள்.யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

இவ்வாண்டு மே 18 தமிழினப்படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவின் நினைவு நாளாகும். தமிழ் மக்களை கொடூரமாக அழித்ததோடல்லாமல் எமது நினைவுரிமையையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவுகூரலை நாங்கள் எதிர் கொள்கின்றோம். எமது பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீளக்கட்டியமைக்க வழிவிட்டது. இப்போது வருடாவருடம் எமது மக்கள் பொங்கும் உணர்வுகளோடு வந்து அழுது ஆறிச்செல்லும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் தூபியை மிலேச்சத்தனமாக அழித்ததோடு நினைவுக்கல்லையும் வஞ்சகமாக கவர்ந்து சென்று அராஜகம் புரிந்துள்ளது.

மேலும்

தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினை தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம்

தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டே வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக 2006ம் ஆண்டு ஆரம்பித்த ஆக்கிரமிப்பு 2009ம் ஆண்டு அதியுச்சம் பெற்றது. இந்த இறுதியுத்தத்தின் போது 1,47,679 பொது மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை மறைந்த ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் புள்ளிவிபரங்கள் மூலம் ஆதர பூர்வமாக நிறுவினார்.

மேலும்

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

நாள் 03 (16.05.2021)ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும்இ அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும். தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் –

மேலும்

பிரான்சு சேர்ஜி பொந்துவாஸ் நகரில் இடம்பெற்ற மே18 கவனயீர்ப்பு!

பிரான்சு சேர்ஜி பொந்துவாஸ் நகரில் 17.05.2021 திங்கட்கிழமை பி.பகல் மே 18 தமிழின அழிப்புக் கவனயீர்ப்புப் போராட்டம். உள்நாட்டு அமைச்சகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

மேலும்

பிரான்சு நுவாசிலுசெக் நகரில் மே 18 கவனயீர்ப்பு நினைவேந்தல்!

(17.05.2021) திங்கட்கிழமை பிரான்சில் நுவாசிலுசெக் என்னும் இடத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.

மேலும்

கொட்டும் மழையிலும் பிரான்சு இவிறி சூ சென் நகரில் மே18 கவனயீர்ப்பு!

இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் இவ்றி சூ சென் என்னும் இடத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும்