ஏறாவூர் செங்கலடி. தமிழ் உணர்வாளர் மோகன் கைது.

0 0
Read Time:2 Minute, 35 Second

செல்லம் திரையரங்க உரிமையாளரரும், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2019 ஆண்டு முதல் கணபதிப்பிள்ளை மோகன் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்ததில் பெரும்பாலான பதிவுகள் மற்றும் பகிர்வுகள் வெளிநாட்டில் இருந்து பகிர்வு செய்தவர்களின் பதிவுகள் என அதிகமானவை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவையாக இருந்தமையால் அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பான அறிவிக்கப்பட்டுள்ள நிலைமையில், இந்த சந்தேகநபர் இணையத்தளம் ஊடாக அந்த அமைப்பு தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏறாவூர் – செங்கலடி பிரதேசத்தில் வசித்து வந்த 56 வயதான விக்டர் மோகன் என்ற நவநீதன் பிள்ளை மோகன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து கையடக்க தொலைபேசி, எபல் ஐ பேட் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நபருக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் சுமார் 14 வழக்குகள் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment